Showing posts with label health fittness. Show all posts
Showing posts with label health fittness. Show all posts

Saturday, 29 March 2025

காய்கறி பயிர்களை நடவு செய்ய

 ஒவ்வொரு மாதமும நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம் என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளலாமா?


கத்தரி 

நடவு செய்யும் மாதம் - மே, ஜுன் 

விதையளவு ஒரு ஏக்கருக்கு 140-160 கிராம் 

இடைவெளி – 1அடி

அறுவடைசெய்யும் நாள் - 150 முதல் 160 நாட்கள்



தக்காளி 

நடவு செய்யும் மாதம் - மே, ஜுன் நவம்பர் - ஜனவரி – மார்ச்

விதையளவு ஒரு ஏக்கருக்கு 140-160 கிராம் 

இடைவெளி – 1 அடி

அறுவடைசெய்யும் நாள் - 100 முதல் 135 நாட்கள்



புடலை

நடவு செய்யும் மாதம் ஜு{ன், ஜுலை- டிசம்;பர் - ஜனவரி 

விதையளவு ஒரு ஏக்கருக்கு 600 கிராம் 

இடைவெளி – இடைவெளி பாருக்குபார் 1.5அடி செடிக்கு செடி 1அடி 

அறுவடைசெய்யும் நாள் - 135-145 நாட்கள்



பீர்க்கை

நடவு செய்யும் மாதம் ஜு{ன், ஜுலை- டிசம்;பர் - ஜனவரி 

விதையளவு ஒரு ஏக்கருக்கு 600 கிராம் 

இடைவெளி பாருக்குபார் 1.5அடி செடிக்கு செடி 1அடி 

அறுவடைசெய்யும் நாள் - 125- நாட்கள்



பாகல்

நடவு செய்யும் மாதம் ஜு{லை- ஆகஸ்ட் , ஜனவரி - பிப்ரவரி

விதையளவு ஒரு ஏக்கருக்கு 1கிலோ 

இடைவெளி வரிவைக்கு வரிசை 8 அடி செடிக்கு செடி 1 அடி

அறுவடைசெய்யும் நாள் - 150- நாட்கள்



வெண்டை

நடவு செய்யும் மாதம் மார்ச் - ஜுன்; , ஜீன் - செப்டம்பர்

விதையளவு ஒரு ஏக்கருக்கு 2 கிலோ

இடைவெளி பாருக்குபார் 1.5அடி செடிக்கு செடி 1அடி 

அறுவடைசெய்யும் நாள் 45 - 90 நாட்கள்



மிளகாய்

நடவு செய்யும் மாதம் ஜு{ன், ஜுலை- டிசம்;பர் - ஜனவரி 

விதையளவு ஒரு ஏக்கருக்கு 400 கிராம் 

இடைவெளி –30 செ.மீ

அறுவடைசெய்யும் நாள் - 200 நாட்கள்



செடிமுருங்கை

நடவு செய்யும் மாதம் அக்டோபர்- நவம்பர், ஜு{ன், ஜுலை 

விதையளவு ஒரு ஏக்கருக்கு 200 கிராம் 

இடைவெளி பாருக்குபார் 8அடி செடிக்கு செடி 2அடி 

அறுவடைசெய்யும் நாள் - 200 நாட்கள்



வெங்காயம்

ரகம் கோ 4

நடவு செய்யும் மாதம் வைகாசி, புரட்டாசி, மார்கழி 

விதையளவு ஒரு ஏக்கருக்கு 500 கிராம் 

இடைவெளி –15 செ.மீ

அறுவடைசெய்யும் நாள் - 200 நாட்கள்

Sunday, 5 January 2025

இதயத்தில் அடைப்பு உள்ளதா ?

 இதயத்தில் அடைப்பு உள்ளதா ?

இதோ உடனே செல்லுங்கள் திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள பன்னியோடு டாக்டர்.சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இலவசமாக வைத்தியம் செய்கிறார்.

நாடித் துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார்.

வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்ககளிலும் வைத்தியம்.

இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய் ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்த குழாய் அடைப்பு

மாறுகிறது.

பணம் கொடுக்க வசதி இல்லாதவருக்கு இலவசம் .

தேவையுள்ளவர் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர் .

மிக மிக முக்கியமான தகவல் என்பதால் இதனை அதிகமான அளவில் பகிர்ந்து

உங்களுடைய நண்பர்களுக்கு இத்தகைய தகவல் சென்று சேர உதவுங்கள்.

இதனால் யாரவது ஒருவர் பயன் பெற்றாலும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே.....

Sukumaran Vaidyans G A Pharmacy &

Nursing Home. Neyyattinkara P.O.,

Thiruvananthapuram-695572, Kerala State.

Sunday, 26 December 2021

உடல் மற்றும் முடியை பற்றி சில அழகு குறிப்புகுகள்

  

உடல் மற்றும் முடியை பற்றி சில அழகு குறிப்புகுகள் :







1:  எண்ணெய்,  முடி வளர்வதற்கு உதவுவதில்லை, முடியை படிய  வைப்பதற்கு மட்டுமே உதவுகிறது. இதை பயன்படுத்துவதால் பிரச்சனை இல்லை. அனால் கண்ட கண்ட வேர்கள், கீரைகள் கலந்த எண்ணெய்யை பயன்படுத்த கூடாது. போடுகினால் பாதிக்கப்பட்டவர்கள், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தக்கூடாது, ஏனென்றால் அது உடம்பிற்கு சூடு நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

2. கண்டீஷனருடன் எந்த ஷாம்புவையும் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதால் முடி உதிர்வதில்லை. ஆனால் ஒரே ஷாம்புவாக இருக்க வேண்டும். ஷாம்பு தலையை மட்டும் சுத்தம் பண்ணவே தவிர அதில் கலக்கப்படும் புரதம், வைட்டமின் முடிக்கு இல்லை அது வளரவோ நமக்கு எந்த ஒரு பயனும்தாராது.

3. தலை முடிக்கு நமக்கு ஒத்துக்கொள்ளும் எந்த வகை ஜெல்லும் பயன்படுத்தலாம். பிரச்சனைகள் வருவதில்லை.

4. அமோனியா இல்லாத பி.பி.டி. இல்லாத அல்லது குறைந்த அளவில் உள்ள அதாவது (0.5%) முடி சாயத்தை பயன்படுத்தவேண்டும்.அப்படி பயன்படுத்துவதால் முடி நன்றாக இருக்கும்.     

5. வைட்டமின், சி. மற்றும் புரதச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை சாப்பிடவேண்டும். உதாரணமாக, (எலுமிச்சை,ஆரஞ்சு,பேரிச்சை,வெள்ளரி,பருப்புவகைகள்,முட்டை,பால்,போன்றவை ஆகும்.)

6. மஞ்சள், வெப்பேலை மற்றும் பலவித கை மருந்துகள் கலந்த எந்த சோப்பு வகைகளையும் தவிர்ப்பது நல்லது. நீங்கள் பயன்படுத்தும் சோப்பினால் உடலில் அரிப்போ, தடிப்போ,வெள்ளைப்படையோ,வரவில்லையென்றால் அதே சோப்பை பயன்படுத்தலாம். நிறைய நொரை தருகிறது, வாசனை தருகிறது, என்று உபயோகப்படுத்தினால் உடம்பிற்கு மட்டும் இல்லை தலைமுடிக்கும் பாதிப்பு. நம் தோலுக்கு ஏற்றாற்போல் டி.பி.எஸ்.அளவு குறைந்த சோப்புகள் பயன்படுத்தவும்.

7. வெயிலில் போகும்போது பவுடர் பயன்படுத்துவது தவறில்லை.ஏனென்றால் பவுடர் நம் மேனியை சூரிய கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.

8. அழகு சாதனம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு. ஆல்கஹால் மற்றும் எண்ணெய் இல்லாத தண்ணீர் கலவை உள்ள களிம்பை பயன்படுத்தலாம்.

9. தண்ணீர் கலவை உள்ள (Water Based) சன்ஸ்க்ரீன் (SPF less than 15)  3 மணி நேரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தவேண்டும்.

10. மஞ்சள் பயன்படுத்தாதீர்கள்.அப்படியே பயன்படுத்தினால் வெயிலில் வெளியே செல்ல வேண்டாம்.

11. நல்லெண்ணெய் குளியல் வாரம் ஒருமுறை தேய்த்து குளித்தால் தோலுக்கு நல்லது. தலையில் பொடுகு வராமல் நம்மை பாதுகாக்கும்.

    Thursday, 16 December 2021

    தேனின் பயன்கள்

     

    தேனின் பயன்கள் 




    முன்னுரை 




    தேன் இறைவன் படைப்பிலே ஒரு மிகசிறந்த படைப்பு மனிதன். வாழ்வில் இன்றி அமையாத ஒன்று இயற்கையின் ஒரு மிக பெரிய பங்கு தேனீ. தேனீயிடம் இருந்து கிடைக்கக்கூடிய ஒரு அமிர்தம் தேன் இப்படி பல வகைகளாக சொல்லிக்கொண்டே போகலாம். தேனீயை மற்றும் தேன் பற்றி தேனீ பூக்களில் இருந்துதான் திரவத்தை கொண்டு தருகிறது என்றோ சொல்லி இருந்தாலும் அல்லது அதனுடைய கழிவுதான் தேன் என்று சொல்லி இருந்தாலோ அதை ஆராய்வதை ஒரு சாதாரண மனிதனுக்கு அவசியம் இல்லாத ஒன்று. ஆனால் உணவில் நீங்கள் தினமும் உங்கள் உணவில் மூலமாகவோ இல்லை நேரடியாகவோ நீங்கள் தேனை எடுத்து கொள்வது. நீங்கள் மறைமுகமாக உங்கள் உடம்புக்கு நல்லது மேற்கொள்கிறீர்கள். மேலும் தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, நுண்ணுயிர்களை (கிருமிகளை) வளர விடுவது இல்லை.நாவல், வேம்பு, முருங்கை, மா, தும்பை, பூர்க்கு, புளியம், துளசி, பூண்டு மற்றும் வெங்காரமது போன்ற 300-க்கும் அதிகமான தேன் வகைகள் உள்ளன. மிக சிறந்த தேனில் 16 முதல் 18 சதவிகிதமே நீர் இருக்கும்.தேனின்  நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து,தேனின் நிறம் மஞ்சள் நிறமுடையதாய் இருக்க வேண்டும் . வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும்.


     

    குறிப்பு 





    குறிப்பு :உணவின் பழக்க வழக்கம் என்பது மனதை சார்ந்தது .மனதில் ஒரு பிம்பம் ஒன்று வைத்து கொண்டு எதையும் உட்கொள்ளாதீர்கள். அது அமிர்தம் இல்லை விஷம்தான்.

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. என்பது அளவை பொறுத்தது மற்றும் இல்லை மனதை பொருத்தும் கூடத்தான்.

    உணவு உண்ணும் நேரம் மனதும் செயலும் உணவை நோக்கி இருக்கவேண்டும். அப்போதுதான் உங்களுடைய உணவு செரிமானம் ஆகும்



    தேனின் பயன்கள்  :


    1. செரிப்புத் தன்மையை உண்டாக்கவும் , மலச்சிக்கலை போக்கவும் செய்கிறது
    2.தேனுடன் இஞ்சி, பேரிச்சம்பழத்தையும் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்
    3.தேனும், சூடான வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும்.
    4.தேனுடன் , முட்டை,பால் கலந்து சாப்பிட்டு வர  ஆஸ்துமா நோயில் இருந்து தப்பலாம்
    5.குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தி வர  கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு எப்போதும் ஒரே போன்று கிடைக்கும்.
    6.தேன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்: தேன், ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
    7.இது ரத்தம் உறைதலை தடுத்து, மாரடைப்பு வராமல் தடுக்கும் திறன் கொண்டது. .
    8.தேன் பச்சை தண்ணீரில் இரவில்  கலந்து குடித்து வர உடல் பருமன் கூடும்
    9.மிகவும் அவசியமான ஒன்று அது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதும் மட்டும் இல்லாமல் புற்றுநோயினை தடுக்கும் சக்தி பெற்றது
    10.தேன் ரத்தத்தில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது
    11. தேனை வெந்நீரில் இரண்டு டி ஸ்பூன் கலந்து குடித்து வர இருமல் சரியாகும்  
    12.தேனை சூடு படுத்தி சாப்பிடக்கூடாது .
    13.தேனை நெய், எண்ணெய் போன்ற உணவுடன் உடன் சம அளவு சேர்த்துச் சாப்பிடக் கூடாது.
    14.ரோஜாப்பூ, கல்கண்டு, தேன் கலந்து சாப்பிட்டால், உடல் வெப்பம் தணியும்.
    15.பேரீத்தம்பழம் மற்றும் தேன் கலந்து நன்றாக ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்
    16.ரோஜாப்புகுல்கந்து என்ற பொருள் கடையில் விக்கிற பொருள் குழந்தை இல்லாத தம்பதியர்கள் உண்பார்கள் அதிலும் தேன் உள்ளது
    17.பிறந்த குழந்தைகளுக்குத் அந்த குழந்தை நன்றாக நடக்க வருகிற வரை தேன் கொடுக்கக் கூடாது.
    18.சர்க்கரை நோயாளிகள் மட்டும் இல்லை எல்லோரும் அளவுடன் சாப்பிடுங்கள். தேன் அதிக அளவு எடுத்துக்கொள்ளக் கூடாது.
    19.ஏதேனும் பழங்களுடன்  தேன் கலந்து இரவு நேரம் சாப்பிட்டு வர, தாம்பத்தியத்திற்கு நல்லது.
    20.அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களின் தேன் சேர்க்கப்பட்டு உள்ளது. தேன் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்வதால் இது சிறந்த மாய்ஸ்சுரைசராக உள்ளது. தேனை தினமும் உணவில் பயன்படுத்தினால் உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். 


        Saturday, 11 December 2021

        அகத்திகீரையின் பயன்பாடு

         

        அகத்திக்கீரை



        குறிப்பு 






        அகத்திகீரை என்னும் சிறுமரத்தை சேர்ந்தது  குறிப்பாக தமிழ்நாடு உட்பட தென்னிந்திய சமையலில் அகத்திக்கீரை அதிகமாக பயன்படுகிறது 
        அகத்திக் கீரையில்  புரதமும்,கொழுப்பும், தாது உப்புகளும் இருக்கிறது 
        மேலும் அகத்திக்கீரையில் மாவுச் சத்து, இரும்புச் சத்து,  ஆகியவையும் உள்ளன.
        அகத்திக்கீரையில் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன. 
        அகத்திக்கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும். 
        இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ அதிகளவு உள்ளது. ...
        கண்களின் பார்வை திறனுக்கு தேவையான வைட்டமின் 'ஏ' சத்தும் இதில் மிகுதியாக உள்ளது.

        அகத்திக்கீரை  இரண்டு வகை கொண்டது ஒன்று வெள்ளை நிற பூவும் இன்னொன்று சிவப்பு நிறப்பூவும் இவ்விரண்டின் பூவும் மருந்தாக பயன்படுகிறது 
        அகத்திக்கீரை சமைத்து சாப்பிட்டாலே பயன்தரக்கூடிய ஒன்று ஆகும் ஜீரணம், பித்தம் தொடர்புடைதும்,உடல்சூடு, மலசிக்கல்,கண்ணனுக்கு குளிர்ச்சி கொண்டது ஆகும் 
        அகத்திக்கீரை மருந்து தரக்கூடிய பயனை முறிக்க கூடியது மருந்துகள் உண்ணும்போது குறிப்பாக சித்த மருந்து உண்பவர்கள் அகத்திக்கீரை தவிர்ப்பது நல்லது இந்த கீரை தினமும் எடுத்துக்கொள்வதும் தவறாக விளைவை கொள்ளும் மருந்தாக பயன்படும் இந்த கீரை நீங்கள் தினமும் எடுத்துக்கொண்டால் எதிர்வினை அதாவது அலர்ஜி வரை கொண்டு போய்விடும்  
        அகத்திக்கீரை மற்றும் கீரை வகைகள் பொதுவாக இரும்புசத்து கொண்டது கீரை வகைகள் சாப்பிட்ட முடித்தவுடன் தண்ணீர் அருந்துவதும் வயிறுக்கு பாதிப்பு மிகவும் கடினம் இரவில் கீரையை தவிர்த்துக்கொள்ளுங்கள் அகத்திக்கீரையுடன் கோழி சம்பந்தமான உணவுகளை தவிர்த்துக்கொள்ளுங்கள் இப்போது வரும் கோழி செயற்கை வளர்ப்பு முறைகொண்டது  







        அகத்திக்கீரை பயன்கள் :


        • 1.பால் சுரக்காத பெண்கள் இதை சாப்பிட்டு வந்தால் பால் சுரக்கும் 
        • 2.பெண்கள் இதை சாப்பிட்டு வந்தால் பால் சுரக்க தேவையான சத்து எலும்பில் இருந்து பகிர்வதால் எலும்பு சம்பந்தமான நோய் வராமலும் பாதுகாக்கிறது 
        • 3.கால்சியம் தேவையான பற்களுக்கும் இது பயன்படுகிறது 
        • 4.அல்சர்,அரிப்பு, வயிறுபுண், தோல் சம்பந்தமான ,நோய்கள் போன்றவற்றிலிருந்து அகத்திகீரை பயன் தருகிறது 
        • 5.சிறுநீர் கல் கரைக்கும் தன்மை கொண்டது 
        • 6.வயறு சம்பந்தமான நோய் வாயு கோளாறு இருப்பவர்கள் இதை சாப்பிட்டு வர வயறு சம்பந்தமான நோய்கள் குணமாகும் 
        • 7.உயர்ரத்தம் கொண்டவர்கள் வாரம் இருமுறையாவது எடுத்து கொள்ளலாம் 



        பயன்பாட்டின் விரிவு : :


        1. அகத்திக்கீரையின் தாயகம் இந்தியாதான். அகத்தி கீரை உடலில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றி குடலை நன்கு சுத்தம் செய்யும் இதனால் மலச்சிக்கல் பிரச்சனையை முற்றிலும் அகலும்.
        2. அகத்திக்கீரையை கசப்பு சுவையும் துவர்ப்பு சுவையும் கொண்டது. இதனை பொறியல் செய்தும் கூட்டு செய்தும் சாப்பிடலாம்.
        3. இதன் கசப்பு சுவை தெரியாமல் இருக்க துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்புடன் தேங்காய் துருவலும் சேர்த்து சமைக்கலாம்.
        4. அகத்திக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் ரத்த சோகையை குணமாக்கும். தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
        5. நெஞ்சு சளி, தோல்நோய் போன்றவைகளுக்கு அகத்திக்கீரை நல்ல பலனை தரும்.
        6. ஒரு டம்ளர் மோரில் ஒரு தேக்கரண்டி அகத்திக்கீரை கலந்து அதிகாலையில் குடித்து வந்தால் பித்தம் குணமாகும்.
        7. வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்கள் அகத்திக்கீரையுடன் தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட்டுவந்தால் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
        8. குழந்தை பிறந்ததும் உடல் பருமன் ஆகாமல் இருக்க வாரத்திற்கு இரண்டு வேளை பாலூட்டும் பெண்கள் அகத்திக் கீரையை உணவில் சேர்த்து வந்தால் உடல் பருமன் ஆகாமல் இருக்கும்.
        9. அகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
        10. உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் குறைந்தது வாரத்திற்கு ஒருமுறையாவது அகத்தி கீரை எடுத்துக் கொள்வது நல்லது.
        11. அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். கண்கள் குளிர்ச்சியாகும். நீராடைப்பு, பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர் தடையில்லாமல் போகும்.
        12. அகத்திக்கீரையை வெயிலில் காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் நெஞ்சுவலி குணமாகும்.
        13. அகத்திக்கீரையுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
        14. அகத்திக்கீரையை அரைத்து புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறும்.

            யாரெல்லாம் சாப்பிடக்கூடாது:

              1. சித்த மருந்துகள் எடுத்துகொள்ளும் போது அகத்திகீரை சாப்பிடக் கூடாது.
              2. பொதுவாக அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிடக் கூடாது. அதிமானால், மருந்தாகச் செயல்படவேண்டிய கீரை, எதிராகச் செயல்பட்டு சொறி, சிரங்கை உருவாக்கிவிடும்.
              3. அகத்திக்கீரையையும், கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது.
              4. மது குடித்துவிட்டு அகத்திகீரையைச் உண்ணக்கூடாது. ஏனென்றால், இது மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தமான பாதிப்புகளை உருவாக்கும்.
              5. இது போன்று மருத்துவம், அனைத்து கீரைவகைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களையும் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

              Saturday, 10 April 2021

              தொழுநோய் காரணங்கள்

              தொழுநோய் 



              தொழுநோய் காரணங்கள் 






              இது வருவதன் காரணம் :


              • ஹேன்சென் நோய் எனப்படும் தொழுநோய், மைக்கோபேக்டீரியம் லெப்ரேயாவால் ஏற்படும் நீடித்தத் தொற்று நோயாகும். இது குறிப்பாக தோலையும், நுனி நரம்புகளையும் பாதிக்கிறது. முடிச்சுகளும் புள்ளிகளும் ஏற்பட்டு, பெரிதாகிப் பரந்து, உணர்விழந்து, பக்கவாதம் ஏற்படுத்துவது இந்நோய்த் தன்மை.
              • இந்த கிருமி பொதுவாக காற்றில் இருந்து சுவாசம் வழியாக உள்ளே சென்று எதிர்ப்பு சக்தி குறையும் நேரத்தில் யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம் 





              அறிகுறிகள்  :


              1. மூளைக்கு வெளிப்புறம் உள்ள நரம்புகளையும்,  தொழுநோய் கைகளையும் பாதிக்கலாம் மற்றும் மூக்கின் மெல்லிய திசுக்களையும் பாதிக்கலாம். உருச்சிதைக்கும் சரும புண், கட்டிகள், பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆனாலும் கரையாத புடைப்பு போன்றவை தொழுநோயின் முக்கிய அறிகுறியாகும்
              1.  உணர்ச்சி இல்லா வெண்படை
              1. நரம்புகள் வீக்கம் அடையும் 
              1. சில நேரங்களில் இந்த படைகளின் மேல் முடி உதிர்ந்து விடும் வேர்வை நின்றுவிடும் 
              1. எண்ணெய் பூசியது போன்ற பளபளப்பான மினுமினுப்பான தோல் தோற்றம்
              1. அரிப்பு இல்லாத சிவந்த அல்லது சற்று வெளிறிய உணர்ச்சி அற்ற தேமல்கள்
              1. காதின் பின் பகுதி (மடல்) லேசாக தடித்து இருத்தல்
              1. தொழுநோய் பற்றி பெரும்பாலனபேர் பலதும் கருத்தும் சொல்வதுண்டு அதெல்லாம் அறிகுறிகளும் அதிகமாக இருப்பதாக சொல்வார்கள் அது மிகவும் தவறு அறிகுறி அதிகமாக வருவதில்லை 







              இதை தீர்க்க மருத்துவ முறைகள் :



              இதை முற்றிலும் நூறு சதவீதமும் குணப்படுத்திவிடலாம் பயப்பட தேவை இல்லை 

              டாப்சோன் மற்றும்( Rifapicin &Dapsone)  ரிஃபாம்பிசியன் மாத்திரைகள் ஆறு மாதம் முதல் பனிரெண்டு மாதம் வரை உட்கொண்டால் நூறு சதவீதம் இந்த நோயிலிருந்து குணமடைந்து விடலாம் 



              Saturday, 30 November 2019

              பாத வெடிப்பு சுலபமாய் விரட்டும் வழிகள்



              பாத வெடிப்பு சுலபமாய் விரட்டும் வழிகள்

              Easy Ways To Drive A Foot Explosion




              பொருத்தமில்லாத செருப்பினை அணிவது என ஏகப்பட்ட காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.





              குதிகால் வெடிப்புகள் வெடிப்புக்குதிகால்கள் என்றும் அறியப்படும் இது ஒரு எளிய சருமப்பிரச்சனையாகும் மற்றும் இது ஒரு தொல்லையாகும் ஆனால் இது மோசமான மருத்துவ பிரச்சனைகளுக்கும் ஈட்டுச்செல்லும். பாதம் பாதத்தின் விலிம்புப்பகுதியில் உள்ள தோல் உறிந்து தகடுகள் போல் ஏற்ப்படுவதால் குதிகால் வெடிப்புகளேற்படுகிறது சில வேலைகளில் அதிக ஆழமான வெடிப்புகள் ஏற்ப்படுவதால் அவை வலியுள்ளவையாகவும் மற்றும் இரத்தம் வெளியேறும் வண்ணமாகவும் இருக்கும்.

              க்ராக் எனப்படும் குதிகால் வெடிப்புகள் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். குதிகால் வெடிப்பு பொதுவாக வரண்ட சருமத்தில் (ஸீரோஸிஸ்) ஏற்படுகிறது. காலின் விலிம்புப்பகுதியில் தோல் மிக தடிமனாகும் (காலஸ்) போது இதன் அறிகுறிகள் மிகவும் மோசமாகிறது.

              பாத வெடிப்பு  வருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.  வரட்ச்சியான சிதோஷன நிலையில் வாழ்வது பருமனான உடல் தொடர்ந்து காலணிகள் இன்றி நடப்பது அல்லது சாண்டல்களை அணிவது அல்லது பின்புறம் திறந்த நிலையில் உள்ள ஷூக்களை அணிவது. செயலற்ற வியர்வை சுரப்பிகள்வீட்டில் பாத்திரம் கழுவுவது உப்பு தண்ணீர்  அதிகளவில் கால்களில் படுவது  பொருத்தமில்லாத செருப்பினை அணிவது என ஏகப்பட்ட காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.ஆனால் வாராத்திற்கு ஒரு முறையாவது இந்த வழிமுறைகளை கைப்பிடித்தால் எளிதில் உங்களின்  பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலாம். பாத வெடிப்புகளால் அவதிப்படும் பெண்கள் அதற்கான உயர்தர சிகிச்சை பெற்றாலும்  குணமாக நாளாகும். ஆனால் உண்மையில் இதற்கான  முழுமையான தீர்வு இயற்கை வழியில் தான் உள்ளது.

              கால்களை ஒழுங்காக தவராமல் ஈரப்படுத்துவது குதிகால் வெடிப்புகள் ஏற்படுவதை தடுத்து நிறுத்தும். ஒரு முறை இவை ஏற்பட்டால்  தினமும் நுறைக்கற்களை பயன்படித்தி தடித்து உறியும் வண்ணம் உள்ள தோலினை குறைக்கலாம். காலணிகள் இன்றி செல்வது அல்லது பின்புறம் திறந்த நிலையில் உள்ள ஷூக்களை அணிவது சாண்டல்களை அணிவது அல்லது தடிமனான தோலினாலான ஷூக்களை அணிவதை தவிற்கவும். அதிக அதிர்வுகளை இழுத்துக்கொள்ளும் ஷூக்களை அணிவது நிலைமையை மேம்படுத்த உதவும்.


              குறைந்தது ஒரு நாளில் இரண்டு முறை கால்களை ஈரப்படுத்துவது மற்றும் உறங்கும் போது ஈரக்கால்களுக்கு மேல் கால் உறைகளை அனிவதும் உதவும்.





                1. கடுகு எண்ணெயை தினமும் கால் பாதத்தில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

                2.  மருதாணி இலைகளை நன்றாக அரைத்து  பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்பு தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
                3.  பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி உங்களின் பாதத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துங்கள்.
                4. செயற்கை நூலினால் செய்யப்பட்ட கால் உறைகளைத் தவிர்த்து, காட்டன் கால் உறைகளை உபயோகியுங்கள்.
                5. பாதங்களை எலுமிச்சைப் பழத்தோலால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நன்றாகத் தேய்த்து வர பாத வெடிப்பு குணமாகும்.
                6. பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் உள்ள வெடிப்பு பகுதியில் தேய்த்து வந்தால் குதிகால் வெடிப்பு மறைந்து விடும்.





                வீட்டில் உள்ள போது உறங்கச்செல்லும் முன் ஈரப்பதமூட்டும் பசைபொருட்க்களை கால்களில் பூசுவது மற்றும் இரவு முழுவதும் ஈரப்பதம் காலில் உள்ள வண்ணம் இருக்க, இரவு நேரத்தில் விஷேஷித்த கால் உறைகளை அணிவது, ஈரப்பதம் மாறாமல் பாதுகாப்பது, போன்றவை குதிகால் வெடிப்பு சிகிச்சைக்கு ஒரு நல்ல திறவுகோலாகும். உங்களுக்கு இதில் முன்னேற்றம் காணப்படவில்லையென்றால், பாதவியல் (போடியாட்ரிக்ஸ்ட்) மருத்துவரை பார்க்கவும்.





                       source : https://tamil.indianexpress.com/lifestyle/easy-tips-for-cracked-heels/

                                                      http://ta.vikaspedia.in/InDG

                Sunday, 7 July 2019

                தோல் பாதிப்பும் பராமரிப்பும்

                தோல் பாதிப்பும் பராமரிப்பும் 

                முகப்பரு (Pimples)

                பருவத்தில் வருவது பரு : காரணங்கள் :



                • ஹார்மோன்களில் வரும் மாற்றங்கள் 
                • கிருமிகள் 
                • சிலவகை மாத்திரைகள் 
                • ஒவ்வாமை 
                • அழகு சாதனங்கள் (Cosmetic Products) பயன்படுத்துவது  ( இது நம் எண்ணெய் குழாய்களை அடைத்துவிடும் 


                மருத்துவமுறைகள்: 



                • பருக்களை தொடக்கூடாது கிள்ளக்கூடாது கிள்ளினாள் தழும்பாகிவிடும் அதை நசுக்கி  உள்ளிருப்பதை எடுக்கவும் கூடாது 
                • ஒரு நாளில் ஐந்து முதல் ஆறு தடவை சோப்பு பயன்படுத்தி முகம் கழுவ வேண்டும்  
                • மற்ற வியாதிகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டும் மாத்திரை சாப்பிட வேண்டும்  
                • அழகு சாதனங்களை கூடிய வரை குறைவாகப் பயன்படுத்த வேண்டும் தேவையென்றால் கேலமைன் (Calamine ) கலந்த சாதனங்களை பயன்படுத்தலாம் 
                • பருவ வரும் காலத்தில் க்ளின்டாமைசின் களிம்பை (Clindamycin Ointment) தினமும் இரவில் பூசினால் பரு குறைந்துவிடும் 
                • டெட்ராசைக்ளின் (Tetracycline) மாத்திரைகள் ஆறு மாதங்கள் சாப்பிடவேண்டும் 
                • மேற்கூறியவற்றை ஆறு மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் மட்டுமே பரு மறுபடியும் வராமல் இருக்கும் 
                • மேலே குறிப்பிட்டவைகள் மூலமாகவும் பரு குறையவில்லை என்றால் கெமிக்கல் பீலிங் (Chemical Peeling) மைக்ரோ டேர்மாப்ரேஷன் (Micro Dermabrasion) மூலம் சரிசெய்துவிடலாம் ,


                பின்குறிப்பு:

                 சாக்லேட்,ஐஸ்க்ரீம்,எண்ணெய் பலகாரம் போன்ற உணவு பொருள்கள் பருவை கூட்டுவதில்லை உணவுப் பழக்கத்திற்கும் பருவுக்கும் சம்பந்தம் இல்லை 



                                                               source : DR G.R. Ratnavel  

                Thursday, 27 July 2017

                ஆரோக்கிய டிப்ஸ்

                கடையநல்லூர் வாழ் மக்களுக்கு மட்டும் இல்லாமல் இந்த வளையதளத்தில் இருக்கும் எல்லா வாடிக்கை யாளருக்கும் இந்த kdnlbusiness.blogspot.in இன் ஒரு சிறந்த பதிவு மேலும் இது சம்மந்தமாக எதுவாக இருந்தாலும் உங்களுடைய பரிமாற்றமும் எங்களுக்கு தேவை.

                இன்றைக்கு மட்டும் இல்லை எப்போதுமே ஆரோக்கியமா வசுருக்கணும்,தூக்கத்தில் இருந்து நேரத்தில் ஏந்திக்கணும்,சுறுசுறுப்பாக இருக்கணும்,காலையில் எழுந்துரிசு சீக்கிரமே குளித்து விடவேண்டும், மேலும் நல்ல பல் மட்டும் விளக்கணும்,உங்களுக்கு பிடிச்சது மட்டும் இல்ல தேவை யானது மட்டும்தான் சாப்பிடணும்,பொய் பேசக்கூடாது,சண்டை போடக்கூடாது,ரொம்ப அழகா இருக்கணும்,சேட்டைமட்டும் பண்ணேவே கூடாது, என்னடா இவங்க வித்தியாசமா சொல்றாங்கனு நினைக்கிறீங்களா?

                இதே போல நீங்கள் இருப்பீர்களா? சற்று சிந்தித்து பார்க்கவேண்டும், ஏனென்றால் இது போன்று நாம் அனைவராலும் ஹெல்த் டிப்ஸ் என்ற பேரில் எல்லாரும் சொல்லுவதே கேட்டு அப்படியே செயல்படுத்துகிறோம். எப்படி என்றால் நாம் வீட்டில் இருப்பவர்களை பார்த்து, நாம் கூட இருக்கும் நண்பர்களை பார்த்து, அவருக்கு ஒடனே இது சரியாடுசு என்று இது போல நாம் நம்பி அதை பயன்படுத்து கிறோம் அப்படியே அவர்கள் செய்யும் செயல்பாடுகளையும் அப்படியே செய்கிறோம்.அப்படியே  செய்வதினால் அது நமக்கு நன்மை இல்லை, அதற்க்கு எதிர்மறையாக அது நமக்கு அது தீங்காகும்.
                எப்படி என்றால்.

                1. தண்ணீர் நிறைய குடித்தீர்கள் என்றால் அது உங்கள் உடம்புக்கு நல்லது என்று உங்கள் வீட்டிலோ, பக்கத்து வீட்டிலோ உங்கள் சொந்த பந்தத்திலோ சொல்ல கேட்டிருப்பீர்கள்.அது எப்படி என்றால் சுமாராக ஒரு நாளைக்கு 3 லிட்டரோ, நாலு லிட்டரோ குடியுங்கள் அது உங்களுக்கு நல்லது என்று அப்படி செய்வதினால் வேலை பழு கிட்னிக்கு அதிகமாகி அதி கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது, அதில் சிறப்பு என்னவென்றால் உங்களுக்கு நாக்கு அதாவது உங்களுடைய வாய் எப்போது தண்ணீர் தா என்று கேட்கிறதோ அப்போதுதான் நீங்கள் தண்ணீரை அருந்த வேண்டும்.அப்படி அளவுக்கு அதிகமாக தண்ணீ  குடித்தால் உங்களுடைய உடம்பு பெருகும், உப்புவசம்,செரிமான கோளாறு,சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

                2.நம்மளுடைய அடுத்த கோளாறு என்ன வென்றால் யாரோ ஒருவர் இல்ல எல்லாருமே சொல்லுவது என்னவென்றால் கடைல விக்க கூடிய மினரல் வாட்டரை பற்றித்தான்.அதுவும் நமக்கு நல்லதென்று நினைத்தால் அதான்  மிகப்பெரிய தவறு ஆகும்.ஏனென்றால்  அதில் பிளூரைடு இருக்காது இந்த மினரல் வாட்டரில் அது நமக்கு கிடைக்க கூடிய மினரல்,அயன்,இது போன்ற போஷாக்குகள் அதை கொதிக்க வைப்பதினால் அது கிடைப்பதில்லை,இதற்க்கு பதிலாக நமது வீட்டில் சுத்திகரிப்பு செய்து குடிப்பது நல்லது நமது பார்வையில் கொதிக்க வைத்து குடிப்பதை தவிர்ப்பது நல்லது.இந்த பிளூரைடு இல்லாத தண்ணீரை குடிப்பதால் உங்களுடைய பல் சொத்தையாகிறது.

                3.மேலும் பகலில் தூங்குவது அதிலும் நமது மாத வருமானம் பெறுக வேண்டும் என்று ஒரு சிலர் நமது உடம்பை பேணாமல் நைட்டில் உழைத்து பகலில் தூங்குவதும் ஒரு பழக்கம் இருக்கிறது. நமக்கு இரவையும்,பகலையும்,படைத்தது பகலில் உழைத்து இரவில் உறங்குவது.இரவில் உறங்குவதுதான் மிகவும் ஏற்றதாகும்,இப்படி செய்வதால்,மன அழுத்தம்,அதிகமாகிறது,இதனால் வீட்டிலும் பிரச்சனைகள் அதிகம்,உடம்பை வருத்தக்கூடிய எந்த ஒரு வேலையும் செய்வதை தவிர்க்கவும்.மனநல குறைபாடுகள் இரவில் தூங்காததால் வரும்.

                4,அதுக்கு அப்பொறம் பல் துலக்குவது பல் துலக்குவது மிகவும் நல்லதுதான் அதற்காக எப்போ பார்த்தாலும் பல்ல விளக்கக்கூடாது,ஒரு சில பேர் சாப்பிட பிறகும் அதுவும் 5 நிமிசத்துக்கு மேலாக அந்த பல்லை விளக்குவார்கள் அப்படி செய்வதால் அதனோட ஆரோக்கியம் குறையும் பல் துலக்குவது மிகவும் குறிகிய நேரமாக இருக்க வேண்டும் 1 நிமிடம் முதல் 2 நிமிடம் வரை இருக்கலாம்.

                5,மாத்திரைகள் கொண்டு ஒரு பழக்கம் அது என்ன வென்றால்,சொல்லுவதாக யாராக இருந்தாலும் எந்த மாத்திரை யாராக இருந்தாலும் என்ன மாத்திரை என்று தெரியாமல் எடுத்து கொள்வது அதனால் பக்கவிளைவு தான் வரும் நீங்கள் சாப்பிடும் மாத்திரை எதுவாக இருந்தாலும் அது மருத்துவர் உதவிகொண்டு எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது மேலும் எங்களுடைய பக்குவ படி நீங்கள் மாத்திரை மிகவும் எவ்வளவு குறைக்கமுடியுமோ அவ்வளவு குறைப்பது நல்லது உணவே மருந்து மருந்தே உணவு என்ற மந்திரத்தில் வாழலாம் எல்லோரும்.

                6,உடற்பயிற்ச்சி ஒரு நோயும் கூட அதையும் அளவுக்கு அதிகமாக பண்ணுவது உங்கள் இதயம் பலகீனம் ஆகும் என்னடா நாந்தான் இதனை வருடகாலமாக செய்யலாம் என்று என்ன வேண்டாம்.நீங்கள் சேயும் ஒவ்வாரு செயலும் உங்களுடைய வயது முதிர்ந்த காலத்தில் அது கொடுக்கும்.நீங்கள் உண்ணும் உணவுக்கு ஏற்றார் போல் உழையுங்கள்,அதுவே மிகவும் சிறந்தது.




                Friday, 19 May 2017

                வாழைப்பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்:

                வாழைப்பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்:



                வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். அதில் பலவிதமான  முழு நன்மைகள் பற்றி பலருக்கு தெரியாது. உண்மையில் வாழைப்பழத்தில் அதிகமான  நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றி சொன்னால், நம்பமாட்டீர்கள்.
                வாழை‌ப் பழ‌ம் எ‌‌ன்பது ‌மிகவு‌ம் ம‌லிவான ‌விலை‌யி‌ல் ‌கிடை‌க்கு‌ம் பழ‌ம் எ‌ன்ற போ‌திலு‌ம், அ‌தி‌ல் ‌இ‌ரு‌க்கு‌ம் ச‌‌த்துகளு‌ம், மரு‌த்துவ குண‌ங்களு‌ம் வேறு எ‌ந்த பழ‌த்‌திலு‌ம் இரு‌க்காது. ப‌ல்வேறு நோ‌‌ய்களு‌க்கு வாழை‌ப்பழ‌ம் மரு‌ந்தாகவு‌ம் அமை‌கிறது.ஏனெனில் அந்த அளவில் அதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.
                அவ்வாறு சாப்பிட வாங்கும் வாழைப்பழத்தை கனிந்ததாகவே வாங்கினால், அது சீக்கிரம் பாழாகிவிடும். ஆகவே சிலர் காயாக வாங்குவார்கள். அத்தகையவர்கள் அதனை விரைவில் பழுக்க வைப்பதற்கு ஒரு சூப்பர் டிப்ஸ் உள்ளது. அது என்னவென்றால், அதனை ஒரு ப்ரௌன் பேப்பரில் போட்டு சுற்றிவிட்டால், சீக்கிரம் பழுத்துவிடும். மேலும் சிலர் ப்ரிட்ஜில் வைப்பார்கள். அவ்வாறு வைத்தால், அது கருப்பாக மாறிவிடும். அதற்காக சாப்பிட கூடாது என்பதில்லை. சிலருக்கு நிறம் மாறிவிட்டால், கெட்டுப் போய்விட்டது என்று தூக்கிப் போட்டுவிடுவார்கள் என்பதாலேயே தான். இவ்வாறு நன்கு கனிந்த வாழைப்பழத்தை பலவாறு சாப்பிடலாம். குறிப்பாக வாழைப்பழத்தில் மட்டும் நன்மைகள் நிறைந்திருப்பதில்லை, வாழைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் பல்வேறு வகையில் பயன்படுகிறது. மேலும் அதன் ஒவ்வொன்றிலும், நிறைய சத்துக்கள் உள்ளன.
                சிலருக்குக் காலையில் எழுந்ததுமே வயிற்றைக் கிள்ளுவது மாதிரி இருக்கும். கிடைக்கிற எதையாவது எடுத்துச் சாப்பிட்டு, பசி போக்குவது அவர்கள் வழக்கமாகவும் இருக்கும். பசி எடுக்காமலேயே எதையாவது சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். வெறும் வயிற்றில் இப்படிக் கண்டதையும் சாப்பிடுபவர்கள் கவனிக்க வேண்டும். இப்படிச் சாப்பிடும் உணவுகள் ஒருவேளை நமக்கு நன்மை அளிக்கலாம். மாறாக, வேறு பிரச்னைகளையும்கூட ஏற்படுத்திவிடலாம்.
                வாழை‌ப் பழ‌த்‌தி‌ல் குறைந்த அளவு உப்பும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தையும், வாதநோயையும் குறைக்க முடியுமென்று அமெரிக்க அரசு உணவு நிறுவனம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.
                எனவேதா‌ன் அ‌ந்த கால‌த்‌‌திலேயே, வெ‌ற்‌றிலையுடனு‌ம், சா‌மி‌க்கு‌ப் படை‌க்கவு‌ம், தா‌ம்பூல‌ம் வை‌த்து‌க் கொடு‌க்கவு‌ம் இ‌வ்வளவு ‌சிற‌ப்பு வா‌ய்‌ந்த வாழை‌ப் பழ‌த்தை பய‌ன்படு‌த்‌தியு‌ள்ளன‌ர். எனவே இ‌ந்த பழ‌த்தை சா‌ப்‌பிடு‌ம்போது பலரு‌க்கு‌ம் ந‌ல்ல பய‌ன் ‌கிடை‌க்கு‌ம்


                வாழைப்பழத்தை இரவில்  சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.


                பலருக்கும் வாழைப்பழம் சாப்பிட சிறந்த நேரம் எதுவென்ற சந்தேகம் இருக்கும். பெரும்பாலானோர் இரவில் தான் வாழைப்பழத்தை சாப்பிடுவார்கள். ஆனால் இரவில் சாப்பிடுவது நல்லதா என்ற கேள்வி மனதில் இருக்கும். இதுக்குறித்து மற்றவர்களிடம் கேட்டால், சிலர் அது நல்லதல்ல என்று கூறுவார்கள்.

                ஆனால் இரவில் வாழைப்பழத்தை சாப்பிடலாம். பழங்களில் வாழைப்பழம் விலைமலிவில் ஏராளமான ஊட்டச்சத்துக்களுடன் கிடைக்கும் பழமாகும். இத்தகைய வாழைப்பழத்தை இரவில் ஒருவர் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் நாங்கள் உங்களுக்கு தருகிறோம்.

                தூக்கம்:

                வாழைப்பழத்தை இரவில் சாப்பிட்டால், நிம்மதியான தூக்கத்திற்கு தேவையான ஹார்மோனான மெலடோனினை உற்பத்தி செய்து, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும். இதற்கு மெலடோனின் அளவை அதிகரிக்கும் ட்ரிப்டோபேன் வாழைப்பழத்தில் அதிகம் உள்ளது.

                உயர் இரத்த அழுத்தம்:
                பொட்டாசியம் நம் உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள தேவையான அவசியமான சத்தாகும். ஒருவர் ஒரு நாளைக்கு 4700 மிகி பொட்டாசியத்தை எடுக்க வேண்டும். இந்த பொட்டாசியம் வாழைப்பழத்தில் உள்ளது.

                சர்க்கரைக்கு சிறந்த மாற்று:
                பலருக்கும் இரவில் படுக்கும் முன் ஏதேனும் இனிப்புக்களை சாப்பிட ஆசை இருக்கும். ஆனால் இரவில் இனிப்பு பலகாரங்களை சாப்பிட்டால், அது உடலுக்கு தீமை விளைவிக்கும். ஆனால் வாழைப்பழத்தை இரவில் சாப்பிட, இனிப்பு பலகாரங்களின் மீதுள்ள நாட்டம் குறைவதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்கும்.

                தசைப்பிடிப்புக்கள் குறையும்:
                இரவில் படுக்கும் போது உங்களுக்கு கால் பிடிப்புக்கள் ஏற்பட்டால், வாழைப்பழத்தை சாப்பிட்டு பின் தூங்குங்கள். இதனால் அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், உடலில் எலக்ட்ரோலைட்டுக்களின் அளவை ஊக்குவித்து, தசைப்பிடிப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.

                செரிமானம்:
                வாழைப்பழத்தில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான மண்டலத்திற்கு நல்லது. எனவே இரவில் உணவு உட்கொண்ட பின் வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது உண்ட உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்து, நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.

                Thursday, 11 May 2017

                இஞ்சியின் அற்புதம்:


                இஞ்சியின்  அற்புதம்: 






                உணவின் ருசி கருதி இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண உள்ள ஒரு பொருள் அது இஞ்சி. இது ஒரு மருத்துவ மூலிகை கொண்டதாகும் இந்த இளமை யானது நிலைத்திருக்க வேண்டுமா
                இஞ்சியே அதற்கு மிக முக்கியமான தீர்வு என்று நம் முன்னோர்கள் கூறுவதுண்டு.அப்பேற்பட்ட இந்த இஞ்சி   இரு ஆண்டுகள் வரை வாழும் சிறுசெடி. மணற்பாங்கான நிலங்களில் இஞ்சி ஏராளமாக பயிராகின்றது. தமிழகம், பஞ்சாப் மாநிலங்களிலும், வங்காள தேசத்திலும் இந்தியா மற்றும் பிற தேசங்களின் அதிகமாக விளையாடுகிறார்கள்.கிழங்குகளே பொதுவாக இஞ்சி எனவும் கொள்ளப்படும்  இவை, மருத்துவப் பண்பும்,உணவும்   உபயோகமும் உள்ளவை. வாசனைக்காகவும், காரத்திற்காகவும் இவை உணவில் சேர்க்கப்படுபவை ஆகும். நன்றாக இந்த இஞ்சியை  காயவைத்துப் பதப்படுத்தப்பட்டு  இஞ்சியின் கிழங்குகளே பிரித்து எடுத்தால் அது சுக்கு ஆகும். இஞ்சியின் எல்லா மருத்துவக் குணங்களும் இதற்கும் உண்டு. சுக்கு, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றியது.
                இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம் என்றும், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பதும் பழைய பாடல் வரிகளில் வருகின்றது . இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.
                இந்த இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்கள் உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.
                நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் நினைக்க முடியாத பல பிரச்சனைகளுக்கு உள்ளாக வேண்டியுள்ளது. அதில் குறிப்பாக உடல் எடையால் தான் பலரும் கஷ்டப்படுகின்றனர். ஒருவர்  உடல் எடை அளவுக்கு அதிகமானால், அதைத் தொடர்ந்து இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன அழுத்தம், இதய பிரச்சனைகள், கொலஸ்ட்ரால் என பல விதமான பிரச்சனைகள் நமக்கு நஷ்டத்தை கொடுத்து விடுகிறது.
                இந்த பிரச்சனைகளெல்லாம் வராமல் இருக்க இயற்கை வைத்தியங்களில்னால் கொண்டு தயாரிக்க பட்ட  இஞ்சி சாற்றின் தேன் கலந்து குடிப்பது நல்லது. அனைவருக்கும் இஞ்சி மற்றும் தேனின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியும். மேலும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் சிகிச்சையளிக்க இவை பெரிதும் உதவியாக உள்ளன.
                அஜீரணம், பசியின்மை, வயிறு பொருமல், வயிற்று வலி, சளி, தலைவலி, மயக்கம், இருமல் இதை கொண்டு குணமடைய வைக்கலாம்.. பச்சை கிழங்கு இஞ்சியாகவும், பதப்படுத்தி காய வைத்த சுக்கும்  நமக்கு பயன் அளிக்கிறது.

                மருத்துவப்பயன்கள்:



                • இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து, அந்த நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.



                •  இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.



                • இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி, காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு, வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.



                • இஞ்சி சாறில் தேன் கலந்து, தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர, நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.



                • மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.



                • தற்போது கண்ட ஜங்க் உணவுகளை உட்கொண்டு, செரிமான மண்டலத்தினால் சீராக செயல்பட முடியாமல், நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனை சரிசெய்ய, இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வருவது நல்ல பலனைத் தரும்.



                இஞ்சிக் கிழங்குகள் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை.
                இவை, வியர்வை மற்றும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் பசித்தூண்டியாகவும் வாயுவை அகற்றும் மருந்தாகவும் செயல்படும். காசம், கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் போக்கும்.

                முற்றிய பசுமையான இஞ்சியின் மேல் தோலைச் சீவி நீக்கவும். பின்னர், சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமான தேனில், இஞ்சித் துண்டுகள் மூழ்கியிருக்குமாறு ஊறவைக்க வேண்டும்.

                நன்கு ஊறிய பின்னர் தினமும் இரண்டு துண்டுகள் வீதம், உணவிற்கு முன்னர் மென்று சாப்பிட வேண்டும்.

                குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்திற்கு இஞ்சிச் சாற்றை தொப்புளைச் சுற்றிப் பற்றுப்போட வேண்டும்.

                வயிற்று வலி மற்றும் வயிறு கனமாக இருத்தல் குணமாக இஞ்சிச் சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி சாறுடன் சிறிதளவு தேன் கலந்து, 2 அல்லது 3 நாட்களுக்குத் தினமும் மூன்று வேளைகள் குடிக்க வேண்டும்.

                சளியுடன் கூடிய இருமல் கட்டுப்பட, இஞ்சியை இடித்துச் சாறு எடுக்கவும். ஒரு தேக் கரண்டி அளவு சாறுடன், சிறிதளவு தேன் கலந்து, தினமும் மூன்று வேளைகள், 7 நாட்களுக்குப் பருகவும்.

                இளமை நிலைத்திருக்க, இஞ்சியைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, தேனில் 48 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.






                Saturday, 6 May 2017

                நுங்கு சாப்பிடுவதால் உடம்பின் மாற்றங்கள்:

                நுங்கு சாப்பிடுவதால் உடம்பின் மாற்றங்கள்:



                மறந்து வரும் பாரம்பரியங்களில் பனை மரமும் ஓன்று. 'பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம்’ என்னும் தகவல் இந்த தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அழிந்து வரும் இயற்கைச் சூழலில் பனைமரமும் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இதனால், அதன் உற்பத்தி குறைந்தாலும், நுங்கு தரும் நன்மைகள் ஏராளம்'' என்கிற செய்திகளை நான் பல வலயத்தளங்களில் படித்துள்ளேன்  நுங்கு மற்றும் பதநீரில் உள்ள நன்மைகள் குறித்து எனக்கு தெரிந்த சில விஷயங்கள்
                வெயில் கால சூட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு இயற்கை தந்த வரம்தான் பனைமரம். கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியை நாடுவோம். நம் உடலுக்கு தேவையான நீர்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.இந்த பனைமரத்தின்  இளம் காய்களாக இருக்கையில் நுங்கு என அழைக்கப்படுகிறது. நுங்குக்கு என ஒரு நுணுப்பமான பருவம் உள்ளது. இந்தப் பருவத்திலே நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவநிலை கலந்த திண்ம விதையானது மிகவும் இனிப்பாகவும், உண்பதற்கு சுவையானதாகவும் இருக்கும். இந்தப் பருவம் தாண்டி சற்று முற்றி விட்டால் இதன் சுவை குன்றி விடும். நன்கு முற்றி விட்ட பின் இதனை சீக்காய் என்பர். சீக்காய் திரவநிலை குறைந்து இறுக்கமாகக் காணப்படும். இதை உண்பதால் வயிற்றில் உபாதை ஏற்படும் என நம்பப் படுகிறது. சீக்காயை சிறுசிறு துண்டுகளாக்கி ஆடு, மாடுகளுக்கு உணவாகவும் கொடுப்பார்கள்.
                இந்த இந்தியாவில் கோடைக்காலத்தில் தெருக்களில் விற்றுக் கொண்டு வரும் பழங்களில் ஒன்று தான் நுங்கு. இந்த நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.
                என்பது நம்மில் எதனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை
                வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் தான் பனைமரம். இது நமது தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் இது மிகவும் அதிகமாக இது உள்ளது,
                கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு. பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.
                நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.
                நுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் நிறைந்தது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நுங்கு சாப்பிடலாம்.
                சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக, எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால், தாகம் அடங்கிவிடும்
                குறிப்பாக இது  உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை இது தன்னுள் அதிகம் உள்ளடக்கியுள்ளது. மேலும் உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
                அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளது.
                அதிலும் கோடையில் அதிகப்படியான வெப்பத்தினால் சின்னம்மை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அப்போது நுங்கு சாப்பிட்டால், சின்னம்மையினால் ஏற்படும் அரிப்புக்களை தடுத்து, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள உடலுக்கு குளிர்ச்சித் தரும் இயற்கை உணவு இந்த  நுங்குவில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன.
                1.எடையை குறைக்கும் :
                கோடையில் மிகவும் சுலபமாக உங்கள்  உடல் எடையைக் குறைக்கலாம். ஏனெனில் இக்காலத்தில் உடல் எடையை குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்குமிகவும் பெரிது அளிக்கிறது . அதில் ஒன்று தான் நுங்கு சாப்பிடுவது. நுங்கு சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான தண்ணீரானது வயிற்றை நிரப்பி, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும், இதனால் கொஞ்சம் உடம்பு குறைய வாய்ப்பு உள்ளது
                2.சின்னம்மை :
                சின்னம்மை வராமல் தடுக்க வேண்டுமானாலும் சரி, வந்த சின்னம்மையை விரைவில் குணப்படுத்த வேண்டும் என்றாலும்  சரி, நுங்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
                3.வெயிலில்  மயக்கம் :
                சிலருக்கு வெயிலில் செல்லும் போது அடிக்கடி மயக்கம் போடுவார்கள். அத்தகையவர்கள் நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, நாவறண்டு போகாமல் மயக்கம் ஏற்படாது.
                 4.கர்ப்ப காலம் :
                கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிடுவதன் மூலம் செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
                5.சோர்வு :

                கோடையில் விரைவில் சோர்வடைந்துவிடுவோம்தோலுக்கு . இத்தகைய சோர்வை நுங்கு தருவதில்லை.

                6.மார்பக புற்றுநோய் :
                நுங்குவில் ஆந்தோசையனின் என்னும் பைட்டோ கெமிக்கல் உள்ளது. இவை மார்பக புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி கொண்டவை.
                7.செரிமான பிரச்சனைகள் :
                செரிமான பிரச்சனை உள்ளவர்கள், நுங்கு சாப்பிட்டு வந்தால், அது செரிமான மண்டலத்தை சீராக செயல்பட வைத்து, உடலில்  செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.
                8.வியர்குரு :
                நுங்கு சாப்பிட்டால், உடல் வெப்பம் குறைந்து, உடலில் வந்துள்ள வியர்குரு போய்விடும்.
                9.வெயில் கொப்பளம் :
                கோடையில் பலருக்கு வெயில் கொப்பளம் வரும். இத்தகைய கொப்பளத்தை வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுங்கள்.
                10.ஆற்றலை அதிகரிக்கும் :
                நுங்குவில் உள்ள சரியான கனிமச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும், உடலின் குளுக்கோஸ் அளவை சீராக வைத்து, உடலை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள உதவிபுரியும்.
                11.மலச்சிக்கல் :
                மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், காலையில் வெறும் வயிற்றில் நுங்கு சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

                Friday, 5 May 2017

                கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்

                கறிவேப்பிலையின் மருத்துவ நன்மைகள்:



                கறிவேப்பிலை இல்லாமல் சமையலை பார்ப்பது மிகக்கடினம். நமது உணவுகள் அனைத்திலும் கறிவேப்பிலை இடம்பெற்றிருக்கும். கறிவேப்பிலை மணத்திற்காக தான் பயன் படுத்துகிறோம் என்றால் அது மிக தவறு. இயற்கை நமக்களித்த  மருத்துவத்திற்கு கறிவேப்பிலை மிக சரியான உதாரணம். நமது முன்னோர்கள் தொட்டு இன்று வரை நாம் உண்ணும் உணவில் பயன்படுத்தி வருகிறோம்."கறிவேப்பிலை" எனும் தமிழ் சொல்லை சிங்களத்தில் "கறபிஞ்சா" என்றும், வட இந்திய மொழிகளான இந்தி, வங்காளம் போன்ற மொழியினரின் "கறிபத்தா" என்றும் அழைக்கின்றனர். இம்மொழிகளில் பயன்படும் சொற்கள், தமிழ் மொழிச் சொல்லான கறிவேப்பிலை எனும் சொல்லின் மருவல் என்பதை உணர்ந்துக்கொள்ளலாம்.
                பலமருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சமைக்கப்படுகின்ற பலவிதமான உணவுப் பதார்த்தங்களில் சுவைகூட்டும் பொருளாக இந்த கருவேப்பிலை பயன்படுகிறது  இதன் தாவரவியல் பெயர், முறயா கொயிங்கீ (Murraya koenigii) என்றழைக்கப்படுகின்ற இந்த மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவையாகும். இலை, ஈர்க்கு, பட்டை, வேர் வாசனைப் பொருளாக மட்டுமன்றி, கறிவேப்பிலையை சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் இலங்கை, இந்தியா தவிர்ந்த மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கறிவேப்பிலையின் பயன்பாடு காணப்படுகின்றது. தென்னிந்தியர் மற்றும் தமிழரின் தொடர்புகள் ஊடாக கறிவேப்பிலையின் பயன்பாடு  கணிசமான அளவினரிடம் பரவியுள்ளது.
                கறிவேப்பிலை இலையாக கையில் இருக்கும் போது அதிக மணம் இருக்காது. பச்சையாக சாப்பிட்டால் கசப்பது போல் இருக்கும் இளம் சூடான எண்ணெயில் போடும் போது தான் அதன் சுவையும், மனமும் அதிகரிக்கும். பல மருத்துவ குணங்களைக் கொண்டது தான் கறிவேப்பிலை.
                நிறைய இடங்களில், நிறைய பேர் சாப்பிடும் போது பார்த்திருக்கிறேன் அவர்கள் கறிவேப்பிலையை சாப்பிடுவது கிடையாது எடுத்து இலையின் ஓரத்தில் வைத்து விடுவர் இது தான் இன்றளவும் அனைத்து இடங்களிலும் நடக்கும் உண்மை. இதன் நன்மைகள் முழுவதும் தெரியதாவர்கள் தான் இப்படி செய்கிறார்கள் நிச்சயம் இதன் நன்மை தெரிந்த எவரும் இனி சாப்பிடுவார்கள் என்பது தான் என் கருத்து.

                 கறிவேப்பிலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.இது இரத்த சோகை,கண்புரை,மலச்சிக்கல்,வயிற்றுப்போக்கு,உடல் பருமன்,வயிற்றுக்கடுப்பு,காலைச் சோர்வு,குமட்டல் மற்றும் வாந்தி,செரிமான கோளாறு,பசியின்மை மற்றும் சுவையின்மை,சிறுநீரக பிரச்சனைகள்,பூச்சிக்கடி,சில ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்துகின்றன.மிக முக்கியமான தகவல் என்ன வென்றால் கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
                இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் .
                மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை
                நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்ற ஆஸ்திரேலியாவில் உள்ள பெரிய ஆராச்சி நிறுவனம்  கண்டறிந்துள்ளது,

                கறிவேப்பிலையில் புரதச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் A, B, C போன்ற சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.



                • அன்றாட உணவில் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால், பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரணக்கோளாறு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படுவதோடு, ரத்தம் சுத்தமாக்கப்படும்.




                • கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.




                • தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க மற்றும் இளமையில் ஏற்படும் நரைமுடியை போக்குவதற்கு, கறிவேப்பிலையைப் பச்சையாக சாப்பிட வேண்டும்.


                • காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை சேர்த்து உட்கொண்டு வந்தால், நமது உடலில் இருக்கும் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்கச் செய்து, ரத்த சோகை பிரச்சனையை வராமல் தடுக்கிறது. 



                • கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண்பார்வைக் கோளாறுகள் நீக்கி, கண் பார்வையை பிரகாசமாக்க தினமும் கறிவேப்பிலை பானம் செய்து குடிக்கலாம்.



                • தினமும் ஒரு மாதம் தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் கறிவேப்பிலை பானம் செய்து குடித்து வந்தால், நீரிழிவு நோய் குணமாகிவிடும்.




                • கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பதோடு மட்டுமில்லாமல், தினமும் அதை காலையில் பச்சையாக சாப்பிட்டு வந்தால், கருமையான முடியின் வளர்ச்சி மற்றும் கல்லீரலின் வலிமையை மேம்படுத்துகிறது,வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.




                • கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.



                • வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
























                .







                Tuesday, 2 May 2017

                சூரியகாந்தி எண்ணையின் முக்கியமான பயன்

                சூரியகாந்தி எண்ணையின் முக்கியமான பயன் 




                சூரியகாந்தி மத்திய அமெரிக்க நாடுகளைச் சொந்த இடமாகக் கொண்டது. இது குறைந்தது கி.மு 2600 ஆண்டுகள் அளவில் முதன்முதலில் மெக்சிகோவில் பயிரிடப்பட்டது என்பது அதை உறுதிப்படுத்தும் சான்றாகும். இது இரண்டாம் முறையாக மத்திய மிசிசிப்பி பள்ளத்தாக்கில் பயிரிடப்பட்டிருக்கலாம் அல்லது முற்காலத்தில் மெக்சிகோவிலிருந்து சோளம் அறிமுகமாகியபோது இதுவும் அறிமுகமாகியிருக்கலாம். வடக்கு மெக்சிகோவில் மிகவும் முந்திய காலத்தில் முழுதாக பயிரிடப்பட்டதாக சில தகவல்கள் கூறுகிறது
                18 ஆம் நூற்றாண்டில் இருந்து , ஐரோப்பாவில், குறிப்பாக ரஷ்யன் பழமைவாத தேவாலய உறுப்பினர்களுடன், சூரியகாந்தி எண்ணெயின் பயன்பாடானது மிகவும் பிரபலமாகியது, ஏனெனில் தக்காலத்தின்  தடைசெய்யாத சில எண்ணெய்களில் சூரியகாந்தி எண்ணெயும் ஒன்றாக இருந்தது.

                அப்பேற்பட்ட சூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படித்தீர்கள் என்றால் அது தவறு சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படித்திருப்பீர்களானால் உங்களுக்கு மிகவும் நன்றாக புரியும்.உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், இந்த சூரியகாந்தியையே பயிரிடுகிறார்கள்.அந்த ஒரு சில நாடுகளில் பயிரிடும் இந்த சூரிய காந்தி எண்ணெய்யானது,நம் இந்திய நாடுகளில் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.இந்திய மக்கள் தொகையை கணக்கிட்டால் இந்த ஒரு சில நாட்டில் பயிரிடப்படும் இந்த சூரியகாந்தி எண்ணெய் பங்கிட்டால் அது நமது சென்னை டிநகர் முழுவதுமாக அவர்கள் பயான்படுத்தும் அளவுக்கு கொடுக்க முடியாது.அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருகிறது என்றால்.கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும்.இந்த அரபு நாட்டில் தாயாருக்கு குருடாயில் மூலமாக தயாரிக்கப்படுகிறது எப்படி என்றால் அதை பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு, அதுல நமக்கு தேவையான சில அறிய நறுமண வகையை  எல்லாம் மிக்ஸ் பண்ணி, நடக்குற சுழற்சிதான் நமக்கு சிக்கனுக்கு மட்டும் இல்லாமல் நம் உண்ணும் உணவில் பயன்படுத்தும் முறையில் தான் தயாரிக்கப்படுகிறது,குருடாயிலுக்கு மினரல் ஆயில் என்று கூடப்பெயர் வைக்கலாம்.நாம ரோடு போட்றதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார் கூட, குரூட் ஆயிலிலிருந்துதானே எடுக்குறாங்க,மிகவும்சொ சரியாக சொன்னால் அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான், நீங்கள் பயன்படுத்தும் இந்த  சூரியகாந்தி எண்ணெய்யையும் எடுக்கிறாங்க அதுலயும்  நாம சிக்கன் பொறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.

                கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருகிறது என்று இப்போது பாப்போம். அதில் இந்த சூரியகாந்திக்கு சம்பந்தமில்லை இந்த சூரியகாந்தி என்னைக்கும் சுகருக்கும் சம்பந்தம் இருக்கு.மாசத்துக்கு ஒரு தடவை  இல்லை என்றால் வாரத்திற்கு ஒரு தடவை சிக்கன் மட்டன் எடுத்து சாப்பிட்றபொது  உடம்புக்குள்ள  எப்படிடே கொழுப்பு சேரும் என்று சிந்திக்கிறீர்களா?

                பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும்   குடிக்கிற.     அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது என்று பார்த்தால் உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாது.  எண்ணெய்னால வரக்கூடியது ஆகும், உங்களோட  வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற எண்ணெயில் பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத  எண்ணெய்  சூரியகாந்தி என்னைத்தான்,
                இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க சுமார் ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக 1 கோடி லிட்டருக்கு மேல் ஆகும்.நீங்கள் வாங்குகின்ற  சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல, அந்த எண்ணெய்ல நாம் மேலே பார்த்தது போல் கலந்த கலவையை கொண்ட சூரியகாந்தி எண்ணெய் உட்கொண்டால் சுகர் மட்டும் இல்லாமல் கொலஸ்ட்ராலும் சேர்ந்து வரும். இந்த எண்ணெய்யை நீங்கள் லேப் டெஸ்ட் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.உங்கள்  வீட்டு அடுப்பங்கறைக்கு பொங்கல்  அந்த சூரியகாந்தி எண்ணெய் ஊத்தி வச்சிருக்கிற பாத்திரத்தைப் பாருங்கள். என்ன தெரியும் என்றால்,
                அதோட  வெளிப்புறத்தைப் பார்ப்பீர்களானால் கொழுப்பு படிஞ்சி பிசுபிசுன்னு இருக்கும்அந்த மாதிரி எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரம் கூட ஒரு வருஷத்துல கெட்டுப் போகுதுண்ணா மனுஷன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கள். வீட்ல பிராண்டட் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரமும் அப்படித்தாண்ணே இருக்கு என்று சொன்னால் அது மிகை ஆகாது,சூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்ல நீ யூஸ் பண்ற பாக்கெட்ல வரக்கூடிய எண்ணெய் எல்லாம, குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்,எண்ணையை வைத்து சாப்பிடுவதை தவிர்த்து,நாம் கடைக்கு பொய் ,நல்லெண்ணெய் வேணும்னா, நாலு கிலோ எள்ளு வாங்கிக்கோ, கடலை எண்ணெய் வேணுமா கடலை 4 கிலோ வாங்கி செக்கு உன் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடி உங்களோட  ஏரியாவுல இல்லை என்றால்  வேற ஊருக்குத்தான் போகணுமா தேடி போய்  செக்குல ஆட்டி  எண்ணெய்யை வாங்கிட்டு வந்து அதை பயன்படுத்துங்கள்.அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாருங்கள், ஆரோக்கியம் தானா வரும்.
                அது இல்லாமல் ரெண்டு லிட்டர் எண்ணெய்க்காக பல ஊருக்கு போகவில்லை என்றால் ஆரோக்கியமாக இருக்க முடியாது நீ ஆரோக்கியமா இருக்கணும்னா. இதை செஞ்சுத்தான் ஆகா வேண்டும்,இல்லையென்றால் நீங்கள்  ஒரு பெரிய  கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான்,கடலை எண்ணெய் கொழுப்பு இருக்கிறது என்று பல பேருக்கு ஆச்சர்யம்.கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதான் பரப்பி விட்டது, நீங்கள் உபயோகப்படுத்தும் கடலை எண்ணெய்க்கு  5 சதவீதம் கொழுப்பு இருக்கிறது என்றால்,நீ பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல இருக்கிறது 99.9 சதவீதம் மறைமுகமா  கொழுப்பு இருக்கிறது.ஏன் இன்று  பச்சை புள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்கு என்றால் எல்லாம் இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட பணத்தாசை ஆகும்.நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு நஞ்சை கொடுத்திட்டு இருக்கோம் இங்க இயற்கை மாறவில்லை மாறினது நீயும், நானும்தான். இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்ல,அது கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி.
                இன்னைக்கு இதுக்குப் பின்னாடி மருந்து வர்த்தகம்னு மாபெரும் மார்க்கெட் ஒழிஞ்சிட்டு இருக்குது,இது புரியாமல்  டி.வி.யே கதின்னு கிடக்கிற மக்களுக்கு இதை படித்த பிறகு திருந்துவார்களா?




                Monday, 1 May 2017

                முள்ளங்கியின் மருத்துவ குணம்

                முள்ளங்கியின் மருத்துவ குணம்:




                உணவே மருந்து மருந்தே உணவு என்று சொல்வார்கள் நம்முடைய  முன்னோர்கள். அந்த வகையில் நாம் தினமும் உண்ணும் காய் கறி  வகைகளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. அதே போல் முள்ளங்கியில் மட்டும்  பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் உள்ளன.
                முள்ளங்கி வெள்ளை,இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை.  சிவப்பு, ஊதா அல்லது கருப்பு ஆகிய நிறங்களில் இருக்கின்றன. மற்றும்  நீண்ட மற்றும் உருளை அல்லது வட்ட வடிவிலும் இருக்கிறது. முள்ளங்கி விதைகளில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் பொருட்கள் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.முள்ளங்கியின் அறிவியல் பெயர் ரபானஸ் சடைவஸ் என்பதாகும். இது பிராசிகாசியா தாவர குடும்பத்தை சேர்ந்தது.மூன்றாம் நூற்றாண்டில் இதன் பயன்பாடு இருந்ததாக, வரலாற்றுப் பதிவுகளால்அறிய முடிகிறது.மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட முள்ளங்கிக்கிழங்கின் தாவர விஞ்ஞானப் பெயர், ராப்ஹான்ஸ் சாட்டிவஸ் என்பதாகும்.

                பண்டைக்காலத்தில் எகிப்து, கிரீஸ், ரோம் போன்ற நாடுகளில் முள்ளங்கி அதிகம் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியா, இலங்கை உட்பட உலகில் உள்ள வெப்பமண்டலப் பிரதேச நாடுகள் அனைத்திலும் முள்ளங்கிக் கிழங்கு நன்கு பயிர் செய்யப்படுகிறது.
                பல வியாதிகளை தடுக்கும் மருந்தாகவும்  முள்ளங்கி பயன்படுகிறது இது
                மஞ்சள் காமாலை,மூல வியாதி,எடை இழப்பு,புற்றுநோய்,வெந்நோய், மலச்சிக்கல் போன்றவற்றிற்கும் ஆயுர்வேதத்தில் இது சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.
                முள்ளங்கி கீரை,குள்ளங்கி கிழங்கு,முள்ளங்கி சாறு போன்றவற்றிலிருந்தும் மருத்துவப்பயன் அதிகமாக இருக்கிறது.முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் விட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இப்படிப்பட்ட முள்ளங்கி சாற்றை  பற்றி உள்ள மருத்துவ பயனை சிறிது பாப்போம்.



                முள்ளங்கியை மாதம் ஒரு முறை மட்டும் ஜூஸ் செய்து குடித்தால்
                •  உடலின் உள்ள அழுக்குகள், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, புரோஸ்டேட் போன்ற உறுப்புகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் மற்றும் வைரஸ்களை வெளியேற்ற உதவுகிறது.

                • முள்ளங்கி ஜூஸ் நமது உடலில் உள்ள பித்த நீரின் அளவு மற்றும் செரிமான மண்டலத்தை சீராக்கி, செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

                • முள்ளங்கி ஜூஸை மாதத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால், மலச்சிக்கல் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற பிரச்சனை எப்போதுமே வராமல் தடுக்க உதவுகிறது.

                • முள்ளங்கியில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளதால், இது வயிறு, குடல், சிறுநீரகம் போன்ற இடங்களில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.


                • முள்ளங்கி ஜூஸை மட்டும் குடிக்க முடியவில்லை என்றாலும் முள்ளங்கி ஜூஸில், கேரட் அல்லது ஆப்பிள் ஜூஸை கலந்து குடிக்கலாம்.



                • முள்ளங்கி ஜூஸை மட்டும் குடிக்க முடியவில்லை என்றாலும் முள்ளங்கி ஜூஸில், கேரட் அல்லது ஆப்பிள் ஜூஸை கலந்து குடிக்கலாம்.


                • முள்ளங்கி சாற்றை பருகி வர நீண்ட காலமாக இருக்கும்.வயிறுக்கோளாறு,பேதி,தலைவலி,தூக்கம்மின்மை,ஆகிய துன்பங்களில் இருந்து விடுதலை பெறலாம்.


                • குழந்தைகளுக்கு சிறிய வயதில் இருந்து முள்ளங்கியை சேர்த்து வந்தால் அந்த குழந்தையுடைய மூளைவளர்ச்சி நன்றாக இருக்கும்.



                • முள்ளங்கி சாற்றை சர்க்கரை யோடு சேர்ந்து பருகுவதால் இருமல் குணமாகும்.



                • முடி உதிர்தல், பொடுகுத்தொல்லை போன்ற வற்றில் இருந்து முள்ளங்கி சாற்று நல்ல ஒரு தீர்வை தரும்.



                • இந்த சாற்றை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் வெகுநாளாக இருக்கும் மூல நோய் கூட குணமாகும்.



                குறிப்பு:

                • இந்த முள்ளங்கியில் அடங்கி உள்ள மிக முக்கியமான சத்துக்களாவன பைபர்,பொட்டாசியம்,காப்பர்,கால்சியம்,மக்னீசியம்,மாங்கனீஸ்,விட்டமின் பி6,ரிபோபிளவின்,ஆகியவை ஆகும்.


























                Thursday, 27 April 2017

                வெங்காயத்தின் நன்மைகள்

                 வெங்காயத்தின் நன்மைகள்


                வெங்காயம் என்றாலே எல்லோருக்கும்  தெரிய வருவது என்னவென்றால் கண்ணில் தண்ணீர் வர வழைக்கும் காய் என்று தான்.     ஆனால் அதில் இருக்கும் மருத்துவ குணங்களைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சி எடுப்பதில்லை. வெங்காயத்தை சமையலில் இருந்து தவிர்ப்பது என்பது இயலாத காரியம். மற்ற காய்களின் தேவை குறைந்தாலும், வெங்காயத்தின் தேவை மட்டும் எப்பொழுதும் இருக்கும். வெங்காய சாம்பார், வெங்காய குழம்பு, வெங்காய தொக்கு என்று ருசி பார்க்கும் நாம், அதன் மருத்துவ குணங்களை அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம்.
                வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயம் இன்றி இந்திய சமையலே கிடையாது. அந்த அளவுக்கு எல்லாசமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது.அதனாலே நமது நாட்டில் மிகவும் அதிகமாக விளைச்சலும் விற்பனையும் அதிகமாகவே இருக்கிறது.பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.வெங்காயமானது அதில் உள்ள காரத்தன்மையினால் அனைவரையும் அழ வைப்பதால், இதனை செல்லமாக மாமியார் என்றும் அழைப்பார்கள். இப்படி வெங்காயத்தின் காரத்தன்மைக்கு முக்கிய காரணம், அதில் உள்ள அலைல் புரோப்பைல்-டை-சல்ஃபைடு என்ற எண்ணெய் தான். இந்த எண்ணெய் தான் வெங்காயத்தை உரிக்கும் போது, திரவத்தை சுரந்து, காற்றின் மூலம் கண்களில் பட்டு கண்ணீர் வர வைக்கிறது.இது போன்று கண்ணில் கண்ணீர் வருவதாலும்  மேலும்  அதன் மூலம் சருமம் அடையும் பலனையும் நாம் அறிந்து கொள்வதில்லை. நம் முன்னோர்கள் அதன் மருத்துவ குணத்தை அறிந்து வைத்திருந்தனர். ஆனால் இக்காலத்து தலைமுறையினர் அதன் தன்மையை விளையாட்டாக எண்ணி விடுகின்றனர்


                நாம் பயன்படுத்தும் நூறு கிராம் வெங்காயத்தில் ஈரப்பதமானது ஒரு 86.6%உம்,புரதம் ஒரு 1.2% உம்,கொழுப்புச்சத்து 0.1% உம்,மாவுச்சத்து ஒரு 11.7% உம்,நார்ச்சத்து மற்றும் தாதுச்சத்து இரண்டும் ஒரு 1.0%உம்,கொண்டுள்ளது அப்படி பட்ட நம்முடைய   பாட்டி காலத்தில் இருந்து பயன்படுத்தும் இந்த வெங்காயம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது இப்படி எத்தனையோ வகையில் மருந்து பொருளாக பயன்படக்கூடிய இந்த வெங்காயத்தின் மேல் தோலை நம் சிறிதேனும் கவனிக்க தவறவிடுகிறோம்.

                சமையலில் அறையில்  பயன்படுத்திவரும்  காய்கறி வகையை சேர்ந்த வெங்காயத்தில் தாராளமான   நன்மைகள் அடங்கியுள்ளன  என்பது பொதுவாக எல்லாத்துக்கு  தெரியும். இந்த வெங்காயத்தை போன்றே அதனுடைய தோலிலும் மருத்துவ நன்மைகள் ஏராளமாக உள்ளது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

                1.வெங்காயத்தின் வெளிப்புறத்தில் உள்ள ப்ரௌன் (Brown) நிற அடுக்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்,(Anti oxide) நார்ச்சத்துக்கள்(Fiber) மற்றும் ஃப்ளேவோனாய்டுகள்(playvonoide) போன்ற சரும ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் வளமாக உள்ளது.

                 2.வெங்காயத் தோலில் ஆற்றல் மிக்க ஆன்டி-பாக்டீரியல்(Andi Bacteria), ஆன்டி-ஆக்ஸிடன்ட்(Andi accident), புற்றுநோய் (Cancer) எதிக்கக்கூடிய திறன் மற்றும் சைனோ பாக்ட்ரியா போன்ற நோய் எதிக்கக்கூடிய திறன் அதிக அளவில் உள்ளன.

                 3.வெங்காயத்தின் தோலில் உள்ள ஆற்றல்மிக்க நிறமியான( க்யூயர்சிடின்), இதயத்தில் உள்ள தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுத்து, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து(High blood pressure), தூக்கமின்மை பிரச்சனை வராமல் தடுக்கிறது.

                4.வெங்காயத் தோலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற சக்தி வாய்ந்த சத்துக்கள் புற்றுநோய்க்கு காரணமான செல்களை அழித்து, புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது.

                 5.வெங்காயத்தின் தோலில் இருக்கும் கரையாத நார்ச்சத்து, குடலின் செரிமான பிரச்னைக்கும் குடல் நன்றாக  செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து, குடல் சம்பந்தமான பிரச்சனைகள், உடம்பில் உள்ள கேட்ட கொலஸ்ராலைக் கரைத்து, உடல் பருமன் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

                6. முக்கியமான ஒன்று நாம் நல்லதென்று கருதும் இந்த வெங்காயத்தின் தோல் தாயாக இருக்கும் அதாவது புள்ளத்தாச்சி பெண்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும் .

                7.பற்களுக்கு நல்லது வெங்காயம் பெரும்பாலும் பல் சிதைவு மற்றும் வாய் நோயை தடுக்க பயன்படுத்தப்படுகிறது. அதிலும் 5 நிமிடங்கள் வரை வெங்காயத்தை வாயில் போட்டு மெல்லுவதால், வாய் கிருமிகளை அழிக்க முடியும்.

                8.கடுமையான இருமலால் பாதிக்கப்பட்டவர்கள்  சிகிச்சை வெங்காயம் மிகவும் நல்லது. அதிலும் வெங்காயச் சாறு மற்றும் தேனுடைய கலவையை சம அளவில் எடுத்துக் கொண்டு சாப்பிட்டால், தொண்டை புண் மற்றும் இருமல் குணமடையும்.

                9.பொடுகுத் தொல்லை இனி இல்லை வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளதால், இது ஆரோக்கியமான கூந்தலுக்கு மிகவும் இன்றியமையாதது. அதிலும் பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், வெங்காயச் சாற்றினை தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.

                10.நமது சிறிய வெங்காயத்தில் தொண்டை வலி குறையவும். பாம்பு கடிக்கும், நிறைய வெங்காயம் தின்றால் விஷம் இறங்கும். வெங்காய சாற்றை தண்ணீரில் கலந்து பருகினால் சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளதால், நீரிழிவு நோய்க்கும்  இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.











                Wednesday, 26 April 2017

                செரிமானத்தை போக்கி பசியை தூண்ட

                செரிமானத்தை போக்கி பசியை தூண்ட




                நாம் இந்த உலகில் மிகவும் உடலுக்கு தேவையான ஒன்று அது என்ன வென்றால் அது இறப்பை அதனால் தான் இந்த உலகில் மிகவும் சிறிதாக கொலைகள்,கற்பழிப்புகள்,தாழ்த்தப்படுத்தல்,போன்ற மனிதனுக்கே மனிதன் மிகவும் அநீதி இழைகின்றான் அது சிறிதொரு இரைப்பை காரணமாகத்தான் அது இல்லை என்றால்  மனிதனே உலகில் இருக்கமாட்டார்கள் அவனுக்கு அந்த பசி உணர்வு மட்டும் தான் என்னடா இந்த கட்டுரை சம்மந்தமில்லாமல் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா.உண்டு பசிக்காக இரைப்பையில் சுரக்கும் அந்த அமிலம் (Hydrocloric Acid (HCL) அது சுரந்தால்தான் நமக்கு ஒரு பொக்கிஷமான சரியான செல் உருவாக ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.அதை எப்படி உருவாக்குவது என்று நம் பார்ப்போம்,நமக்கு மிகவும் எளிதில்,  கிடைக்கும் மூலிகைகள், வீட்டில்  சமையல் அறை   பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில்,   ஏப்பம், வயிற்று உப்புசம், பொருமல், வயிற்று எரிச்சல், பசியின்மை ஆகியவற்றை சரிசெய்யும் மருத்துவம் நமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ளப்போகிறேன் மேலும் நீங்கள் சாப்பிடும் உணவுகளில்  தேவையற்ற உணவை சாப்பிட கூடாது. நன்றாக பசித்த பின்னர் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் செரிமான பிரச்னை ஏற்படும். எனவே, சீரான உணவு எடுத்துகொள்வது மிகவும் அவசியம்.

                உடலுக்கு குளுமையை தரக்கூடியதும், செரிமானத்தை தூண்டும் தன்மை உடையதும், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்க கூடியதும், விஷக்கடிக்கு மருந்தாக அமைவதும், ஊட்டச்சத்து மிக்கதுமான ஒன்று அது கரும்பு.நீரழிவு நோய்,இளமைக்காகவும் பயன்படுத்தும் சுக்கும்,வைட்டமின் ஏ,சி,புற்றுநோய்,குடல் கேன்சர் போக்கவல்ல மிளகு,ஆண்மைக்கு மிகவும் நல்லதொரு ஏலம், உடல் எடை வாந்தி,பேதி போக்கவல்ல  சீரகம்,வைட்டமின் சி,பி,பாஸ்பரஸ் புரதம் கொண்ட எலுமிச்சய் போன்றவை வைத்து  பார்க்கலாம்,

                ஒரு டம்ளர் கரும்புச் சாறு எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது எழுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலக்கவும். உணவுக்கு பின்னர் இதை எடுத்துக் கொண்டால் ரத்தம் சுத்தமாகும். செரிமானத்தை தூண்டும். விசேஷ நிகழ்ச்சியின் பொது  சாப்பிடும் உணவுகள் செரிக்கவும், வயிற்று நோய்களில் இருந்து பாதுகாக்கவும் இது உதவுகிறது. இந்த சமயத்தில் கரும்பு அதிகளவில் கிடைக்கும் என்பதால் அதை நன்றாக பயன்படுத்தி கொள்ளலாம்.

                நூறு  மில்லி கரும்பு சாறுடன், இரண்டு  ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டால், உடல் எரிச்சல் அடங்கும். கை, கால் எரிச்சல் குணமாகும். பல்வேறு சிறப்புகளை கொண்ட கரும்புவின் வேரை பயன்படுத்தி  சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் வரை போக்கும் இதை மருந்து தயாரிக்கலாம்.
                தண்ணீருக்கு அடியில் இருக்கும் வேர் மிகவும் அசுத்தம் கலந்த காற்று மண் இருப்பதால்  தண்ணீரில் போட்டு நன்றாக அலசி   ஒருபிடி அளவுக்கு வேர் எடுத்து அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி.அதன் பின்னர் அதை கொதிக்க வைத்து  பின்னர், வடிகட்டி தேன் சேர்த்து குடித்தால் சிறுநீரில்  ஏற்படும் எரிச்சல், சிறுநீரோடு ரத்தம் கலந்து போகுதல், வலியோடு சிறுநீர் செல்லுதல் போன்றவை சரியாகும், நமக்கு கரும்பு கிடைக்கும்போது அதன் வேர்களை சேகரித்து காயவைத்து பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதை ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம

                ‘கரும்பு தின்ன கூலியா’ என்ற பழமொழிக்கு ஏற்ப அனைவரும் விரும்பி உண்ணக் கூடியது கரும்பு. மிகுந்த சுவையான இதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. செரிமானத்தை தூண்டுவதுடன், உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.

                கரும்பில் இருந்து எடுக்க கூடிய காடியை பயன்படுத்தி பூச்சி கடிக்கு  மருந்து தயாரிக்கிறார்கள்  கரும்பு அரைத்து தயாரிக்க கூடிய ஒன்று கரும்பு காடி . இது பொதுவாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த கரும்பு காடியை பூச்சிக்கடி, தேள்கடி உள்ள இடத்தில் தடவினால் விஷம் முறியும். வலியும் வீக்கமும் குறையும்.

                சுக்கு, மிளகு,  ஏலம், சீரகம் ஆகியவற்றை பொடி செய்து வைத்து, இந்த பொடியை அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து, அதில் சிறிது திப்பிலி சேர்த்து அதில் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். நீங்கள் மூன்று வேலை சாப்பிட பின்னர்  அரை மணி நேரம் கழித்து   குடித்துவர புளிஏப்பம் இல்லாமல் போகும். செரிமானம் சீர்படும். வயிறு பொருமல், உப்புசம் ஆகியவை சரியாகும்.

                 நெல்லிக்காயை பசையாக அரைத்து, அதிலிருந்து வரும் சாற்றை   இஞ்சி சாற்றோடு கலந்து அதோடு  பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து நன்றாக பாகு பதத்தில் எடுத்து . ஆறவைத்து கொள்ளவும். இந்த பாகு ஒரு பங்குக்கும், மூணு  பங்கு நீரும் சேர்த்து குடித்துவர செரியாமை,  குணமாகும். மேலும் புளி ஏப்பம் வயிறு உப்புவசம் வருவதும் நீங்கும்.

                உடல் நலமுடன் இருக்க வயிறு முறையாக இயங்குவது அவசியம்.
                உணவுப்பாதையில் ஏற்படும் உபாதைகளான அல்சர், வாயு தொல்லை போன்றவை நீங்க,ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். இதனுடன் வெள்ளை வெங்காயத்தின் பசை, சோற்றுக்கற்றாழையின் தோலை சீவி எடுக்கப்பட்ட பசை, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடித்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் செரிமானம் சீராகும்.   வயிற்று உப்புசம், புளிஏப்பம் சரியாகும். இதனால் உடல் நலம் பெறும். இப்பிரச்னைகளுக்கு சுக்கு, மிளகு, ஏலம், சீரகம் போன்றவை மருந்தாகிறது. நேரம் தவறி சாப்பிடுவது, எண்ணெய் பலகாரங்கள், மசாலா பொருட்கள் ஆகியவற்றை சாப்பிடுவதாலும், முறையற்ற உணவுப்பழக்கம், போதிய உடல் உழைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் புளிஏப்பம், வயிறு பொருமல், செரியாமை போன்றவை ஏற்படுகிறது.

                Monday, 24 April 2017

                கொசுவினால் வரும் பயன்

                 கொசுவினால் வரும் பயன்



                நம்மில் பலர் இரவு நேரங்களில் தூங்கும் பொழுது படுக்கை அறையில் கொசுக்கள் கடிக்கும் என்பதற்காக கொசுவிற்குப் பயந்து கொசுவதியும்,அதனுடைய சுருளும் வைத்து தூங்குகின்றோம் நன்றாக பார்க்கையில் அதுதான் மிகவும் பெரிய கேடு மனிதனுக்கு அதை மனிதன் பயன்படுத்துவதால் நைட்ரிக் ஆக்ஸைடு,போன்ற பொருள் நமது உடம்புக்குள் பொய் அதை மிகவும் மாசு படுத்த பட்ட காற்று மண்டலமாக மாத்தி அதை மனிதனுக்கு மிகவும் பெரிய கேடான ஒரு விஷமாக மாற்றிவிடுகிறது.

                 ஜன்னல் கதவை அடைத்து காற்று வசதி இல்லாமல் இருக்கும் பொழுது உடலில் நோய்கள் வரும் என்பதை நாம் இப்பொழுது புரிந்து கொண்டோம்  ஜன்னல் கதவை அடைத்து வைத்து படுத்தாலே நோய் வரும் என்றால் ஜன்னலையும் அடைத்து வைத்து அதனுள்ளே கொசுவர்த்தி போன்ற பொருள்களைப் பயன்படுத்தினால் கண்டிப்பாக மிகப்பெரிய நோயே வரும். கொசு சிறியதாக இருப்பதால் அன்றே அந்த கொசுவர்த்தியிலுள்ள விஷத்திற்கு இறந்து விடுகிறது. மனிதன் என்ற நாம் ஒரு வகையில் ஒரு பெரிய கொசுதான். நமது உயிர் போவதற்குச் சில வருடங்கள் மட்டுமே ஆகும். கொசுவர்த்தி என்பது மனித ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஒரு விஷம். இதைப் பயன்படுத்தவே கூடாது. தினமும் நாம் நம் செலவிலேயே கொசுவர்த்தி வாங்கி வந்து நமக்கு நாமே விஷம் சாப்பிடுகிறோம். இதைப் பற்றி எந்த மருத்துவரும் பேசுவது கிடையாது.

                 சிலர் கூறுவார்கள் கொசுவர்த்திப் பயன்படுத்தினால் மட்டுமே நான் நன்றாக தூங்குகிறேன் என்று. உண்மையில் கொசுவர்த்தியிலிருந்து வரும் புகை மனித உடலுக்குள் போகும்பொழுது நம்மை மயக்கமடைய செய்கிறது. கொசுவர்த்தி புகையில் உறங்கும் எவரும் உண்மையில் ஆரோக்கியமான தூக்கம் தூங்குவதே கிடையாது. அது ஒரு வகையான மயக்கம். சில சமயங்களில் கொசுவர்த்தியின் மயக்கத்திற்கு நாம் உணர்ச்சியற்று தூங்கிக் கொண்டிருப்போம். இப்பொழுது வரும் கொசுவர்த்திகளுக்கு கொசுக்கள் மயக்கம் அடைவது கிடையாது. அது நம்மை நன்றாக கடிக்கிறது. இரத்தத்தை முழுவதும் உறிஞ்சி எடுக்கிறது. நாம் கொசுவர்த்தியின் புகையில் மயக்கமாகிக் கிடப்பதால் நமக்கு அதுத் தெரிவது கூட கிடையாது. உண்மையில் கொசுவர்த்தி என்பது கொசுவுக்கு நல்லது என்றுதான் தோன்றுகிறது. மனிதனுக்குக் கண்டிப்பாக அது ஒரு கெட்ட விஷயம்.

                 பல மருத்துவர்கள் குழந்தைக்குச் சாம்பிராணி புகை போடக்கூடாது என்பதை வலியுறுத்திக் கூறுகிறார்கள். அரசாங்கம் கூட டி.வி, பேப்பர் போன்ற ஊடகங்களில் சாம்பிராணி புகை பயன்படுத்தாதீர்கள் என்று விளம்பரம் செய்து வருகிறார்கள். சாம்பிராணி புகை உடலுக்கு நல்லது மட்டுமே செய்யும். ஆனால் சாம்பிராணி பயன்படுத்தக் கூடாது என்று சொல்லும் மருத்துவர்களும், அரசாங்கமும் ஏன் கொசுவர்த்தியைப் பயன்படுத்தாதீர்கள், அதனால் உடலுக்கு மிகப்பெரிய நோய் வரும் என்று ஏன் பிரச்சாரம் செய்யாமல் இருக்கிறார்களா?

                ஜன்னலைத் திறந்து வைத்துப் படுக்க எங்களால் முடியும் என்று கூறுபவர்களுக்கு கொசுக்கடியில் இருந்து மட்டுமே தப்பிப்பதற்கு ஒரு சிறந்த யோசனை. கொசு வலையை கட்டி அதற்குள் படுப்பதால் கொசுக்கள் நம் அறைக்குள் வரும். ஆனால் கடிக்காது. கொசு வலையின் கீழ் பகுதியை நமது படுக்கைக்கு கீழே அல்லது பாயிற்கு கீழே லேசாக சுருட்டி அழுத்தி வைப்பதால் காலை வரை எந்த கொசுவும் கடிக்காது. காற்றைப் பொருத்தவரை மொத்தம் இரண்டே இரண்டு விஷயங்கள் மட்டும் ஞாபகம் வைத்து கொண்டால் போதும். (1) கொசுவர்த்திகள், லிக்யூட் கொசுவர்த்திகள், கொசுவர்த்திச் சுருள், மேட் போன்ற எந்த ரூபத்திலும் எந்தக் கொசுவர்த்தியும் பயன்படுத்தக்கூடாது. (2) 24 மணி நேரமும் வீடு, அலுவலகம், தொழிற்சாலை ஆகிய அனைத்து இடங்களிலும் நல்லக் காற்று உள்ளே வருவதற்கும், கெட்டக் காற்று வெளியேச் செல்வதற்கும் அமைப்பு உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்

                 எனவே, இனிமேல் கொசுவர்த்தியை நாம் பற்ற வைத்துப் படுப்பதும் அதைச் சாப்பிட்டு படுப்பதும் இரண்டும் ஒன்றுதான். லிக்யூட் கொசுவர்த்திகள் கரண்டின் மூலமாக சொருகி பயன்படுத்துவதை விட இனிமேல் தயவு செய்து குடித்துவிட்டுப் படுத்து விடுங்கள் இரண்டும் ஒன்றுதான். கொசுவர்த்தியில் இருக்கும் கெட்ட விசயங்கள் எரிந்து இரவு முழுவதும் காற்றோடுக் கலந்து நம் மூக்கின் வழியாக நுரையீரலுக்கு சென்று இரத்தத்தில் கலக்கிறது. எனவே, தயவு செய்து கொசுவர்த்தியை எந்த ரூபத்திலும் பயன்படுத்த வேண்டாம்.






                Saturday, 22 April 2017

                வெட்டிவேரின் மருந்து

                 வெட்டிவேரின்  மருந்து :




                வெட்டிவேர் சிறிதேனும் நாம் ஆராச்சி செய்வோம் வாருங்கள் இது ஒரு  மருவி வெட்டிவேர் என்று சொல்லி வருகிறோம் இது அத்தனையும் மருத்துவ குணம் உடையது வெயில் காலத்தில் இதை வாசலில் வைத்து நீர் தெளித்து வந்தால் குளிர்ந்த காற்று வீசும் நல்ல நறுமணம் வரும் வெயில் காலத்தில் சருமத்தில் வரும் நோய்களுக்கு வரும் மருந்து இது வியர்வை சுரத்தை நீக்க வல்லது  கொளுத்தும் கத்தரி வெயிலில் இருந்து தப்பிக்க, குளிர்ச்சியான ஆகாரங்களை பயன்படுத்துவது அவசியம். அந்த வகையில் மண் பானை தண்ணீர்   உடலுக்கு மிகவும் நல்லது. இந்த தண்ணீரில் வெட்டி வேரை சேர்க்கும் போது கிருமிகள் அழிந்து நீர் சுத்தமாகும். நல்ல மணம் கிடைக்கும். உடல்  சூட்டை குறைக்கும் தன்மை வெட்டி வேருக்கு உண்டு. வெட்டிவேர் மருத்துவக்குணம் உள்ள ஒரு மூலிகை கொண்டதாகும்      அதன் நறுமணத்துக்காகப் பெண்கள் தலையில் சூடிக்கொள்வது முன்னோதொரு காலத்தில்  இருந்திருக்கிறது. இதனால்தானோ என்னவோ பெண்களின் கூந்தலுக்கு வாசம் உண்டு  என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். மலர்கள் மற்றும் இதுபோன்ற நறுமணம் வீசும் இயற்கைப் பொருட்களைச் சூடிக்கொள்வதால்தான் பெண்களின் கூந்தலில் நறுமணம் வீணையை கொண்டது.

                கோடைகாலத்தில் நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால் அவதிப் படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப்  பொடிசெய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி செர்த்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி. அருந்தினால் தீர்வு கிடைக்கும்..முகம் முழுக்க  அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, நல்ல மருந்தாக இருக்கிறது இந்த வெட்டிவேர் விழுது வெட்டிவேருக்கு நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன.          இது பல முறைகளில்    மனிதர்களுக்குப் பயன்பட்டு வருகிறது. வெட்டிவேர் (Chrysopogon zizanioides)... புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரம். குருவேர், உசிர், வீராணம் என வேறு பெயர்களும் இதற்கு உண்டு. இந்தியாதான் இதற்க்கு முக்கிய வாழ்விடம்   கொண்ட வெட்டிவேர் ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. உயரமான தண்டையும் நிறைந்துள்ள ஒரு தாவரம் . இதன் பூக்கள் பழுப்பு கலந்த ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர்22டில்  இருந்து 4 மீட்டர் ஆழம் வரை செல்லக் கூடியது.  வெட்டிவேர் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு உயிரினம் என்று கூட சொல்லலாம்.

                இது அனைத்து இடத்திலும் இருக்கக்கூடிய ஒரு தாவரம் . மணலிலும் இடங்களிலும் ஆற்றிலும் இருக்கக்கூடிய ஒன்று . நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல வளரக்கூடியது.4  முதல் 7 அடி உயரம் வரை வளரும். வேர் மிகவும் மொத்தமாக இருக்கும்.  வெட்டிவேர் என்று இதற்க்கு பெயர் வரக்காரணம் என்ன வென்றால் இதன் வேரை வெட்டி எடுத்ததும் புல்லையும் வேரையும் வெட்டி அதன் நடுவே உள்ள துண்டுப்பகுதியை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால்

                 இதை ஒரு வருடத்தில் வெட்டி எடுக்கலாம். இது வேர் கறுப்பு நிறமாக மணத்துடன் இருக்கும்.வேர்க்குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதன் பூ, ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் 2 முதல் 4 1/2 மீட்டர் ஆழம் வரை செல்லும். வெட்டிவேர், மண் அரிப்பைத் தடுக்கும்.  மேலும் பொதுவாக உடலில் வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கி வெப்பத்தை அகற்றக்கூடியது, மாடுகள் விருப்பத்திற்கு உள்ள தீவனம் இதன் மேல் வளரும் புல்பூண்டு.


                இதிலிருந்து எடுக்கப்படும் தைலமும் நறுமணம் கொண்டது. வெட்டிவேர் குளிர்ச்சி தரக்கூடிய ஒன்று  நறுமணம் வீசி உடலுக்கு உற்சாகத்தைத் தரக்கூடியது.இதனை மணமூட்டுவதற்காகத் தைலங்கள், குளியல் சோப்புகளில் பயன்படுத்துகிறார்கள்.இது காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.

                வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். வெட்டிவேரை நன்றாக உலர்த்திப் பொடி செய்து இருநூறு மில்லி கிராம் முதல்நானூறு மில்லி கிராம் அளவு எடுத்து நீரில் ஊறப்போட்டு, அந்த நீரை முப்பது  மில்லி முதல்அறுபதினைத்து மில்லி வீதம் குடித்து வர காய்ச்சல் மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் கட்டுப்படும்.வெட்டிவேரில் தயாரிக்கப்பட்ட எண்ணெயை கை, கால் பிடிப்புகளுக்குத் தடவி வர நல்ல குணம் தெரியும்

                முன் சென்றவர்கள் இந்த  வெட்டிவேரைச் சேர்த்து ஊற வைத்த பானைத் தண்ணீரை அருந்தி வெயிலின் வெக்கையிலிருந்து  . இந்தச் சில்லென்ற பானைத் தண்ணீர் ஏற்படுத்தாது. வெட்டிவேர் ஊறிய தண்ணீரைக் குடிப்பதால் சர்க்கரை நோய் கட்டுப்படும் திறமை வல்லது இது.

                காய்ச்சல் மற்றும்வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும்.  வாந்தி பேதிக்கும் இது  நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும். வெட்டிவேர் கவலையை நீக்கி மனதை அமைதிப்படுத்தும், மன  அழுத்தத்தை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. வெட்டிவேரில் தயாரிக்கப்படும் எண்ணெய் முக அழகை கூட்டுவதோடு தோலில் ஏற்படும் காயங்களை  குணப்படுத்துகிறது.

                முகப்பருக்களுக்கும் வெட்டிவேர் நல்லதொரு மருந்தாகப் பயன்படுகிறது. சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்ட வெட்டிவேர் ஒரு டீஸ்பூன், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒரு டீஸ்பூன் சேர்த்து முந்தின நாள் இரவே கொதிநீரில் ஊறவையுங்கள். மறுநாள் காலையில் அதை அம்மியில் மையாக அரைத்துப் பருக்களின்மீது தடவி வர வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்து விடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது

                எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்தால் முகத்தில்  எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும். வெட்டிவேரை வாங்கி பயன்படுத்துங்க ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் சிறந்தது.

                மருத்துவக்குணம் கொண்ட வெட்டிவேரில் பலவிதமான பாய், பொம்மைகள், செருப்புகள், பாய்கள், செண்டுகள் , சோப்பு உள்ளிட்ட பொருட்கள் உருவாகின்றன.