அகத்திக்கீரை
குறிப்பு
அகத்திகீரை என்னும் சிறுமரத்தை சேர்ந்தது குறிப்பாக தமிழ்நாடு உட்பட தென்னிந்திய சமையலில் அகத்திக்கீரை அதிகமாக பயன்படுகிறது
அகத்திக் கீரையில் புரதமும்,கொழுப்பும், தாது உப்புகளும் இருக்கிறது
மேலும் அகத்திக்கீரையில் மாவுச் சத்து, இரும்புச் சத்து, ஆகியவையும் உள்ளன.
அகத்திக்கீரையில் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன.
அகத்திக்கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும்.
இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ அதிகளவு உள்ளது. ...
கண்களின் பார்வை திறனுக்கு தேவையான வைட்டமின் 'ஏ' சத்தும் இதில் மிகுதியாக உள்ளது.
அகத்திக்கீரை இரண்டு வகை கொண்டது ஒன்று வெள்ளை நிற பூவும் இன்னொன்று சிவப்பு நிறப்பூவும் இவ்விரண்டின் பூவும் மருந்தாக பயன்படுகிறது
அகத்திக்கீரை சமைத்து சாப்பிட்டாலே பயன்தரக்கூடிய ஒன்று ஆகும் ஜீரணம், பித்தம் தொடர்புடைதும்,உடல்சூடு, மலசிக்கல்,கண்ணனுக்கு குளிர்ச்சி கொண்டது ஆகும்
அகத்திக்கீரை மருந்து தரக்கூடிய பயனை முறிக்க கூடியது மருந்துகள் உண்ணும்போது குறிப்பாக சித்த மருந்து உண்பவர்கள் அகத்திக்கீரை தவிர்ப்பது நல்லது இந்த கீரை தினமும் எடுத்துக்கொள்வதும் தவறாக விளைவை கொள்ளும் மருந்தாக பயன்படும் இந்த கீரை நீங்கள் தினமும் எடுத்துக்கொண்டால் எதிர்வினை அதாவது அலர்ஜி வரை கொண்டு போய்விடும்
அகத்திக்கீரை மற்றும் கீரை வகைகள் பொதுவாக இரும்புசத்து கொண்டது கீரை வகைகள் சாப்பிட்ட முடித்தவுடன் தண்ணீர் அருந்துவதும் வயிறுக்கு பாதிப்பு மிகவும் கடினம் இரவில் கீரையை தவிர்த்துக்கொள்ளுங்கள் அகத்திக்கீரையுடன் கோழி சம்பந்தமான உணவுகளை தவிர்த்துக்கொள்ளுங்கள் இப்போது வரும் கோழி செயற்கை வளர்ப்பு முறைகொண்டது
அகத்திக்கீரை பயன்கள் :
- 1.பால் சுரக்காத பெண்கள் இதை சாப்பிட்டு வந்தால் பால் சுரக்கும்
- 2.பெண்கள் இதை சாப்பிட்டு வந்தால் பால் சுரக்க தேவையான சத்து எலும்பில் இருந்து பகிர்வதால் எலும்பு சம்பந்தமான நோய் வராமலும் பாதுகாக்கிறது
- 3.கால்சியம் தேவையான பற்களுக்கும் இது பயன்படுகிறது
- 4.அல்சர்,அரிப்பு, வயிறுபுண், தோல் சம்பந்தமான ,நோய்கள் போன்றவற்றிலிருந்து அகத்திகீரை பயன் தருகிறது
- 5.சிறுநீர் கல் கரைக்கும் தன்மை கொண்டது
- 6.வயறு சம்பந்தமான நோய் வாயு கோளாறு இருப்பவர்கள் இதை சாப்பிட்டு வர வயறு சம்பந்தமான நோய்கள் குணமாகும்
- 7.உயர்ரத்தம் கொண்டவர்கள் வாரம் இருமுறையாவது எடுத்து கொள்ளலாம்
பயன்பாட்டின் விரிவு : :
- அகத்திக்கீரையின் தாயகம் இந்தியாதான். அகத்தி கீரை உடலில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றி குடலை நன்கு சுத்தம் செய்யும் இதனால் மலச்சிக்கல் பிரச்சனையை முற்றிலும் அகலும்.
- அகத்திக்கீரையை கசப்பு சுவையும் துவர்ப்பு சுவையும் கொண்டது. இதனை பொறியல் செய்தும் கூட்டு செய்தும் சாப்பிடலாம்.
- இதன் கசப்பு சுவை தெரியாமல் இருக்க துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்புடன் தேங்காய் துருவலும் சேர்த்து சமைக்கலாம்.
- அகத்திக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் ரத்த சோகையை குணமாக்கும். தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
- நெஞ்சு சளி, தோல்நோய் போன்றவைகளுக்கு அகத்திக்கீரை நல்ல பலனை தரும்.
- ஒரு டம்ளர் மோரில் ஒரு தேக்கரண்டி அகத்திக்கீரை கலந்து அதிகாலையில் குடித்து வந்தால் பித்தம் குணமாகும்.
- வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்கள் அகத்திக்கீரையுடன் தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட்டுவந்தால் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
- குழந்தை பிறந்ததும் உடல் பருமன் ஆகாமல் இருக்க வாரத்திற்கு இரண்டு வேளை பாலூட்டும் பெண்கள் அகத்திக் கீரையை உணவில் சேர்த்து வந்தால் உடல் பருமன் ஆகாமல் இருக்கும்.
- அகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
- உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் குறைந்தது வாரத்திற்கு ஒருமுறையாவது அகத்தி கீரை எடுத்துக் கொள்வது நல்லது.
- அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். கண்கள் குளிர்ச்சியாகும். நீராடைப்பு, பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர் தடையில்லாமல் போகும்.
- அகத்திக்கீரையை வெயிலில் காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் நெஞ்சுவலி குணமாகும்.
- அகத்திக்கீரையுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
- அகத்திக்கீரையை அரைத்து புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறும்.
- சித்த மருந்துகள் எடுத்துகொள்ளும் போது அகத்திகீரை சாப்பிடக் கூடாது.
- பொதுவாக அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிடக் கூடாது. அதிமானால், மருந்தாகச் செயல்படவேண்டிய கீரை, எதிராகச் செயல்பட்டு சொறி, சிரங்கை உருவாக்கிவிடும்.
- அகத்திக்கீரையையும், கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது.
- மது குடித்துவிட்டு அகத்திகீரையைச் உண்ணக்கூடாது. ஏனென்றால், இது மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தமான பாதிப்புகளை உருவாக்கும்.
- இது போன்று மருத்துவம், அனைத்து கீரைவகைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களையும் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment