பெப்பர் ரைஸ்.....
தேவையான பொருள்கள்
சாதம் - ஒரு கப்
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.
அதன் பிறகு கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
கடலைப்பருப்பு பொன்னிறமானதும் அதனுடன் மிளகுத் தூளை சேர்த்து வாசம் வரும் வரை வதக்கவும்.
மிளகு வாசனை வந்ததும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
இந்த கலவையை சாதத்துடன் சேர்க்கவும்.பெப்பர் கலவை சாதத்துடன் நன்கு ஒன்றாக சேரும்படி கிளறி விடவும்.
இறுதியில் கொத்தமல்லி தழையை மேலே தூவவும்.சூடான, சுவையான பெப்பர் ரைஸ் தயார்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁💖💖💖💖
No comments:
Post a Comment