Thursday, 23 February 2017

நரம்பு வீக்கம் அடைவதன் காரணத்தில் இதுவும் ஒன்று

தொழுநோய்  (Leprosy) என்பது.மைக்கோபாக்டீரியம் இலெப்ரே என்னும் நோய்க்காரணி/நோயுயிரியால் வரும், உயிர்க்கொல்லி நோயாகும். இதன் வரலாறு மிகவும் பிந்தையதாகும். இந்நோயைப் பற்றி, பல வரலாற்று நூல்களும், கிறித்துவ மதநூலான விவிலியத்திலும் இதன் குறிப்பு உள்ளது. இந்நோயை உண்டாக்கும் நோயுயிரியை, முதலில் 1873ம் ஆண்டு மருத்துவர் கெரார்டு ஆன்சன் என்பவர் கண்டறிந்தார். ஆதலால் இதற்கு ஆன்சன் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.


தொழுநோயைக் கண்டறிந்தவர்
தொழுநோய் என்பது புறநரம்புகள் பகுதிகளிலும் மற்றும் சுவாசக்குழாயில் காணப்படும் கோழைகளில் ஏற்படும் குருண/குருமணி நோய்களாகும். தோலில் காணப்படும் சீழே அதன் முதல் அறிகுறியாகும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காமல் விடின் தொழுநோயின் தீவிரம் அதிகரித்து தோல், நரம்பு, விரல்கள் மற்றும் கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும்.

இதன் பாதிப்பால் உடலுறுப்புகளுக்கு உணர்ச்சியின்மையும் விரல்கள் மற்றும் பாதங்களில் கலக்கூட்டுக்கள் இழப்பு ஏற்படுதலால் இவை விரல்கள் உதிர்ந்த்து போலக்காட்சித் தரும். இவையே முற்றும் நிலையில் உயிர் துரக்கும் நிலையை அடைவதும் உண்டு. இது பெரும்பாலும் நோயெதிர்ப்பாற்றல் குன்றியவரையே இது தாக்குகிறது. இது தமிழ்நாட்டில் பரவலாக அறியப்பட்டுள்ளது என்பதற்கு இதற்கு வழங்கும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டு அறியலாம். தொழுநோயை குட்டம், குச்டநோய், பெருவியாதி, மேகநீர், மேகநோய் எனப் பரவலாக அழைக்கப்படுகிறது.

சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவரை கண்கள், கைகளும் பாதிக்கப்படுகின்றன. தொழுநோய் என்பது ஒரு தொற்று நோயாகும். மூக்கு, வாய் மூலம் இந்நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. இந்நோய் தொற்றுநோய் என்பதால், தொழுநோயாளிகளை சமுதாயத்தில் இருந்து புறக்கணிக்கும் நிலை உள்ளது. எனவே தொழுநோய் என்பது அறியப்பட்டவுடன் உடனடி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.

இந்நோய் ஏற்பட்டவர்கள் சிறப்பு உடைகளை அணிவதுடன் பொதுமக்கள் புழங்கக்கூடிய சந்தை, கோயில்கள் போன்ற இடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை.

உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரையின்படி மல்டி டிரக் தெரபி எனப்படும் சிகிச்சை தற்போது தொழுநோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின் மூலம் தொழுநோய் பரவுதல் தடுக்கப்படுகிறது.

துவக்க நிலையிலேயே கண்டறிந்தால், இந்நோயை குணப்படுத்த முடியும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் கை, கால்கள் ஊனம் அடைவதில் இருந்து தடுக்கலாம்.

உலக அளவில் தொழுநோய் பரவு விகிதம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 4 விழுக்காடு குறைந்துள்ளது. பல்வேறு நாடுகளில் தொழுநோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.




இந்த நோய் வருவதற்கு உரிய காரணம்:


  • இது மைக்கோ பேக்ட்ரியம் லெப்ரே (Mico  Bacterium Leprae) எனும் கிருமியால் இந்த நோய் உண்டாகும்.
  • இந்த கிருமி பொதுவாக காற்றில் இருந்து சுவாசம் வழியாக உள்ளே சென்று எதிர்ப்பு சக்தி குறையும் நேரத்தில் யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம்.

இந்த நோய் வருவதற்குண்டான அறிகுறிகள்:

  • உணர்ச்சி இல்லா வெண்படைகள்.
  • நரம்பு வீக்கம் அடையும்.
  • சில நேரத்தில் இந்த படைகள் மேல் முடி உதிர்ந்து விடும். வியர்வை நின்று விடும் இதற்க்கோரிய காரணங்கள்.

தீர்க்க வழிமுறைகள் (மருத்துவமுறைகள்)

  • இதை முற்றிலும் நூறு சதவீதம் குணப்படுத்திவிடமுடியும் பயப்பட தேவை இல்லை.
  • டபிஸோன் மற்றும் லிபென்சியன் (Rifapicin &Dapsone) மாத்திரைகள் மொத்தம் ஆறு மாதம் முதல் பனிரெண்டு மாதங்கள் உட்க்கொண்டால் நூறு சதவீதம் இந்த நோய் இலிருந்து குணமடைந்து விடலாம்.





No comments:

Post a Comment