Saturday, 25 February 2017

உடம்பில் தண்ணீர் இல்லை என்றால் பித்த வெடிப்பு வரும்

கால் வெடிப்பு (Cracks)



பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவஸ்தை படும் பலர், அதற்கான காரணம் தெரியாமல் புலம்புகின்றனர். பாதங்களை சுத்தமாக பாதுகாப்பதில் கவனம் செலுத்தாததே காரணம். இதனால் வெடிப்பு ஏற்பட்டு, வெடிப்பு புண்ணாகி கஷ்டப்படுகின்றனர்.
பாதங்களில் ஏற்படும் சிறிய பிளவுகளுக்கு, பித்த வெடிப்பு என்று பெயர்.

வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் தண்ணீரை பயன்படுத்துவார்கள். வீட்டில் பாத்திரம் கழுவுவது சோப்பு போடுவது வீட்டை  கழுகி சுத்தம் செய்வது தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்கள் கால்கள் அதிகளவு ஈரமாக இருக்கும். உப்பு தண்ணீர்  அதிகளவில் கால்களில் படுவதால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் வெடிப்பு புண்ணாக மாறி வலியை உண்டாக்கும்.

இதனால் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகின்றனர் பெண்கள். இது போன்று பாத வெடிப்புகளால் அவதிப்படும் பெண்கள் அதற்கான சிகிச்சை பெற்றாலும்  குணமாகாது

மேலும் தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். கடினமான செருப்பு அணிவதாலும் பாத வெடிப்புகள் வரும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் பாத வெடிப்புகள் வரும்.

  பூமியில் தண்ணீர் இல்லை என்றால் மண் வெடித்து விடுகின்றன. அது போல் தோலின் தண்ணீர் சத்து குறையும் பொது தோல் ஆனது வெடிக்கின்றது.

இதன் காரணங்கள்:

  பித்த வெடிப்புக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அது சொரியாஸில் மற்றும் சாதாரண கால் வெடிப்பு . சொரியாசிஸினால் ஏற்படும் கால் வெடிப்புகள் உள்ளங்காலில் உண்டாகும், அரிப்பு ஏற்படும், ரத்தம் கூட வரலாம்.

தண்ணீர்ச் சத்து குறைவினால் வரும் சாதாரண கால் வெடிப்பு. கால் பாதத்தின் ஓரத்தில் வருவது ஆகும் .          

மருத்துவமுறைகள்:

உள்ளங்காலில் வெடிப்பு வந்தவர்களை மருத்துவரை அணுகி சோரியாசிஸ் தானா என்று முடிவு செய்த பிறகு அதற்குரிய மருத்துவம் செய்யவேண்டும்.

மாய்சரிஸ் (Moisturisers) பயன்படுத்தவேண்டும்.

சாதாரண கால் வெடிப்புக்கு தோல் வெடிப்பினால் ஆனா காலணிகளை போட வேண்டும்.(Leather shoe)

தோலினால் ஆன காலணிகளை அணிபவர்களுக்கு காலில் வெடிப்பு வருவதில்லை.

காலணிகள் நன்மைகள்:

  காலில் வரும் வியர்வை காலனி உள்வாங்கி கொள்ளும். நமது தோல் உணரும்போது ஈரப்பதமுள்ள காலனி நமக்கு பாதுகாப்பாக அமையும்.




No comments:

Post a Comment