Saturday, 29 March 2025

பெப்பர் சாதம்

 பெப்பர் சாதம் 

தேவையான பொருட்கள்:

வடித்த சாதம் - ஒரு கப்


நீளமாக நறுக்கிய குடைமிளகாய் - அரை கப்


மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்


மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்


கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்


உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்


நிலக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்


கடுகு - ஒரு டீஸ்பூன்


கறிவேப்பிலை - ஒரு கொத்து


கொத்தமல்லி - ஒரு கைப்பிடி


உப்பு - தேவையான அளவு


பெருங்காயம் - மூன்று சிட்டிகை


எலுமிச்சை - அரை மூடி


எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்


செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு நன்றாக வெடிக்க விடவும்.


வெடித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு சிவக்கும் வரை வறுக்க வேண்டும்.


பின்பு நிலக்கடலை சேர்த்து வதக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி பெருங்காயம் சேர்த்து பொரிக்க விடவும்.


குடைமிளகாய் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கி பொடிகள் சேர்த்து கிளறி உப்பு சேர்த்து சாதம் சேர்த்து கிளறவும்.


பரிமாறும்முன் எலுமிச்சம்பழம் பிழிந்து பரிமாறவும்...

🔥🔥🔥🔥

💞💞💞💞💞💞💞💞💞💞💞




No comments:

Post a Comment