கண்சுற்றி கருவளையம் (Periocular Melanosis)
செதுக்கி வைத்த சிற்பம் போல முகம்... வசீகரிக்கும் நிறம்... லட்சணமான சிரிப்பு... இப்படி எல்லாம் இருந்தாலும் ஒரு சின்ன விஷயம் இவை அனைத்தையும் காணாமல் போகச் செய்துவிடும். அதுதான் கண்களுக்கடியில் தோன்றுகிற கருவளையங்கள். ராத்திரி, பகல் பார்க்காமல், தூக்கம் தவிர்த்து உழைக்கிற வர்களுக்குத்தான் முன்பெல்லாம் கருவளையங்கள் வரும். இன்றோ அது பரவலாக எல்லோருக்கும் வருகிறது. கருவளையங்கள் தோன்றக் காரணங்கள் என்ன? அதற்கான தீர்வுகள், வராமல் தவிர்க்கும் வழிகள் இத்தகைய கருவளையமானது களைப்பு, தூக்கமின்மை, உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது, நீண்ட நேரம் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பல காரணங்களால் ஏற்படும். இத்தகைய கருவளையங்களைப் போக்க பல ஆயுர்வேத வழிகள் உள்ளன. இத்தகைய ஆயுர்வேத வழிகளைப் பயன்படுத்தினால், கருவளையங்கள் நீங்குவதோடு, கண்கள் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் காணப்படும்.
கண்சுற்றி கருவளையத்திற்கு பல காரணம் உண்டு.
இதற்க்கு பல காரணம் உண்டு:
அதில் பின்வருவன:
ஆயுர்வேத வழிகள்:
ரோஸ்வாட்டர்
கருவளையங்களைப் போக்க ரோஸ்வாட்டர் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, கண்களுக்கு மேலே வைத்து சிறிது நேரம் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் வருவதைத் தடுக்கலாம்.
ஜாதிக்காய்
ஜாதிக்காய் பொடியை பேஸ்ட் செய்து இரவில் படுக்கும் போது கண்களைச் சுற்றி தடவி இரவு முழுவதும் ஊற வைத்தால், அதில உள்ள வைட்டமின் ஈ மற்றும் சி சத்தினால் கருவளையங்கள் நீங்கும்.
தக்காளி மற்றும் எலுமிச்சை
பாதி தக்காளியை அரைத்து, அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது பயித்தம் பருப்பு மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவினால், கருவளையங்கள் மறையும்.
பாதாம்
பாதாமை பொடி செய்து, அதில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்கள் மறையும்.
வெள்ளரிக்காய்
இது அனைவருக்குமே தெரிந்த செயல் தான். அது வேறொன்றும் இல்லை வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
எலுமிச்சை சாறு
1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 1 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் மைசூர் பருப்பு மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
மஞ்சள் தூள்
2 டீஸ்பூன் மஞ்சள் தூளில் சிறிது கரும்புச்சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து 5 நிமிடம் ஊற வைத்து, பின் கண்களைச் சுற்றி தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்களைப் போக்கலாம்.
புதினா
புதினா இலைகளை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலமும் கருவளையங்கள் நீங்கும்.

- ஹார்மோன் பிரசனையால் வருவது.
- சிந்தனை மற்றும் கடின உழைப்பு.
- வயோதிகம்.
மருத்துவ முறைகள்:
- ஹைட்ரொகுயினான் (Hydroquinone) கலந்த களிம்பு இரவு நேரங்களில் பயன்படுத்த வேண்டும்.
- கண்களுக்கு அதிகப்படியான சிரமங்கள் கொடுக்காமல் இருக்க வேண்டும்.
- பழங்கள் ஒட்டிக்கொள்வது பயன்தராது அந்தப் பழத்தை உட்கொள்வது சருமத்திற்கு நல்லது.
ஆயுர்வேத வழிகள்:
ரோஸ்வாட்டர்
கருவளையங்களைப் போக்க ரோஸ்வாட்டர் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, கண்களுக்கு மேலே வைத்து சிறிது நேரம் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் வருவதைத் தடுக்கலாம்.
ஜாதிக்காய்
ஜாதிக்காய் பொடியை பேஸ்ட் செய்து இரவில் படுக்கும் போது கண்களைச் சுற்றி தடவி இரவு முழுவதும் ஊற வைத்தால், அதில உள்ள வைட்டமின் ஈ மற்றும் சி சத்தினால் கருவளையங்கள் நீங்கும்.
தக்காளி மற்றும் எலுமிச்சை
பாதி தக்காளியை அரைத்து, அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது பயித்தம் பருப்பு மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவினால், கருவளையங்கள் மறையும்.
பாதாம்
பாதாமை பொடி செய்து, அதில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்கள் மறையும்.
வெள்ளரிக்காய்
இது அனைவருக்குமே தெரிந்த செயல் தான். அது வேறொன்றும் இல்லை வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
எலுமிச்சை சாறு
1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 1 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் மைசூர் பருப்பு மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
மஞ்சள் தூள்
2 டீஸ்பூன் மஞ்சள் தூளில் சிறிது கரும்புச்சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து 5 நிமிடம் ஊற வைத்து, பின் கண்களைச் சுற்றி தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்களைப் போக்கலாம்.
புதினா
புதினா இலைகளை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலமும் கருவளையங்கள் நீங்கும்.
No comments:
Post a Comment