தோல் பாதிப்பும் பராமரிப்பும்
முகப்பரு (Pimples)
பருவத்தில் வருவது பரு : காரணங்கள் :
- ஹார்மோன்களில் வரும் மாற்றங்கள்
- கிருமிகள்
- சிலவகை மாத்திரைகள்
- ஒவ்வாமை
- அழகு சாதனங்கள் (Cosmetic Products) பயன்படுத்துவது ( இது நம் எண்ணெய் குழாய்களை அடைத்துவிடும்
மருத்துவமுறைகள்:
- பருக்களை தொடக்கூடாது கிள்ளக்கூடாது கிள்ளினாள் தழும்பாகிவிடும் அதை நசுக்கி உள்ளிருப்பதை எடுக்கவும் கூடாது
- ஒரு நாளில் ஐந்து முதல் ஆறு தடவை சோப்பு பயன்படுத்தி முகம் கழுவ வேண்டும்
- மற்ற வியாதிகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டும் மாத்திரை சாப்பிட வேண்டும்
- அழகு சாதனங்களை கூடிய வரை குறைவாகப் பயன்படுத்த வேண்டும் தேவையென்றால் கேலமைன் (Calamine ) கலந்த சாதனங்களை பயன்படுத்தலாம்
- பருவ வரும் காலத்தில் க்ளின்டாமைசின் களிம்பை (Clindamycin Ointment) தினமும் இரவில் பூசினால் பரு குறைந்துவிடும்
- டெட்ராசைக்ளின் (Tetracycline) மாத்திரைகள் ஆறு மாதங்கள் சாப்பிடவேண்டும்
- மேற்கூறியவற்றை ஆறு மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் மட்டுமே பரு மறுபடியும் வராமல் இருக்கும்
- மேலே குறிப்பிட்டவைகள் மூலமாகவும் பரு குறையவில்லை என்றால் கெமிக்கல் பீலிங் (Chemical Peeling) மைக்ரோ டேர்மாப்ரேஷன் (Micro Dermabrasion) மூலம் சரிசெய்துவிடலாம் ,
பின்குறிப்பு:
சாக்லேட்,ஐஸ்க்ரீம்,எண்ணெய் பலகாரம் போன்ற உணவு பொருள்கள் பருவை கூட்டுவதில்லை உணவுப் பழக்கத்திற்கும் பருவுக்கும் சம்பந்தம் இல்லை
No comments:
Post a Comment