அரைக்கீரை தக்காளி சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி
தக்காளி
அரைக்கீரை
பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்
காய்ந்த மிளகாய்
மஞ்சள் தூள்
கடுகு
சீரகம்
வெந்தயம்
கடலைப்பருப்பு
எண்ணெய்
உப்பு
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
செய்முறை
குக்கரில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, 1/2 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் வெந்தயம், இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய நான்கு தக்காளி சேர்ந்து வதக்கவும்.
பின்னர், ஒரு கப் அரைக்கீரை சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
30 நிமிடம் ஊற வைத்த இரண்டு டம்ளர் அரிசி, நான்கு டம்ளர் தண்ணீர், தேவைப்பட்டால் தண்ணீர் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும்.
💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥
No comments:
Post a Comment