Thursday, 2 February 2017

முருங்கை பூ குழம்பு

முருங்கை பூ :

               பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூக்களின் பயன்களைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் முருங்கைப் பூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்வோம்.

முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர்.

முருங்கை மரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணம்  நிறைந்துள்ளது. இதில் பூக்களின் மருத்துவ பண்பு கள் அலாதியா னது. உடலின் வெப்பத்தை தணித்து குளிர்ச்சி தரக் கூடிய சக்தி முரு ங்கைப் பூக்களுக்கு உண்டு. கண்களை பாது காக்கும், பித்த மயக்கம் போக்கும். நல்ல தாது பலம் கொடுக்கும். மொத்த த்தில் முருங்கைப் பூவானது பிணி தீர்க்கும் மருந் தாகப் பயன் படுகிறது.

முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.

இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.

இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.
முருங்கைப் பூ எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு பொருள். இது அரிய மருந்தாகவும் பயன்படுகிறது. குறிப்பாக ஆண்கள், ஆண்மை அதிகரிக்கும் தாதுவை இது அதிகளவில் கொண்டுள்ளது. இப்படிப் பட்ட முருங்கைப் பூவில் என்ன நலன்கள் இருக்கின்றது என்பதைப் காணலாம்… முருங்கை மரத்தின் இலை, பட்டை, வேர், காய் அனைத்தையுமே ஒவ்வொரு வகையில் மருத்துவச்சிறப்பு பெற்றுத் திகழ்கின்றன.

முருங்கை பூ குழம்பு செய்முறை விளக்கம் :


தேவையானவைகள் :
உலர்ந்த முருங்கை பூ - 1 கை பிடி
இஞ்சி- 30 கிராம்
பூண்டு- 1 பல்
பச்சை பயிறு- 30 கிராம்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -2 சிட்டிகை
பெருங்காயம் -1 சிட்டிகை
கொத்தமல்லி விதை -2 தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
நெய் - 4 தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

பச்சை பயிறு அதை மீதமான சூட்டில் மணம்  வரும் வரை வறுக்கவும்.
பின்னர் தோல் நீக்கிய இஞ்சியை ,பூண்டு,சீரகம்,மிளகு,மஞ்சள் தூள்,பெருங்காயம்,உப்பு,கொத்தமல்லி விதை,வறுத்த பச்சை  பயிறு என அனைத்தையும் அரைத்து தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பச்சை வாசனை போன பிறகு முருங்கை பூவை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் குழம்பில் சேர்த்து கொதிக்க விடவும். தேவையெனில் சிறிதளவு எலுமிச்சை சாரும் வெள்ளமும் சேர்க்கலாம். உடல் வலிமை தரும் முருங்கைக் குழம்பு ரெடி.

இதில் இரும்புச்சத்தும், புரதச்சத்தும், நிறைந்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி தரும். இதனால் தலை வலி, முடி உதிர்வு சரியாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் உணவு இந்த முருங்கை பூ குழம்பு 

No comments:

Post a Comment