Saturday, 29 March 2025

அவரைப் பருப்பு தக்காளி சாதம்



அவரைப் பருப்பு தக்காளி சாதம்


தேவையான பொருட்கள் 

அரிசி 

தக்காளி 

அவரைப் பருப்பு

பெரிய வெங்காயம் 

பச்சை மிளகாய் 

காய்ந்த மிளகாய் 

மஞ்சள் தூள் 

கடுகு 

சீரகம் 

வெந்தயம் 

கடலைப்பருப்பு 

எண்ணெய் 

உப்பு 

கறிவேப்பிலை 

கொத்தமல்லி இலை 


செய்முறை 

குக்கரில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, 1/2 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் வெந்தயம், இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 


வதங்கிய பின், பொடியாக நறுக்கிய நான்கு தக்காளி சேர்ந்து வதக்கவும். 


பின்னர், 1/4 கப் அவரைப் பருப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 


30 நிமிடம் ஊற வைத்த  இரண்டு டம்ளர் அரிசி, நான்கு டம்ளர் தண்ணீர், தேவைப்பட்டால் தண்ணீர் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும்.

💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥😊💥🍁💥😊

No comments:

Post a Comment