Monday, 1 May 2017

முள்ளங்கியின் மருத்துவ குணம்

முள்ளங்கியின் மருத்துவ குணம்:




உணவே மருந்து மருந்தே உணவு என்று சொல்வார்கள் நம்முடைய  முன்னோர்கள். அந்த வகையில் நாம் தினமும் உண்ணும் காய் கறி  வகைகளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. அதே போல் முள்ளங்கியில் மட்டும்  பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் உள்ளன.
முள்ளங்கி வெள்ளை,இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை.  சிவப்பு, ஊதா அல்லது கருப்பு ஆகிய நிறங்களில் இருக்கின்றன. மற்றும்  நீண்ட மற்றும் உருளை அல்லது வட்ட வடிவிலும் இருக்கிறது. முள்ளங்கி விதைகளில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் பொருட்கள் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.முள்ளங்கியின் அறிவியல் பெயர் ரபானஸ் சடைவஸ் என்பதாகும். இது பிராசிகாசியா தாவர குடும்பத்தை சேர்ந்தது.மூன்றாம் நூற்றாண்டில் இதன் பயன்பாடு இருந்ததாக, வரலாற்றுப் பதிவுகளால்அறிய முடிகிறது.மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட முள்ளங்கிக்கிழங்கின் தாவர விஞ்ஞானப் பெயர், ராப்ஹான்ஸ் சாட்டிவஸ் என்பதாகும்.

பண்டைக்காலத்தில் எகிப்து, கிரீஸ், ரோம் போன்ற நாடுகளில் முள்ளங்கி அதிகம் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியா, இலங்கை உட்பட உலகில் உள்ள வெப்பமண்டலப் பிரதேச நாடுகள் அனைத்திலும் முள்ளங்கிக் கிழங்கு நன்கு பயிர் செய்யப்படுகிறது.
பல வியாதிகளை தடுக்கும் மருந்தாகவும்  முள்ளங்கி பயன்படுகிறது இது
மஞ்சள் காமாலை,மூல வியாதி,எடை இழப்பு,புற்றுநோய்,வெந்நோய், மலச்சிக்கல் போன்றவற்றிற்கும் ஆயுர்வேதத்தில் இது சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.
முள்ளங்கி கீரை,குள்ளங்கி கிழங்கு,முள்ளங்கி சாறு போன்றவற்றிலிருந்தும் மருத்துவப்பயன் அதிகமாக இருக்கிறது.முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் விட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இப்படிப்பட்ட முள்ளங்கி சாற்றை  பற்றி உள்ள மருத்துவ பயனை சிறிது பாப்போம்.



முள்ளங்கியை மாதம் ஒரு முறை மட்டும் ஜூஸ் செய்து குடித்தால்
  •  உடலின் உள்ள அழுக்குகள், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, புரோஸ்டேட் போன்ற உறுப்புகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் மற்றும் வைரஸ்களை வெளியேற்ற உதவுகிறது.

  • முள்ளங்கி ஜூஸ் நமது உடலில் உள்ள பித்த நீரின் அளவு மற்றும் செரிமான மண்டலத்தை சீராக்கி, செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

  • முள்ளங்கி ஜூஸை மாதத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால், மலச்சிக்கல் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற பிரச்சனை எப்போதுமே வராமல் தடுக்க உதவுகிறது.

  • முள்ளங்கியில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளதால், இது வயிறு, குடல், சிறுநீரகம் போன்ற இடங்களில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.


  • முள்ளங்கி ஜூஸை மட்டும் குடிக்க முடியவில்லை என்றாலும் முள்ளங்கி ஜூஸில், கேரட் அல்லது ஆப்பிள் ஜூஸை கலந்து குடிக்கலாம்.



  • முள்ளங்கி ஜூஸை மட்டும் குடிக்க முடியவில்லை என்றாலும் முள்ளங்கி ஜூஸில், கேரட் அல்லது ஆப்பிள் ஜூஸை கலந்து குடிக்கலாம்.


  • முள்ளங்கி சாற்றை பருகி வர நீண்ட காலமாக இருக்கும்.வயிறுக்கோளாறு,பேதி,தலைவலி,தூக்கம்மின்மை,ஆகிய துன்பங்களில் இருந்து விடுதலை பெறலாம்.


  • குழந்தைகளுக்கு சிறிய வயதில் இருந்து முள்ளங்கியை சேர்த்து வந்தால் அந்த குழந்தையுடைய மூளைவளர்ச்சி நன்றாக இருக்கும்.



  • முள்ளங்கி சாற்றை சர்க்கரை யோடு சேர்ந்து பருகுவதால் இருமல் குணமாகும்.



  • முடி உதிர்தல், பொடுகுத்தொல்லை போன்ற வற்றில் இருந்து முள்ளங்கி சாற்று நல்ல ஒரு தீர்வை தரும்.



  • இந்த சாற்றை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் வெகுநாளாக இருக்கும் மூல நோய் கூட குணமாகும்.



குறிப்பு:

  • இந்த முள்ளங்கியில் அடங்கி உள்ள மிக முக்கியமான சத்துக்களாவன பைபர்,பொட்டாசியம்,காப்பர்,கால்சியம்,மக்னீசியம்,மாங்கனீஸ்,விட்டமின் பி6,ரிபோபிளவின்,ஆகியவை ஆகும்.


























No comments:

Post a Comment