கட்டுமஸ்தான உடல் வேண்டுமென்று வாரத்திற்கு 5 நாட்கள் ஜிம் சென்று உடற்பயிற்சிகளை செய்து, சிக்கன், புரோட்டீன் பவுடர் போன்றவற்றை உட்கொண்டும், உங்களது பை-செப்ஸில் எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லையா? அப்படியெனில் நீங்கள் உடற்பயிற்சியுடன் ஒருசில மோசமான உணவுகளை உட்கொண்டு வருகிறீர்கள் என்று அர்த்தம்.
இங்கு தசைகளின் வளர்ச்சியைத் தடுக்கும் சில மோசமான உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் அந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.
ஸ்போர்ட்ஸ் பானங்கள் :
ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சியில் ஈடுபடுவோர், உடலில் எலக்ட்ரோலைட்டுக்களை நிரப்ப நீரைத் தவிர, ஸ்போர்ட்ஸ் பானங்களைப் பருகக்கூடாது. ஏனெனில் அதில் கலோரிகள் மற்றும் சர்க்கரை ஏராளமான அளவில் உள்ளதால், அது உடல் எடையைத் தான் அதிகரிக்கும்.
டயட் சோடா:
பலரும் டயட் சோடாவில் கலோரிகள் ஏதும் இல்லை என்று நினைக்கலாம். ஆனால் அந்த பானத்தைப் பருகினால், நாள் முழுவதும் கலோரி நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடத் தூண்டும். இந்த கலோரிகள் உடல் பருமனை அதிகரித்து, பை-செப்ஸ் பெறுவதில் இடையூறை உண்டாக்கும்.
புரோட்டீன் ஷேக்:
அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பது அனைவருக்குமே தெரியும். என்ன தான் புரோட்டீன் ஷேக்குகள் தசைகளின் வளர்ச்சியை ஊக்குவித்தாலும், அளவுக்கு அதிகமாக குடித்தால், அதில் உள்ள அதிகமான புரோட்டீன் கொழுப்புக்களாக மாறி உடல் பருமனை உண்டாக்கும்.
கேண்டி வகைகள் :
புரத இனிப்புகளான கடலை மிட்டாயை சாப்பிடுவதால் வயிறு நிரம்பும். நல்லதும் கூட. ஆனால் கேண்டி வகை சாக்லேட்டுகளிலுள்ள சர்க்கரை கலோரிகள் கொழுப்புக்களாக மாற்றப்பட்டு, தசைகளின் வளர்ச்சிக்கு பதிலாக, கொழுப்புக்களின் அளவை அதிகரித்துவிடும்.
ஆல்கஹால் :
ஆல்கஹாலில் உள்ள கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள், தசைகளின் வளர்ச்சியைக் கடினமாக்கி, தசைகளை வளர விடாமல் செய்யும்.
Main source:http://tamil.boldsky.com/health
No comments:
Post a Comment