Friday, 17 February 2017

சருமத்தின் அழகு கெடும் நோய்

வெண்படை (Vitiligo)

வெண்படை என்றும் அழைக்கப்படுகின்ற வெண்புள்ளி நோயானது ஆங்கிலத்தில் லீகோடெர்மா எனப்படுகிறது.
மெலனின் குறைபாட்டால்தான் இந்த நோய் வருகின்றது. இதை நோய் என்று சொல்வது கூட சரியல்ல. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மன அளவில் படும் துன்பம் மிக அதிகம். சமூகரீதியாக இது குறித்த விழிப்புணர்வு அறவே இல்லை.
வெண்படை நம் தோலில் ஏற்படும் சாதாரண நிறமாற்றமே.
இது மற்றவர்களுக்கு ஒட்டுவதில்லை.
இதனால் உள் உறுப்புகளும் பாதிப்பு அடைவதில்லை.
இது ஆண் பெண் இருபாலருக்கும் எந்த வயதிலும் தோன்றக்கூடியது.
இந்தப்படையினால் சருமத்தின் அழகு கெடும் என்பதைத் தவிர எந்த பாதிப்பும் கிடையாது.

காரணங்கள்:


  1. நம் தோலில் நிறத்தை லெமனின் அணுக்கள் நிர்ணயிக்கிறது. இந்த லெமனின் அணுவுக்கும், நம் தோலில் இருக்கும் இன்னொரு அணுவுக்கும் தெரியாமல் நடக்கும் மகாராதப்போர் (Auto Immunity). இதில் லெமனின் அணுக்கள் இறந்து விடுகின்றன.
வகைகள் :

  1. இது இரண்டு வகை படும் 
  2. ஒன்று பரவும் தன்மை வெண்படை (Unstable Vitiligo).
  3. பரவா தன்மை வெண்படை (Stable Vitiligo).
பரவும் தன்மை வெண்படை (Unstable Vitiligo).: 

  இதன் மருத்துவமுறைகள் 

  1. முதலில் வெண்படையின் பரவும் தன்மை குறைக்க வேண்டும்.
  2. பின்னர் ப்ரிட்னிசலோன் கலந்த ஸ்டிராய்டு மாத்திரைகள் தான் தீர்வு.
  3. காலை வெறும் வயிற்றில் "சோரோலின் " மாத்திரைகள் தினமும் உட்க்கொண்டு, வெண்படை உள்ள பகுதிகளில் காலை இளம்வெயிலில் பத்து நிமிடம் முதல் இருப்பது நிமிடம் வரை காட்ட வேண்டும்.
  4. புவா (Puva) எனும் லைட் சிகிச்சை.

  1. பரவா தன்மை வெண்படை (Stable Vitiligo).:
இதன் மருத்துவமுறைகள் :

  1.         சோரோலின் மாத்திரையை உட்க்கொண்டு அப்பகுதியை தினமும் காலையில் இளம் வெய்யிலில் காட்டவேண்டும்.
  2. மாத்திரை மூலமாக குணமடைய வில்லை என்றாலும், நோயளிக்கு வேகமாக சரிசெய்ய வேண்டும் என்றாலும் அறுவை சிகிசை மேற்கொள்ளலாம். (திருமணத்திற்கு முன்னால் இது போன்ற அவசர சிகிச்சைக்கு பயன்படுவது இது )
அறுவைசிகிச்சை முறைகள் :

  1. பஞ்சுகிராபிட்டிங் (Punch Grafting)
              தோலில் பிற பாகங்களிலில் இருந்து சிறிய சிறிய கிராப்ட்களை எடுத்து வெண்படை மேல் ஒட்டிவைப்பதே பஞ்சுகிராபிட்டிங் ஆகும். (மேலே ஒட்டப்பட்டுள்ள கிராப்ட் , மூலம் வெண்படை பகுதிகளை மூட ஐந்து மாதங்கள் ஆகும்)

     2.  ஸ்கின் கிராபிட்டிங் (Skin Grafting)

         நம் உடலில் இருந்தே தொல் பெரிய அளவில் இருந்து வெண்படை உள்ள பகுதிகளை மூடி விடுவதன் முறை இந்த சிகிச்சை 

    3.  மைக்ரோ பிக்மென்டேசன் (Micro pigmentation- TATOO)

       இது பச்சை குத்துதல் போன்று ஒத்து மருத்துவ முறை ஆகும். தோலின் நிறத்திற்கு ஏற்ற சாயங்களை பயன்படுத்தி அதை வெண்படை மேல் பூசி பச்சை குத்துவதுபோல் குத்தி தோல் நிறத்தை மாற்றிவிடும் சிகிச்சை. இம்முறையின் மூலம் பதினைந்து நிமிடம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் வெண்படை சரியாகி விடும்.

இதற்காக குறிப்பு:


  • இது பரம்பரை நோய் அல்ல 
  • அப்படி பரம்பரை யாக வந்தாலும் அது தற்செயலாக வந்ததுதான் 
  • இது தொற்றுநோய் அல்ல.
லூக்கோடர்மா (Loucoderma)

          வெண்படை ஆனது காரணம் இல்லாமல் வரும் தோல் நிறமாற்றமாகும் லூக்கோடர்மா சில காரணங்களால் வரும் தோல் நிறமாற்றமாகும்.

காரணங்கள் :

  • தீக்காயம் 
  • கதிர்வீச்சு 
  • காயங்கள் 
  • ரப்பர் செருப்பு 
மருத்துவமுறைகள்:

     காரணிகள் ஏற்ற மருத்துவம் செய்தால் இந்த நிற மாற்றம் வராது 

 ரப்பர் செருப்பில் ஹிட்ரோகுயினான் எனப்படும் ரசாயனம் இருப்பதே இந்த வெள்ளை நிறமாற்றம் வருவதற்கு காரணம். அதனால் இந்த நோய் உடையவர்கள் இந்த ரப்பர் செருப்பை அணிவது தவிர்க்கவும்.

1 comment:

  1. #Psoriasis, #Vitiligo, #Eskimo, #Funculs, #Ringworm, #Warts, #Fade, #Malignant Tumors, #Varicose Veins, #காளாஞ்சகப்படை, #சொரியாசிஸ், #சோரியாசிஸ், #வெண்புள்ளி, #வெண்குஷ்டம், #தோல்நோய்கள், #Skin Problem

    அனைத்து வகையான தோல் நோய்களும் முற்றிலும் 100% தீர்ந்து வாழ்நாள் முழுக்க “தோல் நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம்” என்னும் நிலையை 120 நாட்களில் அடையலாம். உணவுஅறமும் & மருந்தும் கிடைக்கும்.

    விபரங்களுக்கு கீழ்கண்ட வலைப்பக்கங்களை படியுங்கள்.

    https://skin-disesis.blogspot.com/

    ReplyDelete