Saturday, 29 March 2025

கட்டு சோறு

 கட்டு சோறு..


தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி - அரை படி


சிறிய தேங்காய் - ஒன்று


புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு


காய்ந்த மிளகாய் - 4


கடுகு - அரை ஸ்பூன்


வறுத்த வேர்க்கடலை - அரை கப்


கறிவேப்பிலை - 2 கொத்து


பூண்டு - 2


நல்லெண்ணெய் - 150 மில்லி


உப்பு - ஒரு ஸ்பூன்


செய்முறை:

சோறு குழைந்துவிடாமல் பதமாக ஆக்கி எடுத்து சற்று ஆறவிட்டு வைக்கவும். தேங்காயை பால் பிழிந்து சுமார் அரை லிட்டர் அளவுக்கு பால் எடுத்துக்கொள்ளவும்.


அதிலேயே புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். பூண்டை நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய்விட்டு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, கடுகு போட்டு வெடித்தவுடன் வேர்க்கடலையை போட்டு லேசாக வறுத்துக் கொண்டு, பூண்டு போட்டு தீயவிடாமல் லேசான பொன்முறுகலாகும்வரை வறுக்கவும்.


பிறகு கறிவேப்பிலை போட்டு தாளித்து, எடுத்துவைத்துள்ள தேங்காய்ப்பால், புளி கரைசலை ஊற்றி உப்பு சேர்க்கவும்.


கொதிக்க ஆரம்பித்து திரண்டு வரும்போது இறக்கி, ஆக்கிவைத்துள்ள சோற்றில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு ஆப்பையால் கலக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து அழுத்தி விட்டு வைத்து, சுமார் ஒரு மணி நேரம் கழித்து (தண்ணீர் சற்று உறிஞ்சியவுடன்) பரிமாறலாம்.

💖💖💖💖



No comments:

Post a Comment