Saturday, 6 May 2017

நுங்கு சாப்பிடுவதால் உடம்பின் மாற்றங்கள்:

நுங்கு சாப்பிடுவதால் உடம்பின் மாற்றங்கள்:



மறந்து வரும் பாரம்பரியங்களில் பனை மரமும் ஓன்று. 'பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம்’ என்னும் தகவல் இந்த தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அழிந்து வரும் இயற்கைச் சூழலில் பனைமரமும் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இதனால், அதன் உற்பத்தி குறைந்தாலும், நுங்கு தரும் நன்மைகள் ஏராளம்'' என்கிற செய்திகளை நான் பல வலயத்தளங்களில் படித்துள்ளேன்  நுங்கு மற்றும் பதநீரில் உள்ள நன்மைகள் குறித்து எனக்கு தெரிந்த சில விஷயங்கள்
வெயில் கால சூட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு இயற்கை தந்த வரம்தான் பனைமரம். கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியை நாடுவோம். நம் உடலுக்கு தேவையான நீர்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.இந்த பனைமரத்தின்  இளம் காய்களாக இருக்கையில் நுங்கு என அழைக்கப்படுகிறது. நுங்குக்கு என ஒரு நுணுப்பமான பருவம் உள்ளது. இந்தப் பருவத்திலே நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவநிலை கலந்த திண்ம விதையானது மிகவும் இனிப்பாகவும், உண்பதற்கு சுவையானதாகவும் இருக்கும். இந்தப் பருவம் தாண்டி சற்று முற்றி விட்டால் இதன் சுவை குன்றி விடும். நன்கு முற்றி விட்ட பின் இதனை சீக்காய் என்பர். சீக்காய் திரவநிலை குறைந்து இறுக்கமாகக் காணப்படும். இதை உண்பதால் வயிற்றில் உபாதை ஏற்படும் என நம்பப் படுகிறது. சீக்காயை சிறுசிறு துண்டுகளாக்கி ஆடு, மாடுகளுக்கு உணவாகவும் கொடுப்பார்கள்.
இந்த இந்தியாவில் கோடைக்காலத்தில் தெருக்களில் விற்றுக் கொண்டு வரும் பழங்களில் ஒன்று தான் நுங்கு. இந்த நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.
என்பது நம்மில் எதனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை
வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் தான் பனைமரம். இது நமது தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் இது மிகவும் அதிகமாக இது உள்ளது,
கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு. பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.
நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.
நுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் நிறைந்தது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நுங்கு சாப்பிடலாம்.
சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக, எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால், தாகம் அடங்கிவிடும்
குறிப்பாக இது  உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை இது தன்னுள் அதிகம் உள்ளடக்கியுள்ளது. மேலும் உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளது.
அதிலும் கோடையில் அதிகப்படியான வெப்பத்தினால் சின்னம்மை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அப்போது நுங்கு சாப்பிட்டால், சின்னம்மையினால் ஏற்படும் அரிப்புக்களை தடுத்து, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள உடலுக்கு குளிர்ச்சித் தரும் இயற்கை உணவு இந்த  நுங்குவில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன.
1.எடையை குறைக்கும் :
கோடையில் மிகவும் சுலபமாக உங்கள்  உடல் எடையைக் குறைக்கலாம். ஏனெனில் இக்காலத்தில் உடல் எடையை குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்குமிகவும் பெரிது அளிக்கிறது . அதில் ஒன்று தான் நுங்கு சாப்பிடுவது. நுங்கு சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான தண்ணீரானது வயிற்றை நிரப்பி, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும், இதனால் கொஞ்சம் உடம்பு குறைய வாய்ப்பு உள்ளது
2.சின்னம்மை :
சின்னம்மை வராமல் தடுக்க வேண்டுமானாலும் சரி, வந்த சின்னம்மையை விரைவில் குணப்படுத்த வேண்டும் என்றாலும்  சரி, நுங்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
3.வெயிலில்  மயக்கம் :
சிலருக்கு வெயிலில் செல்லும் போது அடிக்கடி மயக்கம் போடுவார்கள். அத்தகையவர்கள் நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, நாவறண்டு போகாமல் மயக்கம் ஏற்படாது.
 4.கர்ப்ப காலம் :
கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிடுவதன் மூலம் செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
5.சோர்வு :

கோடையில் விரைவில் சோர்வடைந்துவிடுவோம்தோலுக்கு . இத்தகைய சோர்வை நுங்கு தருவதில்லை.

6.மார்பக புற்றுநோய் :
நுங்குவில் ஆந்தோசையனின் என்னும் பைட்டோ கெமிக்கல் உள்ளது. இவை மார்பக புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி கொண்டவை.
7.செரிமான பிரச்சனைகள் :
செரிமான பிரச்சனை உள்ளவர்கள், நுங்கு சாப்பிட்டு வந்தால், அது செரிமான மண்டலத்தை சீராக செயல்பட வைத்து, உடலில்  செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.
8.வியர்குரு :
நுங்கு சாப்பிட்டால், உடல் வெப்பம் குறைந்து, உடலில் வந்துள்ள வியர்குரு போய்விடும்.
9.வெயில் கொப்பளம் :
கோடையில் பலருக்கு வெயில் கொப்பளம் வரும். இத்தகைய கொப்பளத்தை வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுங்கள்.
10.ஆற்றலை அதிகரிக்கும் :
நுங்குவில் உள்ள சரியான கனிமச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும், உடலின் குளுக்கோஸ் அளவை சீராக வைத்து, உடலை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள உதவிபுரியும்.
11.மலச்சிக்கல் :
மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், காலையில் வெறும் வயிற்றில் நுங்கு சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

No comments:

Post a Comment