தேனின் பயன்கள்
முன்னுரை
தேன் இறைவன் படைப்பிலே ஒரு மிகசிறந்த படைப்பு மனிதன். வாழ்வில் இன்றி அமையாத ஒன்று இயற்கையின் ஒரு மிக பெரிய பங்கு தேனீ. தேனீயிடம் இருந்து கிடைக்கக்கூடிய ஒரு அமிர்தம் தேன் இப்படி பல வகைகளாக சொல்லிக்கொண்டே போகலாம். தேனீயை மற்றும் தேன் பற்றி தேனீ பூக்களில் இருந்துதான் திரவத்தை கொண்டு தருகிறது என்றோ சொல்லி இருந்தாலும் அல்லது அதனுடைய கழிவுதான் தேன் என்று சொல்லி இருந்தாலோ அதை ஆராய்வதை ஒரு சாதாரண மனிதனுக்கு அவசியம் இல்லாத ஒன்று. ஆனால் உணவில் நீங்கள் தினமும் உங்கள் உணவில் மூலமாகவோ இல்லை நேரடியாகவோ நீங்கள் தேனை எடுத்து கொள்வது. நீங்கள் மறைமுகமாக உங்கள் உடம்புக்கு நல்லது மேற்கொள்கிறீர்கள். மேலும் தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, நுண்ணுயிர்களை (கிருமிகளை) வளர விடுவது இல்லை.நாவல், வேம்பு, முருங்கை, மா, தும்பை, பூர்க்கு, புளியம், துளசி, பூண்டு மற்றும் வெங்காரமது போன்ற 300-க்கும் அதிகமான தேன் வகைகள் உள்ளன. மிக சிறந்த தேனில் 16 முதல் 18 சதவிகிதமே நீர் இருக்கும்.தேனின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து,தேனின் நிறம் மஞ்சள் நிறமுடையதாய் இருக்க வேண்டும் . வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும்.
குறிப்பு
குறிப்பு :உணவின் பழக்க வழக்கம் என்பது மனதை சார்ந்தது .மனதில் ஒரு பிம்பம் ஒன்று வைத்து கொண்டு எதையும் உட்கொள்ளாதீர்கள். அது அமிர்தம் இல்லை விஷம்தான்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. என்பது அளவை பொறுத்தது மற்றும் இல்லை மனதை பொருத்தும் கூடத்தான்.
உணவு உண்ணும் நேரம் மனதும் செயலும் உணவை நோக்கி இருக்கவேண்டும். அப்போதுதான் உங்களுடைய உணவு செரிமானம் ஆகும்
தேனின் பயன்கள் :
1. செரிப்புத் தன்மையை உண்டாக்கவும் , மலச்சிக்கலை போக்கவும் செய்கிறது
2.தேனுடன் இஞ்சி, பேரிச்சம்பழத்தையும் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்
3.தேனும், சூடான வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும்.
4.தேனுடன் , முட்டை,பால் கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா நோயில் இருந்து தப்பலாம்
5.குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தி வர கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு எப்போதும் ஒரே போன்று கிடைக்கும்.
6.தேன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்: தேன், ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
7.இது ரத்தம் உறைதலை தடுத்து, மாரடைப்பு வராமல் தடுக்கும் திறன் கொண்டது. .
8.தேன் பச்சை தண்ணீரில் இரவில் கலந்து குடித்து வர உடல் பருமன் கூடும்
9.மிகவும் அவசியமான ஒன்று அது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதும் மட்டும் இல்லாமல் புற்றுநோயினை தடுக்கும் சக்தி பெற்றது
10.தேன் ரத்தத்தில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது
11. தேனை வெந்நீரில் இரண்டு டி ஸ்பூன் கலந்து குடித்து வர இருமல் சரியாகும்
12.தேனை சூடு படுத்தி சாப்பிடக்கூடாது .
13.தேனை நெய், எண்ணெய் போன்ற உணவுடன் உடன் சம அளவு சேர்த்துச் சாப்பிடக் கூடாது.
14.ரோஜாப்பூ, கல்கண்டு, தேன் கலந்து சாப்பிட்டால், உடல் வெப்பம் தணியும்.
15.பேரீத்தம்பழம் மற்றும் தேன் கலந்து நன்றாக ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்
16.ரோஜாப்புகுல்கந்து என்ற பொருள் கடையில் விக்கிற பொருள் குழந்தை இல்லாத தம்பதியர்கள் உண்பார்கள் அதிலும் தேன் உள்ளது
17.பிறந்த குழந்தைகளுக்குத் அந்த குழந்தை நன்றாக நடக்க வருகிற வரை தேன் கொடுக்கக் கூடாது.
18.சர்க்கரை நோயாளிகள் மட்டும் இல்லை எல்லோரும் அளவுடன் சாப்பிடுங்கள். தேன் அதிக அளவு எடுத்துக்கொள்ளக் கூடாது.
19.ஏதேனும் பழங்களுடன் தேன் கலந்து இரவு நேரம் சாப்பிட்டு வர, தாம்பத்தியத்திற்கு நல்லது.
20.அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களின் தேன் சேர்க்கப்பட்டு உள்ளது. தேன் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்வதால் இது சிறந்த மாய்ஸ்சுரைசராக உள்ளது. தேனை தினமும் உணவில் பயன்படுத்தினால் உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment