Thursday, 11 May 2017

இஞ்சியின் அற்புதம்:


இஞ்சியின்  அற்புதம்: 






உணவின் ருசி கருதி இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண உள்ள ஒரு பொருள் அது இஞ்சி. இது ஒரு மருத்துவ மூலிகை கொண்டதாகும் இந்த இளமை யானது நிலைத்திருக்க வேண்டுமா
இஞ்சியே அதற்கு மிக முக்கியமான தீர்வு என்று நம் முன்னோர்கள் கூறுவதுண்டு.அப்பேற்பட்ட இந்த இஞ்சி   இரு ஆண்டுகள் வரை வாழும் சிறுசெடி. மணற்பாங்கான நிலங்களில் இஞ்சி ஏராளமாக பயிராகின்றது. தமிழகம், பஞ்சாப் மாநிலங்களிலும், வங்காள தேசத்திலும் இந்தியா மற்றும் பிற தேசங்களின் அதிகமாக விளையாடுகிறார்கள்.கிழங்குகளே பொதுவாக இஞ்சி எனவும் கொள்ளப்படும்  இவை, மருத்துவப் பண்பும்,உணவும்   உபயோகமும் உள்ளவை. வாசனைக்காகவும், காரத்திற்காகவும் இவை உணவில் சேர்க்கப்படுபவை ஆகும். நன்றாக இந்த இஞ்சியை  காயவைத்துப் பதப்படுத்தப்பட்டு  இஞ்சியின் கிழங்குகளே பிரித்து எடுத்தால் அது சுக்கு ஆகும். இஞ்சியின் எல்லா மருத்துவக் குணங்களும் இதற்கும் உண்டு. சுக்கு, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றியது.
இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம் என்றும், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பதும் பழைய பாடல் வரிகளில் வருகின்றது . இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.
இந்த இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்கள் உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் நினைக்க முடியாத பல பிரச்சனைகளுக்கு உள்ளாக வேண்டியுள்ளது. அதில் குறிப்பாக உடல் எடையால் தான் பலரும் கஷ்டப்படுகின்றனர். ஒருவர்  உடல் எடை அளவுக்கு அதிகமானால், அதைத் தொடர்ந்து இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன அழுத்தம், இதய பிரச்சனைகள், கொலஸ்ட்ரால் என பல விதமான பிரச்சனைகள் நமக்கு நஷ்டத்தை கொடுத்து விடுகிறது.
இந்த பிரச்சனைகளெல்லாம் வராமல் இருக்க இயற்கை வைத்தியங்களில்னால் கொண்டு தயாரிக்க பட்ட  இஞ்சி சாற்றின் தேன் கலந்து குடிப்பது நல்லது. அனைவருக்கும் இஞ்சி மற்றும் தேனின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியும். மேலும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் சிகிச்சையளிக்க இவை பெரிதும் உதவியாக உள்ளன.
அஜீரணம், பசியின்மை, வயிறு பொருமல், வயிற்று வலி, சளி, தலைவலி, மயக்கம், இருமல் இதை கொண்டு குணமடைய வைக்கலாம்.. பச்சை கிழங்கு இஞ்சியாகவும், பதப்படுத்தி காய வைத்த சுக்கும்  நமக்கு பயன் அளிக்கிறது.

மருத்துவப்பயன்கள்:



  • இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து, அந்த நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.



  •  இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.



  • இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி, காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு, வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.



  • இஞ்சி சாறில் தேன் கலந்து, தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர, நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.



  • மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.



  • தற்போது கண்ட ஜங்க் உணவுகளை உட்கொண்டு, செரிமான மண்டலத்தினால் சீராக செயல்பட முடியாமல், நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனை சரிசெய்ய, இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வருவது நல்ல பலனைத் தரும்.



இஞ்சிக் கிழங்குகள் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை.
இவை, வியர்வை மற்றும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் பசித்தூண்டியாகவும் வாயுவை அகற்றும் மருந்தாகவும் செயல்படும். காசம், கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் போக்கும்.

முற்றிய பசுமையான இஞ்சியின் மேல் தோலைச் சீவி நீக்கவும். பின்னர், சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமான தேனில், இஞ்சித் துண்டுகள் மூழ்கியிருக்குமாறு ஊறவைக்க வேண்டும்.

நன்கு ஊறிய பின்னர் தினமும் இரண்டு துண்டுகள் வீதம், உணவிற்கு முன்னர் மென்று சாப்பிட வேண்டும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்திற்கு இஞ்சிச் சாற்றை தொப்புளைச் சுற்றிப் பற்றுப்போட வேண்டும்.

வயிற்று வலி மற்றும் வயிறு கனமாக இருத்தல் குணமாக இஞ்சிச் சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி சாறுடன் சிறிதளவு தேன் கலந்து, 2 அல்லது 3 நாட்களுக்குத் தினமும் மூன்று வேளைகள் குடிக்க வேண்டும்.

சளியுடன் கூடிய இருமல் கட்டுப்பட, இஞ்சியை இடித்துச் சாறு எடுக்கவும். ஒரு தேக் கரண்டி அளவு சாறுடன், சிறிதளவு தேன் கலந்து, தினமும் மூன்று வேளைகள், 7 நாட்களுக்குப் பருகவும்.

இளமை நிலைத்திருக்க, இஞ்சியைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, தேனில் 48 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.






No comments:

Post a Comment