Saturday, 29 March 2025

எள்ளு சாதம்

எள்ளு சாதம் செய்வது எப்படி....


தேவையான பொருட்கள்:

வெள்ளை எள்ளு - அரை கப்


மிளகாய் வற்றல் - 5


வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி


பெருங்காயம் - குண்டு மணி அளவு


கல் உப்பு - ஒரு தேக்கரண்டி


செய்முறை:

எள்ளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.


வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் எள்ளை போட்டு 4 நிமிடம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். தீயை குறைத்து வைத்து கை விடாமல் வறுத்துக் கொண்டே இருக்கவும். எள்ளு பொரிந்ததும் ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்.


வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை போட்டு பொரிக்கவும். பிறகு அதில் உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் போட்டு 2 நிமிடம் வறுக்கவும்.


வறுப்பட்டவுடன் எல்லாவற்றையும் எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற விடவும்.


ஆறியதும் மிக்ஸியில் வறுத்த பெருங்காயம், மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு மற்றும் உப்பு சேர்த்து பொடி செய்துக் கொள்ளவும்.


பிறகு அதில் வறுத்த எள்ளை போட்டு மீண்டும் பொடி செய்து ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.


தேவையான போது ஒரு பாத்திரத்தில் சாதத்தை போட்டு எண்ணெய் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். மேலே எள்ளு பொடியை தூவி சாதம் முழுவதும் படரும்படி கலந்து பரிமாறவும்....


No comments:

Post a Comment