Saturday, 29 March 2025

மாங்காய் சாதம்

மாங்காய் சாதம்


தேவையான பொருட்கள் :


பொருள் - அளவு

அதிக புளிப்பில்லாத மாங்காய்2

அhpசிஅரை கிலோ

எண்ணெய்தேவைக்கேற்ப

கடுகு கால் டீஸ்பூன்

பெருங்காயம்1 சிட்டிகை

கடலைப்பருப்பு 1 டீஸ்பூன் 

உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்

வேர்க்கடலை கால் கப்

உப்புதேவைக்கேற்ப 

மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்

பச்சை மிளகாய் 2

அரிசிகால் கிலோ

கொத்தமல்லி தழை1 கைப்பிடி

செய்முறை :


  அரிசியை நல்ல உதிரி உதிரியாக சாதம் செய்து ஆற வைக்கவும். மாங்காய்த் தோல் சீவி, துருவிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, பெருங்காயத்தைப் சேர்த்து பொரிந்ததும் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்க வறுக்கவும். பிறகு மிளகாயையும் வதக்கி அதனுடன் மாங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கவும்.


  பின் சிறிது உப்பு, மஞ்சள் சேர்த்து நன்றாக வதக்கவும். ஆற வைத்த சாதத்தில் உப்பு சேர்த்து, மாங்காய் கலவையைச் சேர்த்து கலக்கவும். பிறகு பச்சைக் கொத்தமல்லி தழையை அதன் மேல் தூவவும். இப்போது சுவையான மாங்காய் சாதம் தயார்.


இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சட்னி, ஊறுகாய்


 

🍁🍁🍁🍁🙏


No comments:

Post a Comment