Wednesday, 5 April 2017

தோலில் வரும் ஒரு சில மாற்றங்கள்

கழுத்து பகுதிகளில் தோல் நிற மாற்றம் :



தோல் மனிதனின் அழகு அடையாளம். மாசு, மருவற்ற பளிங்கு போன்ற சருமமும், பார்த்ததும் பரவசப்படுத்தும் 'பளிச்’ நிறமும் வேண்டும் என்பதற்காக என்னென்னவோ முயற்சிக்கிறோம். ஒவ்வொரு பருவத்திலும், சருமத்தில் மாற்றங்கள் தோன்றுவது இயற்கைதான். சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தேவைப்படும் பாராமரிப்பு முறைகளைச் சரிவரக் கையாண்டால், சருமத்தில் நிரந்தரமான அழகைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் சரும நிபுணர்கள். ஒவ்வொருவரின் நிறத்தையும் வெளிக்காட்டுவதோடு நம் சருமத்தின் வேலை முடிவதில்லை. சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி-யைத் தயாரிப்பது, வெளியில் இருந்து வரும் கிருமிகளை அண்டவிடாமல் அரண்போல் காப்பது, குளிர் காலத்தில் உடலைச் சூடாகவும், கோடைக் காலங்களில் குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்வது எனப் பற்பல பணிகளை மேற்கொள்கிறது. உடலை ஒரு போர்வையாகப் போர்த்தி இருக்கும் சருமத்தைப் பாதுகாக்க, அழகாக்க, மிளிரவைக்க அட்டகாசமான டிப்ஸ்களை வழங்குகின்றனர்

   இந்த மாதிரி நோய் கழுத்து பகுதிகளில் வரும் அரிப்பு மற்றும் நிறமாற்றங்களால் இந்த இரண்டும் வருகிறது.


இது வருவதற்கூறிய காரணங்கள்:


  •  நாம் பயன்படுத்தும் தங்க நகைகள், கவரிங் நகைகள், மஞ்சள் கயிறு போன்றவற்றால் வரும் இது ஒவ்வாமை எனப்படும் இதில் அரிப்பு இருக்கும்.
  • ஏக்கன்தோசிஸ் நிகரிகன்ஸ் (Acanthosis Nigricans)     பொதுவாக எடை கூடுதல் உள்ளவர்களுக்கு இந்த ஹார்மோன்கள் காரணங்களால் இது வரும்  மேலும் யானை தோல் போல கருப்பு நிறமாக மாறும், இதில் அரிப்பு இருக்காது.

இதை பாதுகாக்கும் முறை:

  • பீட்டா மீதமோசன் (Betamethasone) கலந்த களிம்பை பயன்படுத்தலாம் 
  • உடல் எடையை குறைக்கவேண்டும்.
  • ஒவ்வாமை தரக்கூடிய மஞ்சள் கயிறு,கவரிங் நகை,தங்க நகை, போன்றவை கழுத்து பகுதிகளில் படாமல் ஆடை பகுதிகளில் பின் பண்ணி 

மேலும் இதுபோன்ற நோய்கள் குழந்தைகளையும் தாக்குகிறது
புதிதாகப் பிறந்த குழந்தையின் தலையிலுள்ள தோல் உரிபடுதலாகும். பொருக்குகளை தளரச் செய்வதற்காக மினேரல் எண்ணை அல்லது பெற்றோலியம் ஜெலி வைத்து மசாஜ் செய்யும்போது வீரியம் குறைந்த கிறேடில் கப் இல முன்னேற்றம் ஏற்பட வேண்டும். அதன் பின்னர் நீங்கள் பேபி ஷம்பூ போட்டு பொருக்குகளைக் கழுவி விடலாம். பொருக்கு உரிதல் கடுமையானதாக இருந்தால் உங்கள் மருத்துவர் ஒரு விசேஷ ஷம்பூ அல்லது களிமருந்தை சிபாரிசு செய்யலாம். சிகிச்சையினால் பெரும்பாலும் ஒரு சில வாரங்களுக்குள் கிறேடில் கப் மறைந்துவிடும். சிகிச்சை செய்யப்படாவிட்டால் அது சில மாதங்கள் வரை நீடிக்கும்.


தோலில் நிறம் மாற்றம் ஏற்படுதல்

தோலின் நிறம் குறையும் முக்கிய நோய் வகைகள்:

விட்டில்லிகோ என்றால் என்ன?
லியுகோடெர்மா என்றால் என்ன?

தோலின் நிறம் குறையும் முக்கிய நோய் மூன்று முக்கியமான தோல் நிறம் குறையும் நோய் வகைகள் உள்ளன.

விட்டில்லிகோ:
போஸ்ட் இன்பிளமேடரி ஹை‎போபிக்மெண்டேஷன் ( காயத்திற்குப்பின் தோலின் நிறத்தில் ஏற்படும் நிறக்குறைவு) மற்றும்
அல்பினிசம்
விட்டில்லிகோ என்பது பாதிக்கப்பபட்ட தோலின் நிறம், மற்ற பகுதியைவிட குறைவாக/ மாறுபட்டு/ வெளிர்தது காணப்படுதலாகும். தோலில் உள்ள மெலனோசைட் குறைதலே இதற்கு காரணம்.
விட்டில்லிகோ என்றால் என்ன?

விட்டில்லிகோ, நம் உடலில் உள்ள நிறமூட்டும் செல்களை அழிக்கும் நோய் அல்லது செல்களை செயல்பட முடியாத நிலைக்கு கொன்டுசெல்லும். இதனால் தோலின் நிறத்தை ஏற்படுத்தும் பொருளின் அளவு குறைகிறது. இதனை டிபிக்மெண்டேஷன் என்பர். இதனால் தோலில் பால் வெள்ளை நிறத்தில் புள்ளிகள் ஏற்படுகிறது.

லியுகோடெர்மா என்றால் என்ன:
லியுகோடெர்மா என்பது விட்டில்லிகோ என்பதின் மறு பெயர் ஆகும். 'லியுகோ' என்றால் வெள்ளை நிறம் என்பது, மற்றும் 'டெர்மா' என்பது தோலினை குறிக்கும் சொல்லாகும்.
விட்டில்லிகோ ஏற்படக் காரணங்கள் யாவன?
தோலிலுள்ள மெலெனோசைடுகள் சேதமடைவதினால் அல்லது இறப்பதின் விளைவாக விட்டில்லிகோ ஏற்படுகிறது.
நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மையானது மெலெனின் எனும் நிறத்தை கொடுக்கும் பொருளினை ஒரு வேற்றுப்பொருள் என இனம் கண்டு அழித்துவிடுவதே இதற்கு காரணமாகும்.
இயற்க்கைக்கு மாறாக செயல்படும் நரம்பு செல்கள் நச்சுப் பொருட்களை உண்டுபண்ணும். இவை மெலெனோசைட்டுகளை சேதப்படுத்தும்
மெலேனோசைட்டுகள் தானாகவே அழித்துக்கொள்ளும் தன்மை
போஸ்ட் இன்பளமேட்டரி ஹைபோபிக்மெண்டேஷன் என்பது சிலவகை காயங்கள் (உதாரணம் தீக்காயம்) ஏற்பட்டு ஆறின பின்னர் அந்த பகுதியில் ஏற்படும் தோலின்  நிறம் மாற்றம் ஆகும். நிறம் வெளறிய தோல் பகுதியில் தானாகவே பழைய நிறம் சில நேரங்களில் ஏற்படகூடும்.
அல்பினிசம் என்பது ஒரு அரிதான மற்றும் உடற்குரோமோசோம்கள் மூலம் சந்ததிகளுக்கு ஏற்படக்கூடிய ஒரு வகை தோல் நோய். அல்பினிசத்தில், தோலில் உள்ள மெலெனோசைட் எனப்படும் செல்கள் இருக்கும். ஆனால் அவை மெலெனின்  எனப்படும் வண்ணச்சுரப்பினை சுரப்பதில்லை ( எனவே உடல் முழுவதும் சிவப்பு கலந்த பால் போன்ற வெள்ளை நிறத்தோல் காணப்படும்.
மேற்கண்ட மூன்று முக்கிய தோல் வெளிர்தல் வகைகளை  தவிர்த்து, இன்னும் ஒரு பொதுவான தோல் நிறம் குறையும் நோய்  - பிட்டிரியாஸிஸ். இதிலும் தோலின் நிறம் வெளிர்ந்து காணப்படும்.



Wednesday, 8 March 2017

வெளிநாட்டு வாழ்மக்களுக்காக

சொர்க்கம் என்றால் அது நம்ம கடையநல்லூர் தான்


Thursday, 2 March 2017

தேமல் மற்றும் காளான் நோய்கள்

தேமல் மற்றும் காளான் உடைய நோய்கள்: (Tinea Versicolor & Fungus Diseases)




இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிப்போருக்குத் தோலில் தோன்றும் நோய்களுள் ‘ஃபங்கஸ்’ (Fungus) என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம். மக்கள்தொகை பெருக்கம், பொதுச் சுகாதாரக் குறைவு,ஒரு ரொட்டி ஒரு ஊறுகாய் ஒரு மாதத்திற்கு பயன்படுத்தாமல் வைத்து விட்டால் அதுமேல வளர்வது பூஞ்சை காளான் எனப்படும். இது நம் தோலிலும்  சில காரணங்களால் வளர்கிறது.

நமது தோலில் நிறமாற்றம் உண்டாவதை பொதுவாக தேமல் என்று சொல்கிறோம். இந்த நிறமாற்றத்திற்கு பல்வேறு மருத்துவ காரணங்கள் இருக்கின்றன. இந்த பிரச்சனையைப் போக்க அலோபதியை நோக்கிப் போனால் வருமானத்தில் பாதியை இழக்க வேண்டியது தான்.

ஆண்களானாலும், பெண்களானாலும் தங்களது முகத்தை அழகாக பிரகாசமாக வைத்துக் கொள்ள நினைப்பது இயல்பு. முகத்தை மெருகூட்டவும், பராமரிக்கவும் தங்களால் என்னென்ன முடியுமோ அவ்வளவையும் செய்கிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு அழகு சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் காலங்காலமாய் கொழித்துக் கொண்டிருக்கிறார்கள். மிகச் சாதாரணமாக கிடைக்கக்கூடிய நமது இயற்கையான பராமரிப்பு முறைகளுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது

வரக்கூடிய காரணங்கள்:


  • தோலில் வியர்வை அதிகமாக வரும்போது.
  • எந்நேரமும் தோல் ஈரப்பதமாக இருப்பது.
  • சரியாக குளிக்காமல் இருப்பது.
  • இல்லையேல் அடுத்தவர்களிடம் இந்த காளான்கள் யாரைவேண்டுமானாலும் பாதிக்கலாம்.

தேமல்:(Tinea Versicolor)

 வெள்ளை நிறமாகவோ அல்லது கருநிறமாகவோ சிறிய வட்ட வடிவில் வருவது தான் அதுவும் அரிப்பில்லாமல் வருவது தேமல் ஆகும்.எல்லா வயதினருக்கும் வரக்கூடியது தேமல். தேமல் ஏன் வருகிறது என்று யாருக்கும் தெரிவதில்லை. இது ஒரு வகை தோல் நோயாகும். இதில் வெள்ளைத்தேமல், கருந்தேமல், ரத்த தேமல், சொறித்தேமல் புள்ளி மற்றும் படர் தேமல், காளான் வகை தேமல் என பல வகை தேமல்கள் உள்ளன. 

சருமத்தை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பதே, பலருக்கு தேமல் வரக் காரணமாகிறது. மார்க்கெட்டில் எந்த சோப்பு, ஷாம்பூ புதிதாக அறிமுகம் ஆனாலும், அதை உடனே வாங்கி பயன்படுத்துவோர் உள்ளனர். அந்த மாதிரி நபர்களுக்கு, தேமல் வருவதை தடுக்கவே முடியாது. 




காளான் நோய்கள்:

இது உடம்பின் எந்த பாகத்தையும் தாக்கவல்லது. பொதுவாக நம் தொடை இடுக்கிலும்.இடுப்பிலும் இதை பார்க்கலாம்.அரிப்புடன் கூடிய கரும்படையாக காணக்கூடும். இந்நோய் உள்ளவர்களின் உள்ளாடை வேறு யாரவது பயன்படுத்தினால் அவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது இது.


மருத்துவ முறைகள்:

  • இன்றைய நவீன மருத்து வத்தில் தேமலைப் போக்கப் பலதரப்பட்ட களிம்புகள், வியர்வையை உறிஞ்சும் மருந்து கலந்த பவுடர்கள், மாத்திரைகள், நடைமுறையில் உள்ளன. தினமும் இரு வேளை குளித்து, தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்தக் களிம்பு / பவுடர்களில் ஒன்றைச் சில வாரங்களுக்குத் தொடர்ந்து பூசிவந்தால், தேமல் விடைபெற்றுக் கொள்ளும். மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தேமலுக்கான மாத்திரைகளையும் சாப்பிட்டுவர வேண்டும். அப்போதுதான் தேமல் மறுபடியும் வராது.
  • கிலோற்றிமொசொல் களிம்பு அல்லது பவுடர் (Clotrimazole) மூன்று மாதங்கள் பயன்படுத்தவேண்டும்.