புதினா ரைஸ்....
தேவையான பொருள்கள்
புதினா - 2 கப்
அரிசி - 2 கப்
இஞ்சி - ஒரு சிறுத் துண்டு
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 2
வேர்கடலை - சிறிது
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
புளி - சிறிது
எண்ணெய் - தேவைக்கு
தாளிக்க
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
கடலைபருப்பு - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - ஒன்று
செய்முறை
அரிசியை சுத்தம் செய்து சாதம் வடிக்கவும். இதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கலந்து வைக்கவும்.
புதினா இலை, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, புளி அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் வடித்த சாதத்தை கலந்து விடவும்.
கடாயில் வேர்கடலை வறுத்து தோல் நீக்கி சாதத்தில் கலந்து எடுக்கவும். சுவையான புதினா ரைஸ் தயார்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
No comments:
Post a Comment