Tuesday, 18 April 2017

தண்ணீர் கெட்டுபோகாத மண்பானை

தண்ணீர் கெட்டுபோகாத மண்பானை



மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி.
மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து மூன்று  மணி நேரம் முதல் ஏழு  மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த WATER FILTER மண் பானை ஆகும். எனவே தண்ணீரை மண் பானையில் வைத்துக் குடித்தால் அதில் உள்ள எந்த விதமான கேட்ட  பொருள்களும் அழியும். மண் சக்தியும் கிடைக்கும், பிராண சக்தி அதிகரிக்கும்.
குளிர்ச்சிக்காக பிரிட்ஜில் வைத்திருக்கும் தண்ணீரை எடுத்து 15 நிமிடங்களுக்கு கழித்து  குடிக்க வேண்டும். ஆனால் மண்பானை தண்ணீர் இயற்கையாகவே  தண்ணீரை தாகம் எடுக்கும் போதெல்லாம் உடனே அருந்தலாம். பிரிட்ஜ் தண்ணீரை காட்டிலும் மண்பானை தண்ணீரே மிக சிறந்தது. மேலும் வெட்டிவேர், எலுமிச்சை, புதினாவையும் தண்ணீரில் சேர்த்தால் இன்னும் குளிர்ச்சியாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது. மண்பானைகளை வைப்பதற்கு முன் கீழே மணல் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இளம்  தென்றல் காற்று, வழிந்து ஓடும் நதி, வெண்  மேகமாய் கொட்டுகிற அருவி, கால்களில் மிதிபடும் பனித்துளி... என்பது போல வேனலுக்கு   கொளுத்துகிற வெயிலில் வெளியில் சுற்றிவிட்டு வந்தவுடன் ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஃபிரிட்ஜைத் திறந்து ‘கோக்’ சாப்பிடுகிறோம்.

இப்போது காலம் மாறி, விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. வெயிலுக்கு சூடு ஆற்றி  கொள்ள ஒரு டம்ளர் மோர், கொஞ்சம் எலுமிச்சை பழச்சாறு அல்லது இரண்டு கீற்று நுங்கு என்று இயற்கை உணவுக்கு மாறிக் கொண்டே வருகிறோம்.

குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரைவிட மண்பானையில் வைத்திருக்கும் நீரை விரும்பி அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இயற்கையோடு இணைந்திருப்பதே இன்பம்  என்ற முடிவுக்கு நாம் கொஞ்சம் கொஞ்சமாய் திரும்பிக் கொண்டிருக்கிறோம்.

மேலும்  விஞ்ஞானிகள் பல வோல்ட் மின்சாரத்தை காலி செய்து தண்ணீரைக் குளிர வைப்பதற்குக் கண்டுபிடித்த ஃபிரிட்ஜ் தொழில்நுட்பத்தை, ஆடம்பரமே இல்லாமல் அசால்ட்டாக நம்மூர் கிராமத்து விஞ்ஞானிகள், வெறும் மண்பானையை வைத்தே செய்து காட்டிவிட்டார்கள்.

மண்பானையின் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், வெளியில் வெயில் பட்டையைக் கிளப்பும்போது மண்பானை தன்னுள் இருக்கிற நீரை அதிக அளவு குளிரச் செய்யும். வெளிப்புறத்தில் வெயில் குறைவாக இருந்தால் மண்பானையில் உள்ள நீரும் குறைந்த அளவே குளிர்ந்து இருக்கும்.

கடும் கோடையில் உடலுக்கு இதமாக, ஒரு மண்பானை நீரை நன்றாகக் குளிரச் செய்து கொடுக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்

மண்பானையில் உள்ள சிறிய நுண் துளைகள் வழியேதான் இப்படி நீர் கசிகிறது. இந்த நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கிறது. இப்படி பானையின் வெப்பமும், பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுகிறது. எனவே நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கிறது

உலகத்தில் எந்த ஒரு மூலையிலும் நீங்கள் எது வேண்டும் என்றாலும் இருந்து விடலாம் அனால் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது  பல காலங்களுக்கு முன்பு ஆற்று நீரும் பூமிக்கு அடியில் நாம் பயன்படுத்தி வரும் தண்ணீரும் நமக்கு தேவையான உடம்பில் உள்ள அயோடின் தாதுப்பொருள் தந்துள்ளது அனால் இப்போது அதன் நன்மை நாம் கடையில் வெங்கும் பாட்டில் தண்ணீரிலோ கோகோ கோலவிலோ அது கிடைப்பதில்லை சுமார் பல கோடி கொள்முதல் கொண்டு நமது நாடும் அதன் சார்ந்த வணீக தாரர்களும் அவர்களுக்கு பணம் சம்பாதிக்க தொடங்கி உள்ளார்கள்.


மேலும் இந்த வணீக தாரர்கள் அவர்களுக்கு தேவையான பணம் சம்பாதிக்க முழுவதுமாக பாட்டில் தண்ணீரையும், கென் தண்ணீரையும் கொண்டு சேர்பதுர்க்காக  அதற்க்காக விளம்பரங்களுக்கும் கொடுக்கிறார்கள்
.இவ்வாறு பயன்படுத்தபடும் குடிநீரில் நாம் உடலுக்கு தேவையான தாது பொருள்கள் நிறைந்தவையா என ஆராய்ந்தால் இல்லையொன்ற பதில் மட்டுமே வருகிறது.

பிரபல தொழில்நுட்பம் மூலம் இப்போது வளரும் எல்லா கார்ப்ரேட் கம்பெனிகளும் அதன் ஆளுமையை வைத்து தூசி கலந்தாலும் அதை வடிகட்டுகிறோம் என்ற பெயரில் அதில் உள்ள மனிதருக்கு தேவைப்படும் தாது பொருள்களை பிரித்து எடுத்து வெறும் சக்கை குடிநீராக கேனில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது குடிநீரை நமக்கு உடம்புக்கு தேவையான இந்த கோடையில் தொற்று நோய்களை தடுக்க, இதை முயற்சி சொய்யலாம், அதில் நம்ம செய்ய வேண்டியது என்ன வென்றால் சிறிது மிளகு (25 கிராம்),தேத்தாங்கொட்டை ஒன்றை எடுத்து கொள்ளவும்,வெட்டி வேர் சிறிது,வெந்தையம் சிறிது (20 கிராம்),சீரகம் சிறிது(25 கிராம்). 
இவைகளை எல்லாம் நமக்கு தேவையான எடுத்து வைத்து கொண்டு அதை மிகவும் பக்குவமாக ஒரு துணியில் கட்டி அதை பதினைந்து முதல், இருவது லிட்டர் தண்ணீரில் கட்டியபடி அப்படியே ஒரு நாள் முழுவதும் இட்டு அதை குடித்து வந்தால் நமக்கு உண்டாகும் தோற்று நொய்யாக இருந்தாலும் தொழுநோய்யாக இருந்தாலும் குணமாகும்.

No comments:

Post a Comment