தொழுநோய்
தொழுநோய் காரணங்கள்
இது வருவதன் காரணம் :
- ஹேன்சென் நோய் எனப்படும் தொழுநோய், மைக்கோபேக்டீரியம் லெப்ரேயாவால் ஏற்படும் நீடித்தத் தொற்று நோயாகும். இது குறிப்பாக தோலையும், நுனி நரம்புகளையும் பாதிக்கிறது. முடிச்சுகளும் புள்ளிகளும் ஏற்பட்டு, பெரிதாகிப் பரந்து, உணர்விழந்து, பக்கவாதம் ஏற்படுத்துவது இந்நோய்த் தன்மை.
- இந்த கிருமி பொதுவாக காற்றில் இருந்து சுவாசம் வழியாக உள்ளே சென்று எதிர்ப்பு சக்தி குறையும் நேரத்தில் யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம்
அறிகுறிகள் :
- மூளைக்கு வெளிப்புறம் உள்ள நரம்புகளையும், தொழுநோய் கைகளையும் பாதிக்கலாம் மற்றும் மூக்கின் மெல்லிய திசுக்களையும் பாதிக்கலாம். உருச்சிதைக்கும் சரும புண், கட்டிகள், பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆனாலும் கரையாத புடைப்பு போன்றவை தொழுநோயின் முக்கிய அறிகுறியாகும்
- உணர்ச்சி இல்லா வெண்படை
- நரம்புகள் வீக்கம் அடையும்
- சில நேரங்களில் இந்த படைகளின் மேல் முடி உதிர்ந்து விடும் வேர்வை நின்றுவிடும்
- எண்ணெய் பூசியது போன்ற பளபளப்பான மினுமினுப்பான தோல் தோற்றம்
- அரிப்பு இல்லாத சிவந்த அல்லது சற்று வெளிறிய உணர்ச்சி அற்ற தேமல்கள்
- காதின் பின் பகுதி (மடல்) லேசாக தடித்து இருத்தல்
- தொழுநோய் பற்றி பெரும்பாலனபேர் பலதும் கருத்தும் சொல்வதுண்டு அதெல்லாம் அறிகுறிகளும் அதிகமாக இருப்பதாக சொல்வார்கள் அது மிகவும் தவறு அறிகுறி அதிகமாக வருவதில்லை
இதை தீர்க்க மருத்துவ முறைகள் :
இதை முற்றிலும் நூறு சதவீதமும் குணப்படுத்திவிடலாம் பயப்பட தேவை இல்லை
டாப்சோன் மற்றும்( Rifapicin &Dapsone) ரிஃபாம்பிசியன் மாத்திரைகள் ஆறு மாதம் முதல் பனிரெண்டு மாதம் வரை உட்கொண்டால் நூறு சதவீதம் இந்த நோயிலிருந்து குணமடைந்து விடலாம்
No comments:
Post a Comment