Thursday, 20 April 2017

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு உள்ள உணவுப்பொருள்

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு உள்ள உணவுப்பொருள் 




உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.

நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது.

உங்கள் மருத்துவ அறிக்கை உங்களுக்கு ஹீமோகுளோபின் அளவு சாதாரணமானதை விட குறைவாக காண்பிக்கிறதா? நல்லது உங்கள் மருத்துவர் உங்களுக்கு இரும்புச் சத்து அல்லது வைட்டமின் கூடுதல்களை , எதனால இந்த அளவு குறைந்திருக்கிறது என்ற காரணத்தைப் பொறுத்து அது வழக்கமான அளவிற்கு திரும்ப வருவதற்காக பரிந்துரை செய்யலாம்.ஆனால் இந்த மாத்திரைகள் உங்களுக்கு ஒரு சிறிய காலத்திற்கு மட்டும் உதவலாம். இதை சாப்பிடுவதை நீங்கள் நிறுத்தி விட்டால், உங்கள் ஹீமோகுளோபின் அளவு, நீங்கல் உங்கள் உணவு பழக்கத்தில் சில மாறுதல்களை, உங்கள் ஹீமோகுளோபின் அளவை இயற்கையாக பராமரிக்க சேர்க்கா விட்டால், குறைந்து விடும்.

ஹீமோகுளோபின் அளவை இயற்கையாக அதிகரிக்க குறிப்புகள் :

ஹீமோகுளோபின் குறைந்தஅளவு ஏற்படுத்தும் என்று சில மருந்துகள் பயன்பாடு, இரத்த இழப்பு,எலும்பு மஜ்ஜை குறைபாடுகள், புற்று நோய்,சிறுநீரக பிரச்சினைகள் போன்ற இன்னும் பல காரணங்கள் உள்ளன என்றாலும்,இரும்பு சத்து பற்றாக்குறை, ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி 12 பற்றாக்குறை குறைந்த ஹீமோகுளோபின் அளவிற்க்குமிகவும் பொதுவான காரணமாகஇருக்கிறது.இந்த ஒவ்வொரு குறைபாட்டையும்உணவில் பல்வேறு உணவுகள் சேர்ப்பதன் மூலம் சரி செய்ய முடியும்.நாம் தனித்தனியாகஅவற்றை பார்த்துகொள்ளலாம்.

மேலும் இங்கே சில குறிப்புகள் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது:

1.அஸ்பாரகஸ் (தண்ணீர்விட்டான்r) மற்றும் எள் விதைகள் இரும்புசத்துக்குநல்ல ஆதாரங்களாக உள்ளன.
2.இல்லையென்றால்,.பாதாம் (badaam), உலர்ந்த பீச் போன்ற உலர்ந்த பழங்கள் அல்லது திராட்சையை(Manuka) நிதானமாக மெல்லலாம். நீங்கள் அசைவமாக இருந்தால், மாமிசம் மற்றும் மீன் உங்களுக்கு சிறந்த இரும்புச்சத்து ஆதாரங்களாகும்,
3.உலர்ந்த மூலிகைகளை உங்கள் உணவில் சேர்க்கவும், குறிப்பாக தனியா,புதினா,துளசி,செர்வில்,உலர்ந்த கொத்தமல்லி வகை, வளைகுடா இலை
இரும்புசசத்துஉறிஞ்சுவதை அதிகரிக்க மற்றொரு வழி பால் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற கால்சியம் நிறைந்த உணவுகள் உட்கொள்ளுதல் குறைக்க வேண்டும், ஏனென்றால இரும்பு உறிஞ்சப்படுவதை தடுக்கிறது என்பதுதான்.காபி, தேநீர் மற்றும் ஆல்கஹால் அதிகமாக குடிக்க வேண்டாம்
4.கீரைகள்  போன்ற இலையுள்ள காய்கறிகள்(பாலக்) மற்றும் வெந்தயம் இலைகள் போன்ற,வை மற்றும்பச்சைப் பட்டாணி,சோலே,பாசிப்பருப்பு,துவரம்பருப்புl, உளுத்தம் பருப்பு, ரெஜ்மா போன்ற பருப்புகள் ,பீன்ஸ் மற்றும் பயறுஆகியவற்றில் இரும்புசத்துக்குநல்ல ஆதாரங்கள் உள்ளன.

5.சில நேரங்களில்,ஆக்ஸாலிக் அமிலம் நிறைந்த அந்த போன்ற வோக்கோசு (ajwain) போன்ற உணவுகள் இரும்பு உறிஞ்சப்படுவதை இடையூறு செய்யலாம். அவைகளை அளவுடன் சாப்பிடுங்கள்.
ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி:

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது.
நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி அதில் 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்🍿
காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.🍒
மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.
இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
முதலாவது  நாள் 1+ 1+ 1 =3,இரண்டாவது  நாள் 2+ 2+ 2 = 6,மூணாவது  நாள் 3+ 3= 3 = 9,நாலாவது  நாள் 4+ 4+ 4 = 12,ஐந்தாவது  நாள் 4+ 4+ 4 = 12,ஆறாவது  நாள் 4+ 4+ 4= 12,ஏழாவது நாள் 3+ 3+ 3= 9,எட்டாவது  நாள் 2+ 2+ 2 = 6,ஒன்பதாவது  நாள் 1+ 1+ 1 = 3,
ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள்.
உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும்.
செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்!

Tuesday, 18 April 2017

தண்ணீர் கெட்டுபோகாத மண்பானை

தண்ணீர் கெட்டுபோகாத மண்பானை



மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி.
மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து மூன்று  மணி நேரம் முதல் ஏழு  மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த WATER FILTER மண் பானை ஆகும். எனவே தண்ணீரை மண் பானையில் வைத்துக் குடித்தால் அதில் உள்ள எந்த விதமான கேட்ட  பொருள்களும் அழியும். மண் சக்தியும் கிடைக்கும், பிராண சக்தி அதிகரிக்கும்.
குளிர்ச்சிக்காக பிரிட்ஜில் வைத்திருக்கும் தண்ணீரை எடுத்து 15 நிமிடங்களுக்கு கழித்து  குடிக்க வேண்டும். ஆனால் மண்பானை தண்ணீர் இயற்கையாகவே  தண்ணீரை தாகம் எடுக்கும் போதெல்லாம் உடனே அருந்தலாம். பிரிட்ஜ் தண்ணீரை காட்டிலும் மண்பானை தண்ணீரே மிக சிறந்தது. மேலும் வெட்டிவேர், எலுமிச்சை, புதினாவையும் தண்ணீரில் சேர்த்தால் இன்னும் குளிர்ச்சியாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது. மண்பானைகளை வைப்பதற்கு முன் கீழே மணல் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இளம்  தென்றல் காற்று, வழிந்து ஓடும் நதி, வெண்  மேகமாய் கொட்டுகிற அருவி, கால்களில் மிதிபடும் பனித்துளி... என்பது போல வேனலுக்கு   கொளுத்துகிற வெயிலில் வெளியில் சுற்றிவிட்டு வந்தவுடன் ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஃபிரிட்ஜைத் திறந்து ‘கோக்’ சாப்பிடுகிறோம்.

இப்போது காலம் மாறி, விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. வெயிலுக்கு சூடு ஆற்றி  கொள்ள ஒரு டம்ளர் மோர், கொஞ்சம் எலுமிச்சை பழச்சாறு அல்லது இரண்டு கீற்று நுங்கு என்று இயற்கை உணவுக்கு மாறிக் கொண்டே வருகிறோம்.

குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரைவிட மண்பானையில் வைத்திருக்கும் நீரை விரும்பி அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இயற்கையோடு இணைந்திருப்பதே இன்பம்  என்ற முடிவுக்கு நாம் கொஞ்சம் கொஞ்சமாய் திரும்பிக் கொண்டிருக்கிறோம்.

மேலும்  விஞ்ஞானிகள் பல வோல்ட் மின்சாரத்தை காலி செய்து தண்ணீரைக் குளிர வைப்பதற்குக் கண்டுபிடித்த ஃபிரிட்ஜ் தொழில்நுட்பத்தை, ஆடம்பரமே இல்லாமல் அசால்ட்டாக நம்மூர் கிராமத்து விஞ்ஞானிகள், வெறும் மண்பானையை வைத்தே செய்து காட்டிவிட்டார்கள்.

மண்பானையின் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், வெளியில் வெயில் பட்டையைக் கிளப்பும்போது மண்பானை தன்னுள் இருக்கிற நீரை அதிக அளவு குளிரச் செய்யும். வெளிப்புறத்தில் வெயில் குறைவாக இருந்தால் மண்பானையில் உள்ள நீரும் குறைந்த அளவே குளிர்ந்து இருக்கும்.

கடும் கோடையில் உடலுக்கு இதமாக, ஒரு மண்பானை நீரை நன்றாகக் குளிரச் செய்து கொடுக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்

மண்பானையில் உள்ள சிறிய நுண் துளைகள் வழியேதான் இப்படி நீர் கசிகிறது. இந்த நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கிறது. இப்படி பானையின் வெப்பமும், பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுகிறது. எனவே நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கிறது

உலகத்தில் எந்த ஒரு மூலையிலும் நீங்கள் எது வேண்டும் என்றாலும் இருந்து விடலாம் அனால் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது  பல காலங்களுக்கு முன்பு ஆற்று நீரும் பூமிக்கு அடியில் நாம் பயன்படுத்தி வரும் தண்ணீரும் நமக்கு தேவையான உடம்பில் உள்ள அயோடின் தாதுப்பொருள் தந்துள்ளது அனால் இப்போது அதன் நன்மை நாம் கடையில் வெங்கும் பாட்டில் தண்ணீரிலோ கோகோ கோலவிலோ அது கிடைப்பதில்லை சுமார் பல கோடி கொள்முதல் கொண்டு நமது நாடும் அதன் சார்ந்த வணீக தாரர்களும் அவர்களுக்கு பணம் சம்பாதிக்க தொடங்கி உள்ளார்கள்.


மேலும் இந்த வணீக தாரர்கள் அவர்களுக்கு தேவையான பணம் சம்பாதிக்க முழுவதுமாக பாட்டில் தண்ணீரையும், கென் தண்ணீரையும் கொண்டு சேர்பதுர்க்காக  அதற்க்காக விளம்பரங்களுக்கும் கொடுக்கிறார்கள்
.இவ்வாறு பயன்படுத்தபடும் குடிநீரில் நாம் உடலுக்கு தேவையான தாது பொருள்கள் நிறைந்தவையா என ஆராய்ந்தால் இல்லையொன்ற பதில் மட்டுமே வருகிறது.

பிரபல தொழில்நுட்பம் மூலம் இப்போது வளரும் எல்லா கார்ப்ரேட் கம்பெனிகளும் அதன் ஆளுமையை வைத்து தூசி கலந்தாலும் அதை வடிகட்டுகிறோம் என்ற பெயரில் அதில் உள்ள மனிதருக்கு தேவைப்படும் தாது பொருள்களை பிரித்து எடுத்து வெறும் சக்கை குடிநீராக கேனில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது குடிநீரை நமக்கு உடம்புக்கு தேவையான இந்த கோடையில் தொற்று நோய்களை தடுக்க, இதை முயற்சி சொய்யலாம், அதில் நம்ம செய்ய வேண்டியது என்ன வென்றால் சிறிது மிளகு (25 கிராம்),தேத்தாங்கொட்டை ஒன்றை எடுத்து கொள்ளவும்,வெட்டி வேர் சிறிது,வெந்தையம் சிறிது (20 கிராம்),சீரகம் சிறிது(25 கிராம்). 
இவைகளை எல்லாம் நமக்கு தேவையான எடுத்து வைத்து கொண்டு அதை மிகவும் பக்குவமாக ஒரு துணியில் கட்டி அதை பதினைந்து முதல், இருவது லிட்டர் தண்ணீரில் கட்டியபடி அப்படியே ஒரு நாள் முழுவதும் இட்டு அதை குடித்து வந்தால் நமக்கு உண்டாகும் தோற்று நொய்யாக இருந்தாலும் தொழுநோய்யாக இருந்தாலும் குணமாகும்.

Monday, 17 April 2017

கர்ப்பிணிப் பெண்களுக்கான முக்கியமான தகவல்

கர்ப்பிணிப் பெண்களுக்கான சில குறிப்பிடத்தக்க டிப்ஸ்:



தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் அவர்களின் பூரணத்துவத்தை அடைவது என்றால் மிகையில்லை. பொதுவாக திருமணம் முடியும் வரை பெண்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடும், வாழ்க்கை பற்றிய கனவுகளோடும் இருந்தாலும் திருமணத்திற்குப் பின் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதே அவர்களின் மறுபிறவி என்கிறோம்.

ஆகவே தான் தாய்மையை, மனித இனத்தின் ஆதாரமான குழந்தைகளை வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கும் அன்னையரை அனைவரும் போற்றிப் புகழ்கிறோம். குழந்தையை வயிற்றில் கருவாக சுமந்த முதல் மாதத்தில் இருந்து புதிய உயிரை பெற்றெடுப்பது வரை எவ்வித சிக்கலும் இன்றி கர்ப்பிணிப் பெண்கள் சிறப்பான உணவு முறைகளையும், எளியவகையிலான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் மருத்துவர்களின் ஆலோசனைகளையும் தவறாமல் உரிய முறையில் கடைபிடித்தல் அவசியம்.


கர்ப்பம் என்பதை மருத்துவரிடம் உறுதிப்படுத்திய பின்னர், ஒவ்வொரு மாதமும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு முறை படுக்கையிலிருந்து எழும்போதும் கவனமாக பொறுமையுடன் எழுந்திருத்தல் வேண்டும்.

சாப்பிடும் உணவை நுகர்ந்தபின் சாப்பிடுவதை தவிர்க்கவும். அது உங்களுக்கு உணவின் மீது அதிருப்தியை ஏற்படுத்தலாம்.

தேவைப்பட்டால் எலுமிச்சம் பழம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு நுகர்ந்து கொள்ளவும். இது வாந்தியைத் தவிர்க்க ஏதுவாகும்

கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்று நோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தாது உப்புகளும், உயிர் சத்தும் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து உள்ளது. மேலும் இதில் குளோரைடு, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகமாக உள்ளது.

பயணத்தின் போது நீண்டநேரம் உட்கார்ந்திருப்பதைத் தவிருங்கள். குறைந்தது ஒருமணி நேரத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஓருமுறையோ நடந்து உலவுங்கள். பெரும்பாலும் பயணத்தின் போது அவ்வப்போது கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

நிறைமாதத்தில் குழந்தைபிறப்பதற்கான வலி ஏற்படும் போது, முடிந்தால் சற்றே நடக்கலாம். இதன்மூலம் குழந்தை பிறப்பது சற்றே எளிதாகும்.

கர்ப்ப வலி இருக்கும் போது சாப்பிடுதல் அல்லது திரவங்களைக் குடிப்பதால் குழந்தை பிறப்பது விரைந்து பலனைத் தரும்.

அடிக்கடி தண்ணீர் அருந்துங்கள். உடலில் உள்ள தண்ணீர் வெயில், உடல் உஷ்ணம் காரணமாக அவ்வப்போது நீர்த்துப் போகும் என்பதால் தேவையான அளவு தண்ணீரை குடிப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.

இடுப்பை இறுக்காதவகையிலான தொழதொழப்பான (லூஸ்) ஆடைகளை அணிந்து கொள்ளப்பழகுங்கள்.

தேவைப்பட்டால் முழங்கால்களுக்கு இடையே தலையணை ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால் உங்களின் இடுப்பு மற்றும் முழங்கால்களில் ஏற்படும் அழற்சி சற்றே மட்டுப்படும்.

கர்ப்பமாக இருக்கும் போது முதுகுவலி ஏற்பட்டால், உடனடியாக வெந்நீர் பேக் கொண்டு வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுங்கள். உங்களின் முதுகுத்தண்டானது சுவரில் ஒட்டியிருக்கும்படி நின்றுகொண்டு சிறிதுநேரத்திற்கு அதே நிலையிலேயே இருங்கள். இதனால் முதுகுவலி நீங்கலாம்.
படுத்திருக்கும் போது உங்களின் கால்கள் உயர்வாக இருக்குமாறு தலையணைகளை வைத்துக் கொண்டு தூங்கலாம்.


1.சூடான அயிட்டம் எதுவும் சாப்பிட கூடாது.

2.பைனாப்பிள்,கொய்யா,பப்பாளி இது ரொம்ப சூடு இதை தவிர்க்கவும். 7 மாதத்திற்கு மேல் சிறிது சாப்பிடலாம்.

3.,இறால், பீஃப் ,கருவாடு ரொம்ப சூடு, கொஞ்சமா சாப்பிட்டு கொள்ளலாம்,

4.இரவு சாப்பாட்டை 7 மணிக்குள் முடிக்கவும்.

5.காய் வகைகளில் கேஸ் அயிட்டம் உருளை, சேனை,சீனி வள்ளி,மரவள்ளி இதெல்லாம் அளவாக சாப்பிடவும்.


கர்பிணி பெண்கள் மருத்துவரிடம் சென்றால் அவர்கள் கர்பிணி பெண்களை பரிசோதித்து அவர்களுக்கு ரத்தம் குறைபாடு அதற்கு போலிக் ஆசிட் மருந்து . or டானிக் தருவார்கள் பிறகு நம் கால் வீங்கி கொள்கிறது என்று கூறுவோம் அதற்க்கு கால்சியம் மாத்திரை (சுண்ணாம்பு சத்து) தருவார் ஆனால் நம் அருகில் கிடைக்கும் அளவற்ற சக்தி பெற்ற முருங்கை கீரை நாட்டு பசு நெய் பயன் படுத்துங்கள் எழும்புகள் வழுப்பெறும் நெய்யினால் நம்   குழந்தையின் மச்சை வழுப்பெறும்

பிரசவத்திற்கு பிறகு உடல் எடை குறைப்பிற்கு செய்ய வேண்டியவை:

பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுள் உடல் எடை அதிகரிப்பு முக்கியமானது. அதிலும் ஒருசில பெண்களுக்கு வழக்கத்தை விட உடல் எடை கிடுகிடுவென உயர்ந்து விடும். எடை அதிகரித்துவிட்டால், அதிரடியாக அதை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. போதுமான அளவு சத்துணவுகளை சாப்பிட்டு மிதமான முறையில் எடைக்குறைப்பில் ஈடுபடவேண்டும். உடல் எடையை உடனே குறைக்கவேண்டும் என்ற எண்ணத்தில், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

கர்ப்பிணி பெண்கள் உடல் எடை குறைப்பிற்கு செய்ய வேண்டியவை:

 கர்ப்பக் காலத்தில் கடைப்பிடித்த உணவு பழக்கவழக்கங்களில் அத்தியாவசியமானவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் பருகுவது அவசியம். அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.

 கீரை வகைகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். மீன் உணவுகளையும் விரும்பி சாப்பிட வேண்டும். அவற்றில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் பிரசவத்திற்கு பிறகு அதிகரித்த உடல் எடையை குறைப்பதற்கு உதவும். பிரசவத்திற்கு பிறகு தாய்மார்களுக்கு தேவையான வேறுசில சத்துக்களும் அதில் இருக்கின்றன.

 தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் எடை குறைப்பிற்கும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். குறிப்பாக பால், தயிர் போன்றவற்றை அதிகம் பருக வேண்டும். அதில் இருக்கும் கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். உடல் எடையையும் குறைக்கும்.

 பெரும்பாலான பெண்களை முதுகுவலி பிரச்சினை வாட்டி வதைக்கும். கால்சியம் சத்து குறைபாடே அதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

புரோட்டின் சத்துக்கள் நிறைந்த உணவுகளும் உடல் எடை குறைப்பிற்கு வழி வகுக்கும். பீன்ஸ், கோழி இறைச்சி போன்றவற்றில் கொழுப்பு சத்து குறைவாக இருப்பதோடு புரோட்டின் அதிகமாக இருக்கும். அவை உடலுக்கு போதுமான சக்தியை கொடுத்து எடை குறைப்பை துரிதப்படுத்தும்.

 எலுமிச்சை உடல் எடையை குறைப்பதோடு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் துணைபுரியும். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து அதனுடன் தேன் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் குடித்தால் உடலில் தங்கியுள்ள கொழுப்பு கரையும். அது எடை குறைப்புக்கு முன்னோட்டமாக அமையும்.

 உணவு அளவை குறைத்து அதற்கு ஈடாக காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். யோகாசனம் மற்றும் எளிமையான உடற்பயிற்சிகளை அன்றாடம் செய்வதையும் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.