Thursday, 27 April 2017

வெங்காயத்தின் நன்மைகள்

 வெங்காயத்தின் நன்மைகள்


வெங்காயம் என்றாலே எல்லோருக்கும்  தெரிய வருவது என்னவென்றால் கண்ணில் தண்ணீர் வர வழைக்கும் காய் என்று தான்.     ஆனால் அதில் இருக்கும் மருத்துவ குணங்களைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சி எடுப்பதில்லை. வெங்காயத்தை சமையலில் இருந்து தவிர்ப்பது என்பது இயலாத காரியம். மற்ற காய்களின் தேவை குறைந்தாலும், வெங்காயத்தின் தேவை மட்டும் எப்பொழுதும் இருக்கும். வெங்காய சாம்பார், வெங்காய குழம்பு, வெங்காய தொக்கு என்று ருசி பார்க்கும் நாம், அதன் மருத்துவ குணங்களை அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம்.
வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயம் இன்றி இந்திய சமையலே கிடையாது. அந்த அளவுக்கு எல்லாசமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது.அதனாலே நமது நாட்டில் மிகவும் அதிகமாக விளைச்சலும் விற்பனையும் அதிகமாகவே இருக்கிறது.பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.வெங்காயமானது அதில் உள்ள காரத்தன்மையினால் அனைவரையும் அழ வைப்பதால், இதனை செல்லமாக மாமியார் என்றும் அழைப்பார்கள். இப்படி வெங்காயத்தின் காரத்தன்மைக்கு முக்கிய காரணம், அதில் உள்ள அலைல் புரோப்பைல்-டை-சல்ஃபைடு என்ற எண்ணெய் தான். இந்த எண்ணெய் தான் வெங்காயத்தை உரிக்கும் போது, திரவத்தை சுரந்து, காற்றின் மூலம் கண்களில் பட்டு கண்ணீர் வர வைக்கிறது.இது போன்று கண்ணில் கண்ணீர் வருவதாலும்  மேலும்  அதன் மூலம் சருமம் அடையும் பலனையும் நாம் அறிந்து கொள்வதில்லை. நம் முன்னோர்கள் அதன் மருத்துவ குணத்தை அறிந்து வைத்திருந்தனர். ஆனால் இக்காலத்து தலைமுறையினர் அதன் தன்மையை விளையாட்டாக எண்ணி விடுகின்றனர்


நாம் பயன்படுத்தும் நூறு கிராம் வெங்காயத்தில் ஈரப்பதமானது ஒரு 86.6%உம்,புரதம் ஒரு 1.2% உம்,கொழுப்புச்சத்து 0.1% உம்,மாவுச்சத்து ஒரு 11.7% உம்,நார்ச்சத்து மற்றும் தாதுச்சத்து இரண்டும் ஒரு 1.0%உம்,கொண்டுள்ளது அப்படி பட்ட நம்முடைய   பாட்டி காலத்தில் இருந்து பயன்படுத்தும் இந்த வெங்காயம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது இப்படி எத்தனையோ வகையில் மருந்து பொருளாக பயன்படக்கூடிய இந்த வெங்காயத்தின் மேல் தோலை நம் சிறிதேனும் கவனிக்க தவறவிடுகிறோம்.

சமையலில் அறையில்  பயன்படுத்திவரும்  காய்கறி வகையை சேர்ந்த வெங்காயத்தில் தாராளமான   நன்மைகள் அடங்கியுள்ளன  என்பது பொதுவாக எல்லாத்துக்கு  தெரியும். இந்த வெங்காயத்தை போன்றே அதனுடைய தோலிலும் மருத்துவ நன்மைகள் ஏராளமாக உள்ளது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

1.வெங்காயத்தின் வெளிப்புறத்தில் உள்ள ப்ரௌன் (Brown) நிற அடுக்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்,(Anti oxide) நார்ச்சத்துக்கள்(Fiber) மற்றும் ஃப்ளேவோனாய்டுகள்(playvonoide) போன்ற சரும ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் வளமாக உள்ளது.

 2.வெங்காயத் தோலில் ஆற்றல் மிக்க ஆன்டி-பாக்டீரியல்(Andi Bacteria), ஆன்டி-ஆக்ஸிடன்ட்(Andi accident), புற்றுநோய் (Cancer) எதிக்கக்கூடிய திறன் மற்றும் சைனோ பாக்ட்ரியா போன்ற நோய் எதிக்கக்கூடிய திறன் அதிக அளவில் உள்ளன.

 3.வெங்காயத்தின் தோலில் உள்ள ஆற்றல்மிக்க நிறமியான( க்யூயர்சிடின்), இதயத்தில் உள்ள தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுத்து, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து(High blood pressure), தூக்கமின்மை பிரச்சனை வராமல் தடுக்கிறது.

4.வெங்காயத் தோலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற சக்தி வாய்ந்த சத்துக்கள் புற்றுநோய்க்கு காரணமான செல்களை அழித்து, புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது.

 5.வெங்காயத்தின் தோலில் இருக்கும் கரையாத நார்ச்சத்து, குடலின் செரிமான பிரச்னைக்கும் குடல் நன்றாக  செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து, குடல் சம்பந்தமான பிரச்சனைகள், உடம்பில் உள்ள கேட்ட கொலஸ்ராலைக் கரைத்து, உடல் பருமன் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

6. முக்கியமான ஒன்று நாம் நல்லதென்று கருதும் இந்த வெங்காயத்தின் தோல் தாயாக இருக்கும் அதாவது புள்ளத்தாச்சி பெண்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும் .

7.பற்களுக்கு நல்லது வெங்காயம் பெரும்பாலும் பல் சிதைவு மற்றும் வாய் நோயை தடுக்க பயன்படுத்தப்படுகிறது. அதிலும் 5 நிமிடங்கள் வரை வெங்காயத்தை வாயில் போட்டு மெல்லுவதால், வாய் கிருமிகளை அழிக்க முடியும்.

8.கடுமையான இருமலால் பாதிக்கப்பட்டவர்கள்  சிகிச்சை வெங்காயம் மிகவும் நல்லது. அதிலும் வெங்காயச் சாறு மற்றும் தேனுடைய கலவையை சம அளவில் எடுத்துக் கொண்டு சாப்பிட்டால், தொண்டை புண் மற்றும் இருமல் குணமடையும்.

9.பொடுகுத் தொல்லை இனி இல்லை வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளதால், இது ஆரோக்கியமான கூந்தலுக்கு மிகவும் இன்றியமையாதது. அதிலும் பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், வெங்காயச் சாற்றினை தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.

10.நமது சிறிய வெங்காயத்தில் தொண்டை வலி குறையவும். பாம்பு கடிக்கும், நிறைய வெங்காயம் தின்றால் விஷம் இறங்கும். வெங்காய சாற்றை தண்ணீரில் கலந்து பருகினால் சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளதால், நீரிழிவு நோய்க்கும்  இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.











No comments:

Post a Comment