Wednesday, 8 February 2017

துளசி (Ocimum tenuiflorum)

துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது.

இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும். துளசியின் மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்திருப்பது அவசியமானதாகும். மருத்துவம் முன்னேறும் இந்நாளில் பல நவீன கண்டுபிடிப்புகள் இருந்தாலும் நோய்களும் தொடர்ந்து மனிதனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
மூலிகை செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்ரிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு.
எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

நாம் நினைப்பதுப் போல நோய் நிவாரணி மட்டுமல்ல.. சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் அற்புத பணியை செய்கிறது. இந்த பணியை பெரும்பாலான தாவரங்கள் செய்தாலும், துளசிக்கும் மற்ற தாவரங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. துளசியிலுள்ள மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களால் வளிமண்டலத்திலுள்ள புகைக் கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. அதனால் சுத்தமான காற்று கிடைக்கிறது. துளசி, அதிகம் உள்ள இடங்களில் கொசுக்கள் வராது.

இதற்க்கு வேறு பெயர்கள் உண்டு துழாய், (நீல நிற துளசி,. இதனை கிருஷ்ண துளசி, எனவும் கூறுவர்), துளவம், மாலலங்கல், ஸ்ரீதுளசி, ராமதுளசி

பின்வருவன இதன் வகைகள் ஆவண, நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்), காடு துளசி

வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 – 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகிஇல் இது வளரும் தன்மை கொண்டது

எந்த நோயாக இருந்தாலும் கவலைப்படாமல் துளசிநீர் மட்டும் குடித்து வாருங்கள். அனைத்து நோய்களின் தாக்கமும் குறைந்து விடும்.

துளசி நீர் எப்படி செய்வது?

முதலில் சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொண்டு அதனுள் சிறிதளவு சுத்தமான தண்ணீர் விட்டு ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும்.

இதை எட்டு மணிநேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் துளசி நீரை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், அல்லது இரண்டு டம்ளரோ குடிக்க வேண்டும்.

இவ்வாறு 48 நாட்கள் பருகினால் 448 வகையான நோய்கள் குணமாகும். அத்துடன் தோல் சுருக்கம் மறையும். நரம்புகள் பலப்படும். பார்வை குணமடையும். இதன் அர்த்தம் யாதெனில் நாம் இளமையுடன் என்றென்றும் வாழலாம்.

மேலும், உடலின் எந்த பகுதியில் புற்று நோய் இருந்தாலும் இந்த துளசி நீர் அருந்தினல் போதும் பூரணமாகக் குணம் ஆகும்.

Thursday, 2 February 2017

முருங்கை பூ குழம்பு

முருங்கை பூ :

               பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூக்களின் பயன்களைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் முருங்கைப் பூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்வோம்.

முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர்.

முருங்கை மரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணம்  நிறைந்துள்ளது. இதில் பூக்களின் மருத்துவ பண்பு கள் அலாதியா னது. உடலின் வெப்பத்தை தணித்து குளிர்ச்சி தரக் கூடிய சக்தி முரு ங்கைப் பூக்களுக்கு உண்டு. கண்களை பாது காக்கும், பித்த மயக்கம் போக்கும். நல்ல தாது பலம் கொடுக்கும். மொத்த த்தில் முருங்கைப் பூவானது பிணி தீர்க்கும் மருந் தாகப் பயன் படுகிறது.

முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.

இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.

இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.
முருங்கைப் பூ எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு பொருள். இது அரிய மருந்தாகவும் பயன்படுகிறது. குறிப்பாக ஆண்கள், ஆண்மை அதிகரிக்கும் தாதுவை இது அதிகளவில் கொண்டுள்ளது. இப்படிப் பட்ட முருங்கைப் பூவில் என்ன நலன்கள் இருக்கின்றது என்பதைப் காணலாம்… முருங்கை மரத்தின் இலை, பட்டை, வேர், காய் அனைத்தையுமே ஒவ்வொரு வகையில் மருத்துவச்சிறப்பு பெற்றுத் திகழ்கின்றன.

முருங்கை பூ குழம்பு செய்முறை விளக்கம் :


தேவையானவைகள் :
உலர்ந்த முருங்கை பூ - 1 கை பிடி
இஞ்சி- 30 கிராம்
பூண்டு- 1 பல்
பச்சை பயிறு- 30 கிராம்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -2 சிட்டிகை
பெருங்காயம் -1 சிட்டிகை
கொத்தமல்லி விதை -2 தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
நெய் - 4 தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

பச்சை பயிறு அதை மீதமான சூட்டில் மணம்  வரும் வரை வறுக்கவும்.
பின்னர் தோல் நீக்கிய இஞ்சியை ,பூண்டு,சீரகம்,மிளகு,மஞ்சள் தூள்,பெருங்காயம்,உப்பு,கொத்தமல்லி விதை,வறுத்த பச்சை  பயிறு என அனைத்தையும் அரைத்து தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பச்சை வாசனை போன பிறகு முருங்கை பூவை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் குழம்பில் சேர்த்து கொதிக்க விடவும். தேவையெனில் சிறிதளவு எலுமிச்சை சாரும் வெள்ளமும் சேர்க்கலாம். உடல் வலிமை தரும் முருங்கைக் குழம்பு ரெடி.

இதில் இரும்புச்சத்தும், புரதச்சத்தும், நிறைந்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி தரும். இதனால் தலை வலி, முடி உதிர்வு சரியாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் உணவு இந்த முருங்கை பூ குழம்பு 

Wednesday, 1 February 2017

பழங்கள் சாப்பிடும் முறை

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;

இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! 

"புற்றுநோயைக் குணப்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று!!
புற்றுநோயைக் குணப்படுத்தும் எனது சிகிச்சைமுறைகளில், சமீபகால வெற்றிவிகிதம் 80%.

புற்றுநோயாளிகள் மரணத்தைத் தழுவக்கூடாது.புற்றுநோயாளிக்கான சிகிச்சை ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது- அது நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில் உள்ளது.

நீங்கள் நம்புவீர்களோ இல்லியோ, இதுவரை வழக்கமான சிகிச்சை முறையில் இறந்த நூற்றுக்கும் அதிகமான புற்று நோயாளிகளுக்கான நான் வருத்தப்படுகிறேன்.

பழங்கள் சாப்பிடும் முறை;;

எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று.

நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை 'எப்படி' அதுவும் '*எப்போது'* சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன?

பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!

பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!

பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும்
வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!

பழங்கள் ஒரு முக்கியமான உணவு;

சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.

பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட
'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.

இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.

பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.

அதனால் தயவு செய்து பழங்களை  வெறும் வயிற்றில் அல்லது  உணவுக்கு முன் சாப்பிடுங்கள்.!!

பலர் புகார் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.

""ஒவ்வொரு முறை நான் தர்ப்பூசணி பழம்( Watermelon) எடுக்கும்போதெல்லாம் எனக்கு ஏப்பம் வருகிறது, எப்போது நான் துரியன் பழம் சாப்பிட்டாலும் வயிறு ஊதிக் கொள்கிறது, எப்போது நான் வாழைப்பழம் சாப்பிட்டாலும், அவசரமாக கழிவறைக்கு ஓட வேண்டியிருக்கிறது, இன்னும் பல .. .. . .

உண்மையில் நீங்கள் வெறும் வயிற்றில் பழம் எடுத்துக் கொண்டால், இந்த மாதிரி நிலைமை தோன்றாது!

உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால் , வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!!

நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை யெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால்,
  நடக்காமல் தடுக்கப்படும்


சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு, அழகு,நீண்ட ஆயுள்,உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடை இவற்றைப் பெறும் ரகசியம்  கிடைத்து விடும்.

3)நீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது,  புதிதான பழச்சாறுகளையே அருந்துங்கள். டின், பாக்கட்,மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள் வேண்டாம்.

சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம்.

பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள்.ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது.

சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன.உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது.

ஆனால் பழச்சாறு சாறு அருந்துவதை விட , பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும்.ஏனென்றால், நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பவும்.

உங்கள் உடல் உறுப்பக்களைச் சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும். ஒரு 3- நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.

அந்த 3 நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த டயட்டின் முடிவு நீங்களே ஆச்சரியப் படும்படி, நீங்கள் மிகவும் அழகாய், வனப்புடன் தோற்றமளிப்பதாய் உங்கள் ஃபிரண்ட்ஸ் கூறும்போது உணர்வீர்கள்.

கிவி பழம்;


இது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம்.
இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம்.
ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.

ஆப்பிள்;



































ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே!

ஆப்பிளில் விட்டமின்-சி சத்து குறைவாக இருப்பினும்,அதில் உள்ள antioxidants ,flavonoids போன்றவை இந்த விட்டமின் - சி சத்துக்களை மேம்படுத்துவதால், பெருங்குடல் புற்று நோய்,மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது!

ஸ்ட்ராபெர்ரி ;

பாதுகாப்பு தரும் பழம்.
இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால்,இது நம் உடலில் சுதந்திரமாய் கட்டுப்பாடற்று பல்கிப் பெருகும் அடிப்படைக் கூறுகளால் ( free radicals) இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது.

ஆரஞ்சு;

இனிப்பான மருந்து.

ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும்.கொழுப்பைக் குறைக்க உதவும்.மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும்.
அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது.

தர்பூசணி;


மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான்.
92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது.
மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால்,அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் இது lycopene. என்னும் புற்று நோயை எதிர்த்துப் போராடும் ஒரு oxidant இன் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.
தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி , பொட்டாசியம் ஆகியவை.

கொய்யா& பப்பாளி



இவை இரண்டுமே விட்டமின் - சி நிறைந்தது.உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத் தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை.
கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

பப்பாளிப்பழம்










































Carotene சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது
உணவிற்குப் பிறகு குளிர்ந்த தண்ணீர் அல்லது பானங்கள் குடிப்பது புற்று நோய்.