Sunday, 26 December 2021

உடல் மற்றும் முடியை பற்றி சில அழகு குறிப்புகுகள்

  

உடல் மற்றும் முடியை பற்றி சில அழகு குறிப்புகுகள் :







1:  எண்ணெய்,  முடி வளர்வதற்கு உதவுவதில்லை, முடியை படிய  வைப்பதற்கு மட்டுமே உதவுகிறது. இதை பயன்படுத்துவதால் பிரச்சனை இல்லை. அனால் கண்ட கண்ட வேர்கள், கீரைகள் கலந்த எண்ணெய்யை பயன்படுத்த கூடாது. போடுகினால் பாதிக்கப்பட்டவர்கள், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தக்கூடாது, ஏனென்றால் அது உடம்பிற்கு சூடு நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

2. கண்டீஷனருடன் எந்த ஷாம்புவையும் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதால் முடி உதிர்வதில்லை. ஆனால் ஒரே ஷாம்புவாக இருக்க வேண்டும். ஷாம்பு தலையை மட்டும் சுத்தம் பண்ணவே தவிர அதில் கலக்கப்படும் புரதம், வைட்டமின் முடிக்கு இல்லை அது வளரவோ நமக்கு எந்த ஒரு பயனும்தாராது.

3. தலை முடிக்கு நமக்கு ஒத்துக்கொள்ளும் எந்த வகை ஜெல்லும் பயன்படுத்தலாம். பிரச்சனைகள் வருவதில்லை.

4. அமோனியா இல்லாத பி.பி.டி. இல்லாத அல்லது குறைந்த அளவில் உள்ள அதாவது (0.5%) முடி சாயத்தை பயன்படுத்தவேண்டும்.அப்படி பயன்படுத்துவதால் முடி நன்றாக இருக்கும்.     

5. வைட்டமின், சி. மற்றும் புரதச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை சாப்பிடவேண்டும். உதாரணமாக, (எலுமிச்சை,ஆரஞ்சு,பேரிச்சை,வெள்ளரி,பருப்புவகைகள்,முட்டை,பால்,போன்றவை ஆகும்.)

6. மஞ்சள், வெப்பேலை மற்றும் பலவித கை மருந்துகள் கலந்த எந்த சோப்பு வகைகளையும் தவிர்ப்பது நல்லது. நீங்கள் பயன்படுத்தும் சோப்பினால் உடலில் அரிப்போ, தடிப்போ,வெள்ளைப்படையோ,வரவில்லையென்றால் அதே சோப்பை பயன்படுத்தலாம். நிறைய நொரை தருகிறது, வாசனை தருகிறது, என்று உபயோகப்படுத்தினால் உடம்பிற்கு மட்டும் இல்லை தலைமுடிக்கும் பாதிப்பு. நம் தோலுக்கு ஏற்றாற்போல் டி.பி.எஸ்.அளவு குறைந்த சோப்புகள் பயன்படுத்தவும்.

7. வெயிலில் போகும்போது பவுடர் பயன்படுத்துவது தவறில்லை.ஏனென்றால் பவுடர் நம் மேனியை சூரிய கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.

8. அழகு சாதனம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு. ஆல்கஹால் மற்றும் எண்ணெய் இல்லாத தண்ணீர் கலவை உள்ள களிம்பை பயன்படுத்தலாம்.

9. தண்ணீர் கலவை உள்ள (Water Based) சன்ஸ்க்ரீன் (SPF less than 15)  3 மணி நேரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தவேண்டும்.

10. மஞ்சள் பயன்படுத்தாதீர்கள்.அப்படியே பயன்படுத்தினால் வெயிலில் வெளியே செல்ல வேண்டாம்.

11. நல்லெண்ணெய் குளியல் வாரம் ஒருமுறை தேய்த்து குளித்தால் தோலுக்கு நல்லது. தலையில் பொடுகு வராமல் நம்மை பாதுகாக்கும்.

    No comments:

    Post a Comment