Thursday, 16 February 2017

நெல்லிக்காயில் அடங்கியுள்ள சத்துக்கள்

நெல்லிக்காய்


நெல்லி மரம் ஒரு சிறிய மரம். இமாலயப் பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும் அதிகமாக வளர்கிறது. தமிழகத்தில் வளரும் நெல்லிக்காய் சிறியளவில் கொஞ்சம், துவர்ப்பும், புளிப்பும் அதிகம் கொண்டதாக இருக்கும். வடநாட்டில் வளரும் நெல்லி பெரிதாக இருக்கும்.

பல மருத்துவக் குணங்களும் சேர்ந்து இருப்பதாலேயே நெல்லியை அனைவரும் உயர்வாகப் புகழ்கிறார்கள்.பெரியளவில் உள்ள நெல்லிக்காய் ஊறுகாய்க்கும், நெல்லி மொரப்பா செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். 

சிறியதை ஆயுர் வேத மருந்துகள், ஆயுர்வேத லேகியம் முதலியவை செய்ய பயன்படுத்துகிறார்கள்.தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்து ணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக் காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.

நெல்லி ஆண், பெண் பூக்கள் தனித்தனியானவை. சிறியவை, வெளிறியவை, பசுமையானவை, அடர்த்தியானவை, கொத்தானவை. நெல்லிக்காய்கள் கொத்தானவை. இளம் மஞ்சள் நிறமானவை. பழங்கள் 2.5 செ.மீ. வரை குறுக்களவு கொண்டவை. 

சதைப்பற்றானவை. உருண்டையானவை. ஆறு விதைகள் கொண்டவை.
தமிழ்நாடு முழுவதும் காடுகளில் வளர்கின்றன. வீட்டுத் தோட்டங்களில், தோப்புகளில் விளையும் மரங்கள் பெரிய கனிகளுடன் காணப்படும். 

நெல்லிமுள்ளி எனப்படும் உலர்ந்த காய் எல்லாக் காலங்களிலும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். நெல்லிக்காய் இலை, காய், வற்றல் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்ததாக உள்ள நெல்லிக்கனிகள் பழ வகைகளுள் மிகவும் முக்கியமானவை.நெல்லிக்காய் வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய் போன்றவை ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களாகும்.

நெல்லி மரங்கள், வீட்டு மராமத்து வேலைகளுக்கும் பயன்படுபவை. நெல்லிக்காய் பட்டைகள், சாயங்கள் மற்றும் தலைக்கழுவி நீர்மம் தயாரிப்பதில் பயன்படுகின்றன.

சாதாரணமாக நமக்கு குறைந்த செலவில் கிடைக்கும் ஒரு சத்துள்ள பழம் நெல்லிக்காய் ஆகும். நுரையீரல் சார்ந்த காசநோயை இது விரைவாக குணப்படுத்துவது மருத்துவ ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 
நெல்லிக் கனிகளை உலர்த்தி வற்றலாக்கி, வைட்டமின் “சி” சத்து குறைவால் வரும்  நோய்களை நெல்லிக்காய் குணப்படுத்தும். மேலும், இது உடலில் எதிர்ப்பு சக்தியை நிலைப் படுத்தக் கூடியது. மொத்தத்தில் நெல்லிக்காய ஒரு கற்ப மருந்தாகத் திகழ்கின்றது.

மேலும் நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காகஅதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும். இப்போது அந்த நெல்லிக்காய் ஜூஸை எப்படியெல்லாம் குடிக்க வேண்டும். அவ்வாறு குடிப்பதால், உடலுக்கு என்ன நன்மையெல்லாம் கிடைக்கும் என்பதனைப் பார்ப்போமா!!!


நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், நல்லது.

உடல் எடை:

நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில்  குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும்.


நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.

மலச்சிக்கல்:

நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.

இரத்த சுத்திகரிப்பு:

நல்ல ஃப்ரஷ்ஷான நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது,  இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சிறுநீர் எரிச்சல்:

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகையஎரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.

உடல் குளிர்ச்சி:

கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் சிறந்ததாக இருக்கும்.

அதிகமான இரத்தப்போக்கு:

மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் போது, தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும், கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால்,சரிசெய்துவிடலாம்.

அழகான முகம்:

முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.


உடலில் இரத்தம் குறைவினால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்க, தினமும்  நெல்லிக்காய் சாற்றை குடித்தால், இரத்த சிவப்பணுக்களின்எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.


இதயம் பலவீனமாக இருப்பவர்கள், தினமும் நெல்லிக்காய் சாற்றை அளவாக குடித்து வந்தால், இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்யலாம்.

சரும பிரச்சனைகள்:

நெல்லிக்காய் ஜூஸ் சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. குறிப்பாக முகப்பரு, பிம்பிள் உள்ளவர்கள், அதனை குடித்தால் போக்கிவிடலாம்.

கண் பார்வை:

நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், கண் பார்வை அதிகரிக்கும்.

முதுமைத் தோற்றம்:

நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, முதுமைத் தோற்றமானது விரைவில் வெளிப்படுவதை தடுக்கும்.

சாதாரணமாக அடங்கியுள்ள சத்துக்கள்


இதில் மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளதாகக் கருதப்படுகின்றது.

No comments:

Post a Comment