கள்ளி என்றதுமே கள்ளிப்பால், நஞ்சு என நம்முடைய கற்பனை அபாயகரமாகவே விரிந்து செல்லும் ஏனெனில் அது நஞ்சு பொருளாகவே நமக்கு அறிமுகமாகியிருக்கிறது. தமிழ் சினிமாவும் நமக்கு அதைத்தான் கற்றுதந்துள்ளது. கருத்தம்மா படத்தில் பெண் குழந்தைகளை கொல்ல கள்ளி பாலை பயன் படுத்தும் காட்சியை பார்த்ததும் கள்ளி என்றதும் ஒரு வித கிலி மனதுக்குள் உடுக்கை அடிக்க தொடங்கி விடுகிறது. ஆனால் அந்த கள்ளி பாலும் நடது உடலில் தோன்றும் பல்வேறு நோய்களை போக்கும் சிறப்பு வாய்ந்தது என்பது பலரும் அறியாத உண்மை. உலகில் சுமார் 2008 கள்ளி வகைகள் உள்ளன. கொம்பு கள்ளி, கொடிக்கள்ளி, சதுரக்கள்ளி, திருகுக்கள்ளி, இரணக்கள்ளி, ஆகியவை மருத்துவத்தில் பயன் உடையதாக உள்ளது. இதில் உள்ள முட்கள் மற்றும் ஒரு விதமான குமட்டல் வாடையுடைய பால் ஆகியவற்றால் கால்நடைகள் இவற்றை சாப்பிடுவதில்லை. தண்ணீர் உள்ள மற்றும் வறண்ட நிலங்களில் தானாகவே வளரும் தன்மை கொண்டவை கள்ளிச்செடிகள். இதில் சப்பாத்தி கள்ளி என்ற வகை ஓன்று உண்டு. கொத்து கொத்தான வட்டவடிவ சதைப்பற்றுள்ள தண்டுகளுடன் உள்ள இதில் மஞ்சள் நிற பூக்கள் அழகாய் பூத்திருக்கும். சிவப்பு நிற பழத்தின் மேல் புறத்தில் முள்ளுடன் இருக்கும். பழத்தின் நடுவில் முள் இருக்கும். கிராமத்து மாணவர்கள் இதை நடுவில் பிளந்து முல்லை எடுத்து விட்டு பழத்தை விரும்பி சாப்பிடுவர். வாயிலிருந்து ரத்தம் ஓழுகுவது போல் இருக்கும். இந்த பழச்சாற்றில் மணப்பாகு செய்து சாப்பிட்டால் கோடையில் வரும் வெப்ப நோய் அனைத்தும் தீரும். கிராமங்களில் தெரியாமலோ அல்லது தற்கொலை முயற்சியாகவோ அலரி, எட்டி, ஊமத்தை, சேங்கொட்டை, வாளம் போன்ற விஷத்தை தின்று விட்டால் அதன் நஞ்சு நீண்ட நாட்கல் உடலில் தங்கி பல்வேறு தொல்லைலகளை கொடுக்கும். இதற்கு சப்பாத் தியின் சதைகளை துண்டுகளாக்கி அதில் மிளகு தூள், சேர்த்து 5முதல் 10துண்டுகள் வரை சாப்பிட்டால் மேற்கண்டவற்றினால் உடலில் தங்கிய நஞ்சு முறியும். முள்ளை நீக்கி விட்டு சதையை விளக்கெண்ணெயில் வாட்டி முடக்குவாதத்திற்கு வைத்து கட்டி ஒத் தடம் கொடுத்து வந்தால் வாதம் தீரும். இதன் பூக்களை நசுக்கி கட்டியின் மீது கட்டு போட கட்டிகள் உடைந்து ஆறும். இரணக்கள்ளி: கனத்த சதைப்பற்றான நீண்ட பாலை வடிவ இலைகளும் நிறைந்த முள்ளுள்ள மரமாகும். பெரும்பாலும் மலை சரி வுகளில் தான் இது இருக்கும். வறண்ட இடங்களிலும் காணப்படும். கோழை அகற்றுதல் நுண்புழுவை கொல்லுதல் ஆகிய மருத்து வகுணங்களை கொண்டது. இலைச்சாறு அல்லது பாலை பாலுண்ணிகளின் மீது தொடர்ந்து தடவி வர அவை தீரும். இலையை நெருப்பில் வாட்டி பிழிந்து பொறுக்கும் சூட்டில் அந்த சாற்றை காதில் விட பல்வேறு காது வலிகளும் போகும். வாதகுடைச்சல், மேக வாய்வுக்கும் இதை பூச்சாக பயன்படுத்தலாம். சில அடி தூரம் நடந்தால் கூட சிலருக்கு இரைப்பு வாங்கும். மேலும் அதனுடன் இருமலும் ஏற்படும். இத்தகைய ஈளை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இலையை வாட்டி பிழிந்த சாற்றுடன் தேன் கலந்து காய்ச்சி வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு எடு த்து கால் தம்ளர் நீரில் கலந்து காலை மதியம், மாலை கொடுத்து வந்தால் நோய் தீரும். கக்குவான் இருமல் உள்ளவர்களுக்கு உடலின் ரத்த அளவு குறைந்து சோகையும் ஏற்படும். இவர்கள் இலைச்சாற்றுடன் சிறிது உப்பு போட்டு காய்ச்சி வைத்து கொண்டு அரை முதல் ஒரு தேக்கரண்டி வரை உடலின் தன்மைக்கு ஏற்ப காலை மாலை கொடுத்து வந்தால் தீரும். சிறுநீர் சரியாக பிரியாமல் அவதிப்படுபவர்கள் இலையை வதக்கி அடிவயிற்றில் கட்டி வந்தால் தேங்கிய சிறுநீர் வெளிப்படும். பத்து கிராம் கடுக்காய் தோலில் 80கிராம் இலைக்கள்ளி பாலை சேர்த்து 40 நாட்கள் நிழலில் காய வைத்து சூரணம் செய்து அரை கிராம் அளவு வெந்நீரில் உட்கொள்ள பேதியாகும். இதனால் பெருவயிறு போகும். ஆறா புண்கள் ஆறும். கிராந்தி புண்கள் ஈரங்களின் வீக்கம் தீரும். கொடுமையானது என கருதி கள்ளியை ஒதுக்காமல் இனிமையான என கருதினால் தகுந்த மருத்துவர் துணையுடன் பயன்படுத்தி வளமோடும் நலமோடும் வாழலாம்
No comments:
Post a Comment