Saturday, 25 February 2017

உடம்பில் தண்ணீர் இல்லை என்றால் பித்த வெடிப்பு வரும்

கால் வெடிப்பு (Cracks)



பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவஸ்தை படும் பலர், அதற்கான காரணம் தெரியாமல் புலம்புகின்றனர். பாதங்களை சுத்தமாக பாதுகாப்பதில் கவனம் செலுத்தாததே காரணம். இதனால் வெடிப்பு ஏற்பட்டு, வெடிப்பு புண்ணாகி கஷ்டப்படுகின்றனர்.
பாதங்களில் ஏற்படும் சிறிய பிளவுகளுக்கு, பித்த வெடிப்பு என்று பெயர்.

வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் தண்ணீரை பயன்படுத்துவார்கள். வீட்டில் பாத்திரம் கழுவுவது சோப்பு போடுவது வீட்டை  கழுகி சுத்தம் செய்வது தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்கள் கால்கள் அதிகளவு ஈரமாக இருக்கும். உப்பு தண்ணீர்  அதிகளவில் கால்களில் படுவதால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் வெடிப்பு புண்ணாக மாறி வலியை உண்டாக்கும்.

இதனால் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகின்றனர் பெண்கள். இது போன்று பாத வெடிப்புகளால் அவதிப்படும் பெண்கள் அதற்கான சிகிச்சை பெற்றாலும்  குணமாகாது

மேலும் தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். கடினமான செருப்பு அணிவதாலும் பாத வெடிப்புகள் வரும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் பாத வெடிப்புகள் வரும்.

  பூமியில் தண்ணீர் இல்லை என்றால் மண் வெடித்து விடுகின்றன. அது போல் தோலின் தண்ணீர் சத்து குறையும் பொது தோல் ஆனது வெடிக்கின்றது.

இதன் காரணங்கள்:

  பித்த வெடிப்புக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அது சொரியாஸில் மற்றும் சாதாரண கால் வெடிப்பு . சொரியாசிஸினால் ஏற்படும் கால் வெடிப்புகள் உள்ளங்காலில் உண்டாகும், அரிப்பு ஏற்படும், ரத்தம் கூட வரலாம்.

தண்ணீர்ச் சத்து குறைவினால் வரும் சாதாரண கால் வெடிப்பு. கால் பாதத்தின் ஓரத்தில் வருவது ஆகும் .          

மருத்துவமுறைகள்:

உள்ளங்காலில் வெடிப்பு வந்தவர்களை மருத்துவரை அணுகி சோரியாசிஸ் தானா என்று முடிவு செய்த பிறகு அதற்குரிய மருத்துவம் செய்யவேண்டும்.

மாய்சரிஸ் (Moisturisers) பயன்படுத்தவேண்டும்.

சாதாரண கால் வெடிப்புக்கு தோல் வெடிப்பினால் ஆனா காலணிகளை போட வேண்டும்.(Leather shoe)

தோலினால் ஆன காலணிகளை அணிபவர்களுக்கு காலில் வெடிப்பு வருவதில்லை.

காலணிகள் நன்மைகள்:

  காலில் வரும் வியர்வை காலனி உள்வாங்கி கொள்ளும். நமது தோல் உணரும்போது ஈரப்பதமுள்ள காலனி நமக்கு பாதுகாப்பாக அமையும்.




Thursday, 23 February 2017

job offer to computer skills

Application Developer – Java.Core



Good company benefits
MNC environment
Normal office hours
Career advancement
Attractive pay & perks


Requirements:
Java, J2ee, Sprint framework, Angular JS, WebSphere, Shell scripting, RAD
Experienced in application development using Java technologies
Good debugging skills, and a good team player
4-6 years experience.




To apply for this job Email details to :surya.prabha@alpsoft-tech.com
Apply using webmail:/Gmail/AOL/YAHOO/OUTLOOK



IT Analyst (Ops)



Good company benefits
MNC environment
Normal office hours
Career advancement
Attractive pay & perks
Description of Job :

Analyze root causes of operational malfunctions and  resolve operational problems within kept time.
Handle escalated issues and follow-up on outstanding issues promptly, develop preventive measures and document issue resolution procedures.
Recommend process improvements to improve operational efficiency and cost- effectiveness.
Monitor system operations and troubleshoot problems, develop support plan to prioritize and resolve multiple issues.
Address customer issues promptly and accurately, provide off office hours support for urgent production incident on rotational basis.
Qualifications :

Diploma in IT

Experience / Any Other Special skills/attributes:

3 to 5 years of relevant experience in IT Operations
Windows OS, Mac OS, Microsoft Office, Active Directory, Office 365 & DNS
Strong interpersonal skills and team player






To apply for this job Email details to :surya.prabha@alpsoft-tech.com
Apply using webmail:/Gmail/AOL/YAHOO/OUTLOOK




நரம்பு வீக்கம் அடைவதன் காரணத்தில் இதுவும் ஒன்று

தொழுநோய்  (Leprosy) என்பது.மைக்கோபாக்டீரியம் இலெப்ரே என்னும் நோய்க்காரணி/நோயுயிரியால் வரும், உயிர்க்கொல்லி நோயாகும். இதன் வரலாறு மிகவும் பிந்தையதாகும். இந்நோயைப் பற்றி, பல வரலாற்று நூல்களும், கிறித்துவ மதநூலான விவிலியத்திலும் இதன் குறிப்பு உள்ளது. இந்நோயை உண்டாக்கும் நோயுயிரியை, முதலில் 1873ம் ஆண்டு மருத்துவர் கெரார்டு ஆன்சன் என்பவர் கண்டறிந்தார். ஆதலால் இதற்கு ஆன்சன் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.


தொழுநோயைக் கண்டறிந்தவர்
தொழுநோய் என்பது புறநரம்புகள் பகுதிகளிலும் மற்றும் சுவாசக்குழாயில் காணப்படும் கோழைகளில் ஏற்படும் குருண/குருமணி நோய்களாகும். தோலில் காணப்படும் சீழே அதன் முதல் அறிகுறியாகும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காமல் விடின் தொழுநோயின் தீவிரம் அதிகரித்து தோல், நரம்பு, விரல்கள் மற்றும் கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும்.

இதன் பாதிப்பால் உடலுறுப்புகளுக்கு உணர்ச்சியின்மையும் விரல்கள் மற்றும் பாதங்களில் கலக்கூட்டுக்கள் இழப்பு ஏற்படுதலால் இவை விரல்கள் உதிர்ந்த்து போலக்காட்சித் தரும். இவையே முற்றும் நிலையில் உயிர் துரக்கும் நிலையை அடைவதும் உண்டு. இது பெரும்பாலும் நோயெதிர்ப்பாற்றல் குன்றியவரையே இது தாக்குகிறது. இது தமிழ்நாட்டில் பரவலாக அறியப்பட்டுள்ளது என்பதற்கு இதற்கு வழங்கும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டு அறியலாம். தொழுநோயை குட்டம், குச்டநோய், பெருவியாதி, மேகநீர், மேகநோய் எனப் பரவலாக அழைக்கப்படுகிறது.

சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவரை கண்கள், கைகளும் பாதிக்கப்படுகின்றன. தொழுநோய் என்பது ஒரு தொற்று நோயாகும். மூக்கு, வாய் மூலம் இந்நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. இந்நோய் தொற்றுநோய் என்பதால், தொழுநோயாளிகளை சமுதாயத்தில் இருந்து புறக்கணிக்கும் நிலை உள்ளது. எனவே தொழுநோய் என்பது அறியப்பட்டவுடன் உடனடி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.

இந்நோய் ஏற்பட்டவர்கள் சிறப்பு உடைகளை அணிவதுடன் பொதுமக்கள் புழங்கக்கூடிய சந்தை, கோயில்கள் போன்ற இடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை.

உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரையின்படி மல்டி டிரக் தெரபி எனப்படும் சிகிச்சை தற்போது தொழுநோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின் மூலம் தொழுநோய் பரவுதல் தடுக்கப்படுகிறது.

துவக்க நிலையிலேயே கண்டறிந்தால், இந்நோயை குணப்படுத்த முடியும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் கை, கால்கள் ஊனம் அடைவதில் இருந்து தடுக்கலாம்.

உலக அளவில் தொழுநோய் பரவு விகிதம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 4 விழுக்காடு குறைந்துள்ளது. பல்வேறு நாடுகளில் தொழுநோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.




இந்த நோய் வருவதற்கு உரிய காரணம்:


  • இது மைக்கோ பேக்ட்ரியம் லெப்ரே (Mico  Bacterium Leprae) எனும் கிருமியால் இந்த நோய் உண்டாகும்.
  • இந்த கிருமி பொதுவாக காற்றில் இருந்து சுவாசம் வழியாக உள்ளே சென்று எதிர்ப்பு சக்தி குறையும் நேரத்தில் யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம்.

இந்த நோய் வருவதற்குண்டான அறிகுறிகள்:

  • உணர்ச்சி இல்லா வெண்படைகள்.
  • நரம்பு வீக்கம் அடையும்.
  • சில நேரத்தில் இந்த படைகள் மேல் முடி உதிர்ந்து விடும். வியர்வை நின்று விடும் இதற்க்கோரிய காரணங்கள்.

தீர்க்க வழிமுறைகள் (மருத்துவமுறைகள்)

  • இதை முற்றிலும் நூறு சதவீதம் குணப்படுத்திவிடமுடியும் பயப்பட தேவை இல்லை.
  • டபிஸோன் மற்றும் லிபென்சியன் (Rifapicin &Dapsone) மாத்திரைகள் மொத்தம் ஆறு மாதம் முதல் பனிரெண்டு மாதங்கள் உட்க்கொண்டால் நூறு சதவீதம் இந்த நோய் இலிருந்து குணமடைந்து விடலாம்.





Friday, 17 February 2017

சருமத்தின் அழகு கெடும் நோய்

வெண்படை (Vitiligo)

வெண்படை என்றும் அழைக்கப்படுகின்ற வெண்புள்ளி நோயானது ஆங்கிலத்தில் லீகோடெர்மா எனப்படுகிறது.
மெலனின் குறைபாட்டால்தான் இந்த நோய் வருகின்றது. இதை நோய் என்று சொல்வது கூட சரியல்ல. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மன அளவில் படும் துன்பம் மிக அதிகம். சமூகரீதியாக இது குறித்த விழிப்புணர்வு அறவே இல்லை.
வெண்படை நம் தோலில் ஏற்படும் சாதாரண நிறமாற்றமே.
இது மற்றவர்களுக்கு ஒட்டுவதில்லை.
இதனால் உள் உறுப்புகளும் பாதிப்பு அடைவதில்லை.
இது ஆண் பெண் இருபாலருக்கும் எந்த வயதிலும் தோன்றக்கூடியது.
இந்தப்படையினால் சருமத்தின் அழகு கெடும் என்பதைத் தவிர எந்த பாதிப்பும் கிடையாது.

காரணங்கள்:


  1. நம் தோலில் நிறத்தை லெமனின் அணுக்கள் நிர்ணயிக்கிறது. இந்த லெமனின் அணுவுக்கும், நம் தோலில் இருக்கும் இன்னொரு அணுவுக்கும் தெரியாமல் நடக்கும் மகாராதப்போர் (Auto Immunity). இதில் லெமனின் அணுக்கள் இறந்து விடுகின்றன.
வகைகள் :

  1. இது இரண்டு வகை படும் 
  2. ஒன்று பரவும் தன்மை வெண்படை (Unstable Vitiligo).
  3. பரவா தன்மை வெண்படை (Stable Vitiligo).
பரவும் தன்மை வெண்படை (Unstable Vitiligo).: 

  இதன் மருத்துவமுறைகள் 

  1. முதலில் வெண்படையின் பரவும் தன்மை குறைக்க வேண்டும்.
  2. பின்னர் ப்ரிட்னிசலோன் கலந்த ஸ்டிராய்டு மாத்திரைகள் தான் தீர்வு.
  3. காலை வெறும் வயிற்றில் "சோரோலின் " மாத்திரைகள் தினமும் உட்க்கொண்டு, வெண்படை உள்ள பகுதிகளில் காலை இளம்வெயிலில் பத்து நிமிடம் முதல் இருப்பது நிமிடம் வரை காட்ட வேண்டும்.
  4. புவா (Puva) எனும் லைட் சிகிச்சை.

  1. பரவா தன்மை வெண்படை (Stable Vitiligo).:
இதன் மருத்துவமுறைகள் :

  1.         சோரோலின் மாத்திரையை உட்க்கொண்டு அப்பகுதியை தினமும் காலையில் இளம் வெய்யிலில் காட்டவேண்டும்.
  2. மாத்திரை மூலமாக குணமடைய வில்லை என்றாலும், நோயளிக்கு வேகமாக சரிசெய்ய வேண்டும் என்றாலும் அறுவை சிகிசை மேற்கொள்ளலாம். (திருமணத்திற்கு முன்னால் இது போன்ற அவசர சிகிச்சைக்கு பயன்படுவது இது )
அறுவைசிகிச்சை முறைகள் :

  1. பஞ்சுகிராபிட்டிங் (Punch Grafting)
              தோலில் பிற பாகங்களிலில் இருந்து சிறிய சிறிய கிராப்ட்களை எடுத்து வெண்படை மேல் ஒட்டிவைப்பதே பஞ்சுகிராபிட்டிங் ஆகும். (மேலே ஒட்டப்பட்டுள்ள கிராப்ட் , மூலம் வெண்படை பகுதிகளை மூட ஐந்து மாதங்கள் ஆகும்)

     2.  ஸ்கின் கிராபிட்டிங் (Skin Grafting)

         நம் உடலில் இருந்தே தொல் பெரிய அளவில் இருந்து வெண்படை உள்ள பகுதிகளை மூடி விடுவதன் முறை இந்த சிகிச்சை 

    3.  மைக்ரோ பிக்மென்டேசன் (Micro pigmentation- TATOO)

       இது பச்சை குத்துதல் போன்று ஒத்து மருத்துவ முறை ஆகும். தோலின் நிறத்திற்கு ஏற்ற சாயங்களை பயன்படுத்தி அதை வெண்படை மேல் பூசி பச்சை குத்துவதுபோல் குத்தி தோல் நிறத்தை மாற்றிவிடும் சிகிச்சை. இம்முறையின் மூலம் பதினைந்து நிமிடம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் வெண்படை சரியாகி விடும்.

இதற்காக குறிப்பு:


  • இது பரம்பரை நோய் அல்ல 
  • அப்படி பரம்பரை யாக வந்தாலும் அது தற்செயலாக வந்ததுதான் 
  • இது தொற்றுநோய் அல்ல.
லூக்கோடர்மா (Loucoderma)

          வெண்படை ஆனது காரணம் இல்லாமல் வரும் தோல் நிறமாற்றமாகும் லூக்கோடர்மா சில காரணங்களால் வரும் தோல் நிறமாற்றமாகும்.

காரணங்கள் :

  • தீக்காயம் 
  • கதிர்வீச்சு 
  • காயங்கள் 
  • ரப்பர் செருப்பு 
மருத்துவமுறைகள்:

     காரணிகள் ஏற்ற மருத்துவம் செய்தால் இந்த நிற மாற்றம் வராது 

 ரப்பர் செருப்பில் ஹிட்ரோகுயினான் எனப்படும் ரசாயனம் இருப்பதே இந்த வெள்ளை நிறமாற்றம் வருவதற்கு காரணம். அதனால் இந்த நோய் உடையவர்கள் இந்த ரப்பர் செருப்பை அணிவது தவிர்க்கவும்.

Thursday, 16 February 2017

நெல்லிக்காயில் அடங்கியுள்ள சத்துக்கள்

நெல்லிக்காய்


நெல்லி மரம் ஒரு சிறிய மரம். இமாலயப் பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும் அதிகமாக வளர்கிறது. தமிழகத்தில் வளரும் நெல்லிக்காய் சிறியளவில் கொஞ்சம், துவர்ப்பும், புளிப்பும் அதிகம் கொண்டதாக இருக்கும். வடநாட்டில் வளரும் நெல்லி பெரிதாக இருக்கும்.

பல மருத்துவக் குணங்களும் சேர்ந்து இருப்பதாலேயே நெல்லியை அனைவரும் உயர்வாகப் புகழ்கிறார்கள்.பெரியளவில் உள்ள நெல்லிக்காய் ஊறுகாய்க்கும், நெல்லி மொரப்பா செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். 

சிறியதை ஆயுர் வேத மருந்துகள், ஆயுர்வேத லேகியம் முதலியவை செய்ய பயன்படுத்துகிறார்கள்.தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்து ணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக் காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.

நெல்லி ஆண், பெண் பூக்கள் தனித்தனியானவை. சிறியவை, வெளிறியவை, பசுமையானவை, அடர்த்தியானவை, கொத்தானவை. நெல்லிக்காய்கள் கொத்தானவை. இளம் மஞ்சள் நிறமானவை. பழங்கள் 2.5 செ.மீ. வரை குறுக்களவு கொண்டவை. 

சதைப்பற்றானவை. உருண்டையானவை. ஆறு விதைகள் கொண்டவை.
தமிழ்நாடு முழுவதும் காடுகளில் வளர்கின்றன. வீட்டுத் தோட்டங்களில், தோப்புகளில் விளையும் மரங்கள் பெரிய கனிகளுடன் காணப்படும். 

நெல்லிமுள்ளி எனப்படும் உலர்ந்த காய் எல்லாக் காலங்களிலும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். நெல்லிக்காய் இலை, காய், வற்றல் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்ததாக உள்ள நெல்லிக்கனிகள் பழ வகைகளுள் மிகவும் முக்கியமானவை.நெல்லிக்காய் வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய் போன்றவை ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களாகும்.

நெல்லி மரங்கள், வீட்டு மராமத்து வேலைகளுக்கும் பயன்படுபவை. நெல்லிக்காய் பட்டைகள், சாயங்கள் மற்றும் தலைக்கழுவி நீர்மம் தயாரிப்பதில் பயன்படுகின்றன.

சாதாரணமாக நமக்கு குறைந்த செலவில் கிடைக்கும் ஒரு சத்துள்ள பழம் நெல்லிக்காய் ஆகும். நுரையீரல் சார்ந்த காசநோயை இது விரைவாக குணப்படுத்துவது மருத்துவ ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 
நெல்லிக் கனிகளை உலர்த்தி வற்றலாக்கி, வைட்டமின் “சி” சத்து குறைவால் வரும்  நோய்களை நெல்லிக்காய் குணப்படுத்தும். மேலும், இது உடலில் எதிர்ப்பு சக்தியை நிலைப் படுத்தக் கூடியது. மொத்தத்தில் நெல்லிக்காய ஒரு கற்ப மருந்தாகத் திகழ்கின்றது.

மேலும் நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காகஅதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும். இப்போது அந்த நெல்லிக்காய் ஜூஸை எப்படியெல்லாம் குடிக்க வேண்டும். அவ்வாறு குடிப்பதால், உடலுக்கு என்ன நன்மையெல்லாம் கிடைக்கும் என்பதனைப் பார்ப்போமா!!!


நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், நல்லது.

உடல் எடை:

நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில்  குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும்.


நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.

மலச்சிக்கல்:

நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.

இரத்த சுத்திகரிப்பு:

நல்ல ஃப்ரஷ்ஷான நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது,  இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சிறுநீர் எரிச்சல்:

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகையஎரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.

உடல் குளிர்ச்சி:

கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் சிறந்ததாக இருக்கும்.

அதிகமான இரத்தப்போக்கு:

மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் போது, தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும், கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால்,சரிசெய்துவிடலாம்.

அழகான முகம்:

முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.


உடலில் இரத்தம் குறைவினால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்க, தினமும்  நெல்லிக்காய் சாற்றை குடித்தால், இரத்த சிவப்பணுக்களின்எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.


இதயம் பலவீனமாக இருப்பவர்கள், தினமும் நெல்லிக்காய் சாற்றை அளவாக குடித்து வந்தால், இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்யலாம்.

சரும பிரச்சனைகள்:

நெல்லிக்காய் ஜூஸ் சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. குறிப்பாக முகப்பரு, பிம்பிள் உள்ளவர்கள், அதனை குடித்தால் போக்கிவிடலாம்.

கண் பார்வை:

நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், கண் பார்வை அதிகரிக்கும்.

முதுமைத் தோற்றம்:

நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, முதுமைத் தோற்றமானது விரைவில் வெளிப்படுவதை தடுக்கும்.

சாதாரணமாக அடங்கியுள்ள சத்துக்கள்


இதில் மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளதாகக் கருதப்படுகின்றது.

சிரங்கு (Scabies) நோயை தீர்க்க வழிமுறை

சொறி (Scabies,


 பெயர்க்காரணம். சொறிதல் என்பதிலிருந்து அல்லது அளவன் ) பொதுவழக்கில் ஏழாண்டு அரிப்பு, ஓர் ஒட்டுவாரொட்டி தோல் தொற்று நோயாகும்.
இது மாந்தர்களிடத்தும் விலங்குகளிடத்தும் ஏற்படக்கூடும். உலக சுகாதார அமைப்பு இதனை நீர் தொடர்பான நோயாக வகைப்படுத்தி உள்ளது.
 இந்நோயானது சார்கோப்டெசு இசுகாபீ என்ற மிகச் சிறிய, பொதுவாக நேரடியாக கண்ணுக்குப் புலப்படாத, ஒட்டுண்ணியால் ஏற்படுகின்றது.
இந்த ஒட்டுண்ணி பாதிக்கப்பட்டவர் தோலிற்கு கீழே குழிகளமைப்பதால் ஒவ்வாமை ஏற்பட்டு தீவிர நமைச்சல் ஏற்படுகின்றது. விலங்குகளில்
தொடர்புடைய ஆனால் வேறு ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய்த்தொற்று சார்கோப்டிக் மாஞ்சே எனப்படுகிறது.

இந்த நோய்தொற்று பொருட்கள் மூலமாக பரப்பப்படலாம் எனினும் பெரும்பாலும் தோலுடன் தோல் தொடுவதாலேயே தொற்றுகிறது;
நீண்ட தொடர்பு கூடுதலான தீவாய்ப்பை ஏற்படுத்துகிறது. முதல்முறை தொற்றுக்கள் மூலமான நோய் அறிகுறிகள் வெளிப்பட நான்கிலிருந்து ஆறு வாரங்கள் ஆகின்றன.
மீள்தொற்றில் அறிகுறிகள் 24 மணிக்குள்ளாகவே தெரியக்கூடும். நோய் அறிகுறிகள் ஒவ்வாமையால் ஏற்படுவதால் தோன்றுவதற்கு காலம் கழிவதைப் போலவே ஒட்டுண்ணிகளை
முழுமையாக அழித்த பின்னரும் மறைவதற்கு நாட்கள் செல்லும். முன்பு நார்வே சொறி எனப்பட்ட பக்கு உதிர்வு சொறி (Crusted scabies)
நோய் எதிர்பாற்றலைக் குறைக்கும் மிகத் தீவிரவகையான நோய்த்தொற்றாகும்.


சிரங்கு என்பது ஒருவகை நோய் :


  • சிரங்கை உருவாக்கும் கிருமி ஒருவகை எட்டுக்கால் பூச்சியாகும் (Sarcoptes Scabei)
  • விரலுக்கு இடையே, மணிக்கட்டு,மூட்டு,அக்குள்,தொடை,தொப்புள்,முதலிய இடத்தில் சின்ன சின்ன கொப்பளங்கள்,அரிப்புகள்,மூலமாக வரும்.
  • இந்த அரிப்பு இரவு நேரத்தில் கூடுதலாக இருக்கும்.குடும்பத்திலுள்ள அனைவருக்கும் இது பரவ வாய்ப்பு உள்ளது.
  • இதற்க்கு மற்றதொரு பெயர் உண்டு அது 'ஏழு வருட அரிப்பு' (7 Years itch) ஏனெனில் ஒரு குடும்பத்தில் யாருக்கு பாதிப்பு இருக்கிறதோ அவர் மட்டும் மருத்துவரை அங்கி அதற்க்கு தன்குந்தார் போல் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் இல்லாவிடில் மற்றவருக்கு அது பரவும்.
  • ஆகவே வீட்டில் உள்ள எல்லோரும் ஒரே நேரத்தில் அனைவரும் மருத்துவம் செய்துகொள்ளவேண்டும்.
  • இது குழந்தைகளை பாதிக்கும் போது சிறுநீரகத்தை கூட பாதிக்கும் தன்மை கொண்டது.

இதை தீர்க்க மருத்துவ முறைகள்:

  • பெர்மித்ரின்,காமபீன்சின்,ஹெக்சஅஃகுளோரைட்,பென்சாயில்,பென்சோயேட்,(Permethrin,Gamma Benzene, Hexachloride, Benzoyl,Benzoate) கலந்த மருந்துகளை முதல் நாள் இரவிலும் எட்டாவது நாள் இரவிலும் கழுத்திலிருந்து கால் வரை வீட்டில் உள்ள அனைவரும் தேய்க்க வேண்டும் பின்பு காலையில் குளிக்க வேண்டும் 

இதன் அறிகுறி :

 அரிப்பு, சொறி,சிரங்கு, இதுவெல்லாம் இதற்க்கூறிய அறிகுறி ஆகுமாம் 

இதை பராமரிக்க ஒரு வழி உண்டு :

சிறகத்தி இலை,குப்பைமேனி இலை, மஞ்சள்,தேங்காய் எண்ணெய், உப்பு,சீயக்காய்,

சிறகத்தி இலைக்கு சம அளவு குப்பைமேனி இலை எடுத்து சிறிதளவு உப்பு சேர்த்து சமமாக அரைத்து 
3 மணி நேரம் கழித்து சிறிது மஞ்சள் வைத்து அரைத்து தேய்த்து குளிக்க வேண்டும்,
உடல் உலர்ந்த உடன் தேங்காய் எண்ணெய் யை தேய்த்து வந்தால் சொறி ,சிரங்கு , அகலும்.வாய்ப்பு உண்டு


அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுபவர்களா நீங்கள்

அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுபவர்களா நீங்கள்



                                                                                                                                                                                      அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுபவர்கள், விளாம்பழம் சாப்பிட்டுவர குணமாகும். வெயில் காலத்தில் அடிக்கடி தாகம் எடுத்தால் கூட இதைச் சாப்பிடலாம்  ஏனெனில் இதயத்துக்கும் பாதுகாப்பு, தாகமும் தீரும்.. இப்பழத்திலிருந்து கல்லீரல் மற்றும் இதய கோளாறுக்கான டானிக்குகள் தயாரிக்கப்படுகின்றன.  இது பழுக்காத போது துவர்ப்பாக இருக்கும். இது வயிற்றுபோக்கையும், வயிற்றுக்கடுப்பையும் நிறுத்தும் குணம் கொண்டது.

இதுவிக்கலுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. தொண்டை புண்னை இதனுடைய கோந்து சரி செய்கிறது. இதனுடைய சதை வீக்கத்திற்கு வைத்து  கட்டுகிறார்கள்.. விஷப்பூச்சிகள் கடித்தால் பழ ஓட்டின் பவுடரை அரைத்து பூசுவதால் சரியாகிறது. பெரும் பயன் தரும் பழங்களில் இது ஒன்று.  அடிக்கடி மார்பில் வலி ஏற்பட்டால், உங்கள் வயிற்றில் புளிப்பு தன்மையுடைய நீர் அதிகமாகி விட்டது என்று அர்த்தம். இதைப்போக்க இஞ்சியும்,  எலுமிச்சம்பழமும் உணவில் நிறைய சேர்த்துக்கொள்ளவும்.

அதன்பிறகு மார்பு வலி வராது. அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டால், மாத்திரை மருந்து சாப்பிடுவதைவிட உளுந்து மாவைக் களியாகக்கிண்டி சாப்பிட்டு  வந்தால் உடலுக்கும் பலம், நெஞ்சு வலியும் போகும். மாரடைப்பு, இதயநோய் வராமலிருக்க அடிக்கடி உணவில் வெங்காயம் சேர்த்த்துக் கொள்ளவும்.  கடலைப்பருப்பையும் அடிக்கடி உணவில் சேர்த்த்துக் கொள்ளவும். பூண்டைப் போட்டு காய்ச்சியும் பருகி வரலாம். மார்பில் நமநம என்று வலி ஏற்பட்டு  தொந்தரவு வரும்போது செம்பரத்தம்பூ கஷாயம் மிகவும் நல்லது.

பூக்களை சுத்தம்செய்து, சுண்டும்படியாக கஷாயம் வைத்து, பாலும் சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், மார்புவலி இருக்காது. இருந்த வலியும்  நின்றுபோகும். குப்பைமேனி இலையை உலர்த்தி இடித்து மெல்லிய துணியில் சலித்துக் கொண்டு, சமமாகச் சர்க்கரை சேர்த்து, 200 மில்லி  பசும்பாலில் கலந்து, காலையில் மட்டும் சாப்பிட்டு வரவும்.

இவ்வாறு 15 நாட்கள் சாப்பிட்டால், மார்பு வலி நீங்கி தேகத்திற்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். மேலும் உடல் வனப்பு உண்டாகும். நெஞ்சுவலி  வந்தால், போரீச்சம்பழத்தை அப்படியே கொட்டையுடன் இடித்துப் பிசைந்து. கொஞ்சம்  கொஞ்சமாக நன்றாக மென்று விழுங்குங்கள். அதில் இரும்புச்  சத்து நிறைந்துள்ளது. அதனால் நெஞ்சுவலியை எளிதில் குணப்படுத்தும். -                                                                                                                               main source :http://m.dinakaran.com

தோலை பாதுகாக்கும் முறை


xU kdpjDf;F Njhy; jhd; kpfg;ngupa cUg;G. cs;Ns cs;sij ntspNa fhl;Lk; fz;zhb Nghd;wJ Njhy;. Njhypy; tUk; ve;j xU gpur;ridahdhYk; clNd ftdpf;f gl Ntz;Lk;.


xU kdpjdpd; Njhypd; vil 5 miu fpNyh ,jpy; 70 rjtPjk; jz;zPu; nfhz;lJ rpWePuff; NfhshW vd;whYk; ePuopT Neha; ghjpg;Gfs; vd;whYk; -fy;yPuy; -kz;zPuy; -,uj;jf;Foha; -Fly; Mfpatw;Ws; cs;s gpur;ridfs;; vJthapDk; Njhypy; jhd; Kjypy; mwpFwp tUfpwJNjhiy xOq;fhfg; guhkupj;J te;jhy; ek; tho;f;if Neha; nehb ,y;yhky; re;Njhrkhf ,Uf;Fk;Njhy; ,uz;L ghfq;fis nfhz;lJ 1. Nky; ghfk;  2. fPo; ghfk;  Nky; ghfj;jpy; ehd;F mLf;Fk; fPo; ghfj;jpy; %z;W mLf;Fk; ,Uf;Fk; cs;sq;if kw;Wk; ghjq;fspd; Nky; ghfj;jpy; $Ljyhf xU mLf;F ,Uf;fpwJ. mJ ek;ik fbd Ntiyfspy; ,Ue;J ghJfhg;gjw;f;fhf nfhLf;fg;gl;lJ.#upa xspapy; ,Ue;J Njhy; itl;lkpd; b jahupf;fpwJ. ntspapypUe;J tUk; fpUkpfis cs;Ns mz;;ltplhky; Nflak; Nghy; ghJfhg;gJ ek; Njhy; MFk;.ifNuif %ykhf ahu; ahu; vd;w milahsj;ij njhpe;J nfhs;s KbAk; ,aw;f;if #o;epiyf;Fk; mjd; khw;wq;fSf;Fk; Vw;g;g ek; Njhy; Fspu;e;j fhyq;fspy; cliy #lhf;Fk; Nfil fhyq;fspy; Fsph;r;rpahfTk; itj;Jf; nfhs;Sk;ek;; Kfj;jpy; Ruf;Fk; vz;nza; nfhRf;fsplkpUe;Jk; GQ;irf; fhshdplj;jpypUe;Jk; ek;ikf; fhf;Fk; jd;ik nfhz;lJek; Njhypd; epwk; nkydpd; (Melanin)   vd;w mZf;fshy; epu;zapf;fg;gLfpwJ. ,J ,uz;Lk; tifg;gLk; xd;W (Phaeomelanin and Eumelanin),    ngNah nkydpd; $Ljyhf ,Ue;jhy; nts;is epwkhfTk; A+ nkydpd; $Ljhyhf ,Ue;jhy; fWg;G epwkhfTk; ek; Njhy; mikfpwJ.
Njhy; jhd; xU kdpjdpd; moF milahsk;. mg; nghf;fprj;ij kpfj;ftdkhf NgZNthk; vOghJ rjtPjk; Njhy;  Neha;fis Fzg;gLj;j Kbatpy;iy fl;Lg;gLj;jjhd; KbAk;. ehs;gl xU ePuopT Neha; NghyNth ,uj;j mOj;jj;ij NghyNth njhlu;e;J kUj;Jtk; nra;J nfhs;s Ntz;Lk;,e;jf;fl;Liuapd; %ykhf kw;Wk; ,d;d gy fl;Liuapd; %ykhfNth ,Uf;FNkahdhy; mJ xt;nthd;wpw;f;Fk; kpfj;njspthd KiwapYk; nfhLf;fg;gl;lhYk; mij itj;J ePq;fs; Rakha rpe;jpj;J nray;ghLtjw;f;fhf my;y ,J ,d;dJ vd;W jFe;j rUkey kUj;Jtiu (Dermatologist)    mDfp rupahd Neha; vd;dntd;W ePf;fp Nehaw;w tho;it Fiwtw;w nry;tnkd;W tho tho;j;JfpNwhk;  

உடம்பின் சிலபல தேவைகளை நாங்கள் பூர்த்திசெய்கிறோம் :

 சந்தனம் முல்தானிமட்டி கலந்த “பேஸ் பாக்’ உபயோகித்து வர முகம் பொலிவாகவும் மிருதுவாகவும் மாறும்.
• கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள் எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ முகம் மிருதுவாகும்.
• ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்
• பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
• 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து முகத்தில் தடவி ஒரு மணிநேரம் கழித்து சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும். தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்.
• பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
• பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு கரும்புள்ளி ஆகியவை மறையும்.
• புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
• முழங்கை (முட்டி) கருப்பாகவும் சொர சொரப்பாகவும் இருந்தால் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.
• தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால் தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும். தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.
• முட்டை கோஸ் சாறு சிறிது ஈஸ்ட் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து 20 நிமிடம் முகத்தில் தடவி மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகச் சுருக்கம் மறைந்து முகம் பொலிவுடன் இருக்கும்.
• சுண்ணாம்பை தண்ணீர் கலந்து காலையில் தடவினால் மாலைக்குள் முகப்பரு மறைந்து விடும்.
• வெள்ளை முள்ளங்கி சாறுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப் புள்ளி மறையும்.
• உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.
• முகம் மிருதுவாகவும் ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து அதோடு பால்  பச்சை பயிறு மாவு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.
• கரும்புள்ளி உள்ள இடத்தில் பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். கடலை மாவு ஆறு டீஸ்பூன் பாலாடை இரண்டு டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம் கை கழுத்து பகுதிகளில் தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.
• வெள்ளரிச்சாறு சந்தனப்பொடி கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம் கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.
• ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி தான்றிக்காய் பொடி மருதாணி பொடி கறிவேப்பிலை பொடி கரிசலாங்கண்ணி பொடி வெட்டிவேர் ரோஜா இதழ்கள் சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில் அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் நரைமுடி குறையும் செம்பட்டை முடி கருமையாகும் பொடுகு நீங்கும்.
• நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் காட்டலாம். பேலன்ஸ்டு டயட் என்பது மிக மிக அவசியம். வைட்டமின்கள் தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும்.
முகத்திற்கு இளமையும் பளபளப்பும் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பு அயோடின் சத்து மிகுந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. சிறிது உப்பு கலந்த நீர் கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உப்பு கலந்த நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளபளப்பாகும். கண்களுக்குக் கீழே தோன்றும் பை போன்ற வீக்கத்தைக் குறைக்கும்.
அயோடின் சத்துக் குறைவால் “கழலை” எனப்படும் கழுத்தின் “முன்புற வீக்கம்” “கழுத்துக்கழலை” நோய் ஏற்படுகிறது.
தவிடுகோதுமை கேழ்வரகு போன்ற தானியங்களிலிருந்து நீக்கப்படும் உமி தவிடு போன்றவை அழகிற்கு அழகூட்டும் பொருட்களாகப் பயன்படுகின்றன. வைட்டமின் ‘இ’ சத்து மிகுந்த இந்த தானியத்தின் தவிடுகள் முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதோடு முகச் சுருக்கங்களையும் நீக்குகின்றன.
முகத்திற்கு இளமையும் பளபளப்பும் கூட்டுகின்றன. சருமத்திற்கு இதமளிப்பதால் சருமத்திற்கான அழகு சாதன கிரீம்களில் சேர்க்கப்படுகின்றன.
முல்தானி மட்டிஇது ஒரு வகை மென்மையான களிமண் வகையைச் சேர்ந்த மண். இது சருமத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய்ச் சத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே அதிக எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்திற்கும் கேசத்திற்கும் இம்மண் பவுடர் அழுக்கு நீக்கியாகவும் அதிக எண்ணெய்ப் பசையை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
சருமத்திற்கு புத்துணர்ச்சியும் கண்களுக்கு குளிர்ச்சியும் தரக் கூடியது. கேசத்தினையும் சுத்தப்படுத்தக்கூடியது. எனினும் அதிகப்படியான தொடர்ச்சியான பயன்பாட்டினால் சரும வறட்சி ஏற்படும்.
இதிலுள்ள தாது உப்புகள் வைட்டமின்கள் சருமத்திற்கு ஊட்டத்தையும் இளமையையும் தருகிறது.                                                                                                                                                                                                                                                                                
                                                ,g;gbf;F cq;fs; md;Gs;s

                                                www.kdnlbusiness.blogspot.in

உணவு வகை மாற்றத்தினால் வரும் நோய் ,அன்றி கெரியா (Utricaria)

அன்றி கெரியா (Utricaria) விட்டமின் 'பி' குறைபாட்டால் வரக்கூடியது, இது ஒரு வகை அரிப்பு ஆகும் இது தோலில் ஒரு சிவந்த தடிப்பு நிறத்தில் பட்டை பட்டையாகவோ கொடு கோடாகவோ இது வரும் பின்னை அது 2 மணி நேரத்திற்கு கழித்து மறைந்து விடும்.




இது வரக்கூடிய காரணம்:


  1. உணவு வகை 
  2. இன்பெக்சன் (Infection)
  3. வயிற்றில் பூச்சி 
  4. சூரிய வெளிச்சம் 
  5. சில நேரத்தில் தண்ணீர் ஒத்துக்கொள்ளாது 
  6. பூச்சி கடி 
  7. உடற் பயிற்சி கூட ஒரு வகை காரணம் 

மருத்துவ முறைகள் :



  • மேற்கூறியது போல் வரும்போது ஒவ்வாமை தோல் பரிசோதனை (Allergy Skin Test) செய்து, என்ன ஒவ்வாமை ?எனக் கண்டு பிடித்து அதை நன்றாக ஒத்துக்கொள்ள வேண்டும்.
  • செட்ரிசின் (Cetrizine) மாத்திரைகள் தினமும்  இரவில் ஒன்று எடுத்துக் கொள்ளலாம். தினமும் எடுத்துக் கொண்டாலும் பக்கவிளைவுகள் பெரிதும் இருக்காது.
  • சில சமையம் கண் மற்றும் உதடு வீக்கம் வரலாம். அச்சமயத்தில் ப்ரிட்னிசலோன் ஸ்டிராய்டு (Prednisolone Steroid) கலந்த மாத்திரைகள் சாப்பிடலாம்.
  • இது சில நேரத்தில் 6 மாதத்தில் சரியாகிவிடும் ,இன்னும் சில நேரத்தில் 60 வருடம் ஆனாலும் மெடிசின் சாப்பிட வேண்டியவரும்.

Wednesday, 15 February 2017

வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் தீர்வு

சத்து மாவு இது மிகவும் ஆரோக்கியமான ஒன்று குழந்தைகள் முதல் பொரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். இதில் நவதானியங்கள் அனைத்தும் இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். டீ, காபிக்குப் பதில் காலையும் மாலையும் அருந்தி வந்தால் வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். உடலுக்குத் தெம்பூட்டும் இன்னும் எத்தனையொ நன்மைகள் உண்டு அதை நீங்கள் அருந்துவதன் மூலம் அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்.


இது உண்மையான சத்துமாவு தயாரிப்பது எப்படி என்று சொல்லுகிறோம்
இயற்கை உங்களுக்கான பொருளை உங்களுக்கே கொண்டு செல்ல நாங்கள் இந்த பதிவை கொண்டு வருகிறோம்,
தேவையான பொருட்கள்:
ராகி 2 கிலோ
சோளம் 2 கிலோ
கம்பு 2 கிலோ
பாசிப்பயறு 1/2 கிலோ
கொள்ளு 1/2 கிலோ
மக்காசோளம் 2 கிலோ
பொட்டுக்கடலை 1 கிலோ
சோயா 1 கிலோ
தினை 1/2 கிலோ
கருப்பு உளுந்து 1/2 கிலோ
சம்பா கோதுமை 1/2 கிலோ
பார்லி 1/2 கிலோ
நிலக்கடலை 1/2 கிலோ
அவல் 1/2 கிலோ
ஜவ்வரிசி 1/2 கிலோ
வெள்ளை எள் 100 கிராம்
கசகசா 50 கிராம்
ஏலம் 50 கிராம்
முந்திரி 50 கிராம்
சாரப்பருப்பு 50 கிராம்
பாதாம் 50 கிராம்
ஓமம் 50 கிராம்
சுக்கு 50 கிராம்
பிஸ்தா 50 கிராம்
ஜாதிக்காய் 2
மாசிக்காய் 2
செய்முறை  :
ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.
சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.
பயன்கள்;
1.ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும்.
2. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும்.
3.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.
4.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.
5.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.
6.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.
7.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.
8.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.
குறிப்பு:
6 மாதம் கெடாது
1.சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது.
2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும்.

Main source:http://kkrwhatsapp.blogspot.ae

Monday, 13 February 2017

ஜாதிக்காய் சாகுபடி எப்படி செய்வது






ஜாதிக்காய் (Nutmeg) எனப்படுவது மிரிஸ்டிகா இனத்தைச் சேர்ந்த பல மரங்களில் ஒன்று. இந்தோனேசியாவின் மொலுக்காஸ் அல்லது ஸ்பைஸ் தீவுகளில் உள்ள பான்டா தீவுகளைப் பிறப்பிடமாகக்கொண்ட பசுமையான மரமான, மிரிஸ்டிகா ஃபிராக்ரன்ஸ் இவ்வினத்தைச் சேர்ந்த வணிக முக்கியத்துவம் வாய்ந்த மரமாகும். சாதிக்காய்ப்பழம், ஜாதிக்காய்இன்  மேல் ஓடு போன்றவற்றிலிருந்து பெறப்படும் இரண்டு நறுமணப் பொருள்களால் ஜாதிக்காய் மரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


சாதிக்காய் என்பது நடைமுறையில் மரத்தின் விதை என்பதுடன், முரட்டுத்தனமான முட்டை வடிவத்திலானதுடன்,20 to 30 mm (0.8 to 1 in) நீளமானதும்,15 to 18 mm (0.6 to 0.7 in) அகலமானதுமாக உலர்ந்த நிலையில் 5 and 10 g (0.2 and 0.4 oz) இடைப்பட்ட எடையிருக்கும், அதேசமயத்தில் மேல் ஓடு உலர்ந்து “சரிகைபோன்ற” மேலுறையும் அல்லது விதையின் சதைப்பற்றையும் கொண்டதாக இருக்கிறது. இது இரண்டு வேறுபட்ட உயிரினங்களுக்கு மூலாதாரமாக இருக்கும் ஒரே பழமாகும்.

இன்றியமையாத எண்ணெய்கள், வடித்தெடுக்கப்பட்ட எண்ணெய், பிசின் மற்றும் சாதிக்காய் வெண்ணெய் (கீழே பார்க்கவும்) உள்ளிட்ட மற்றும் பல வணிகப் பொருள்களை இந்த மரத்திலிருந்து உற்பத்தி செய்யமுடியும்.

ஜாதிக்கையின்  மேற்பரப்பை எளிமையாகத் தூளாக்க முடியும்.

கிரிநடாவில், “மோர்ன் டிலைஸ்” என்ற பழப்பாகை உருவாக்குவதற்கு, இதன் விதையின் உறை (பழம்/நெற்று) பயன்படுகிறது. இந்தோனேசியாவில், இந்தப் பழம் செலேய் புஃவா பலா என்ற பழப்பாகாகப் பயன்படுகிறது மேலும் நேர்த்தியான முறையில் துண்டம் செய்யப்பட்டு சர்க்கரையுடன் சேர்த்து சமைக்கப்படுவதுடன், படிகமாக்கப்பட்டு மேனிஷன் பலா (“ஜாதிக்காய்  இனிப்புகள்”) என்றழைக்கப்படும் நறுமணமுள்ள கற்கண்டைத் தயாரிப்பதற்குப் பயன்படுகிறது.

பொதுவான அல்லது நறுமணமுள்ள ஜாதிகையான, மிரிஸ்டிகா ஃபிராக்ரன்ஸ் இந்தோனேசியாவின் பான்டா தீவுகளைப் பிறப்பிடமாகக் கொண்டது. அதேபோன்று மலேசியாவின் பெனாங் தீவு மற்றும் கரீபியன் ஆகியவற்றிலும் முக்கியமாக கிரீனடாவிலும் வளர்கிறது. மேலும் இது இந்தியாவின் தெற்குப் பகுதியிலுள்ள கேரள மாநிலத்திலும் வளர்கிறது. நியூ குய்னியாவில் இருந்து பெறப்படும் பாபுவன் ஜாதிகையான எம். அர்ஜென்டியா மற்றும் இந்தியாவிலிருந்து பெறப்படும், இந்தியில் ஜெய்பால் என்றும் அழைக்கப்படுவதுமான மும்பை ஜாதிகையான  எம். மலபாரிகா, உள்ளிட்டவை ஜாதிக்காயின் மற்ற பிரிவுகளாகும். இவ்விரண்டும் எம். ஃபிராக்ரன்ஸ்ஸின் கலவையாகப் பயன்படுகிறது.

இந்திய சமையலில்
பயன்படுத்தப்படும் அனைத்து மசாலா பொருட்களும் மருத்துவ குணம் உள்ளவை. அதில் சில விசேஷ தன்மையுள்ள மருத்துவ பொருட்களும் உள்ளன. அதில் ஜாதிக்காய் மிக முக்கியமானது

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தி யாவில் இருந்து வந்துள் ளது. இது மன்னர்கள் கால த்தில் வயக்கராவாக பயன் படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒரு வித போதை யை ஏற்படுத்தி பாலுணர் வை தூண்டுகிறது. ஜாதிக் காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பி டலாம்.



ஒரு மரத்தில் பத்து கிலோ ஜாதிக்காய்:

 இதன் சாகுபடி குறித்து ரசூல் பேசியவை இங்கே பாடமாக இடம் பெறுகிறது....

இது நன்கு படர்ந்து வளரும் மரம். அதனால், 25 அடி இடைவெளி, கொடுக்க வேண்டும். இதற்க்கு மிதமான சீதோஷண நிலை தேவை. அனால், அதிக பனி கொட்டும் பகுதியில் வளராது ஈரக்காற்று வீசும் பகுதியில் இது வளரும். அதேபோல உப்புத்தண்ணீரில் வளர்ச்சி சரியாக இருக்காது.அதனால் உப்புத்தண்ணீர். நிலம் கொண்டிருப்பவர்கள் இதனை தவிர்த்துக்கொள்ளவும்  இது 3 அடி சதுரம்  3 அடி ஆழம் என்ற அளவில் குழியெடுத்து. அதில்,ஒரு கூடை அளவு ஊட்டமேற்றிய தொழுவுரத்தை கொட்டி, அதன் மேல் மண்ணால் குழியை மூட வேண்டும், பிறகு குழியின் நடுவில்,ஜாதிக்காய் செடியை நடவு செய்ய வேண்டும், இதற்க்கு பாசனத்தில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்,  தண்ணீர் கூடினாலும் சரி குறைந்தாலும் சரி.... இது ஆபத்தானது.

   முதல் ஆண்டில் ஒரு செடிக்கு தினமும் 10 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் 10 லிட்டர் தண்ணீரை அதிகப்படுத்த வேண்டும். ஐந்தாம் ஆண்டுக்கு மேல் ஒரு மரத்திற்கு தினமும் 50 லிட்டர் போதுமானது. ஜாதிக்காய் இயற்பிலேயே அதிக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கொண்டதாகும். இதனால் நோய் தாக்குதல் இருக்காது. ஆண்டிற்கு இரண்டு முறை அடியுரமாக 30 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுறமும் கொடுக்கவேண்டும்.
காய்க்கள் வெடிக்க தொடங்கும் பொது அறுவடை செய்யலாம்.அறுவடை செய்த காய்கறிகளில் இருந்து பத்திரியை தனியாகவும், காய்யை  தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.
பத்திரியை நிழலிலும், காய்யை வெய்யிலிலும் காய வைத்து சேமித்து தேவைக்கேற்ப  விற்பனை செய்யலாம்,7 ஆண்டுக்கு மேல் மகசூகு கொடுக்க தொடங்க வேண்டும்.10 வயதான ஒரு மரத்திலிருந்து சராசரியாக 10 கிலோ ஜாதிக்காயும் 2 கிலோ பத்திரியும் கிடைக்கும்


















Wednesday, 8 February 2017

துளசி (Ocimum tenuiflorum)

துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது.

இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும். துளசியின் மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்திருப்பது அவசியமானதாகும். மருத்துவம் முன்னேறும் இந்நாளில் பல நவீன கண்டுபிடிப்புகள் இருந்தாலும் நோய்களும் தொடர்ந்து மனிதனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
மூலிகை செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்ரிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு.
எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

நாம் நினைப்பதுப் போல நோய் நிவாரணி மட்டுமல்ல.. சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் அற்புத பணியை செய்கிறது. இந்த பணியை பெரும்பாலான தாவரங்கள் செய்தாலும், துளசிக்கும் மற்ற தாவரங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. துளசியிலுள்ள மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களால் வளிமண்டலத்திலுள்ள புகைக் கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. அதனால் சுத்தமான காற்று கிடைக்கிறது. துளசி, அதிகம் உள்ள இடங்களில் கொசுக்கள் வராது.

இதற்க்கு வேறு பெயர்கள் உண்டு துழாய், (நீல நிற துளசி,. இதனை கிருஷ்ண துளசி, எனவும் கூறுவர்), துளவம், மாலலங்கல், ஸ்ரீதுளசி, ராமதுளசி

பின்வருவன இதன் வகைகள் ஆவண, நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்), காடு துளசி

வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 – 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகிஇல் இது வளரும் தன்மை கொண்டது

எந்த நோயாக இருந்தாலும் கவலைப்படாமல் துளசிநீர் மட்டும் குடித்து வாருங்கள். அனைத்து நோய்களின் தாக்கமும் குறைந்து விடும்.

துளசி நீர் எப்படி செய்வது?

முதலில் சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொண்டு அதனுள் சிறிதளவு சுத்தமான தண்ணீர் விட்டு ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும்.

இதை எட்டு மணிநேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் துளசி நீரை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், அல்லது இரண்டு டம்ளரோ குடிக்க வேண்டும்.

இவ்வாறு 48 நாட்கள் பருகினால் 448 வகையான நோய்கள் குணமாகும். அத்துடன் தோல் சுருக்கம் மறையும். நரம்புகள் பலப்படும். பார்வை குணமடையும். இதன் அர்த்தம் யாதெனில் நாம் இளமையுடன் என்றென்றும் வாழலாம்.

மேலும், உடலின் எந்த பகுதியில் புற்று நோய் இருந்தாலும் இந்த துளசி நீர் அருந்தினல் போதும் பூரணமாகக் குணம் ஆகும்.

Thursday, 2 February 2017

முருங்கை பூ குழம்பு

முருங்கை பூ :

               பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூக்களின் பயன்களைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் முருங்கைப் பூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்வோம்.

முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர்.

முருங்கை மரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணம்  நிறைந்துள்ளது. இதில் பூக்களின் மருத்துவ பண்பு கள் அலாதியா னது. உடலின் வெப்பத்தை தணித்து குளிர்ச்சி தரக் கூடிய சக்தி முரு ங்கைப் பூக்களுக்கு உண்டு. கண்களை பாது காக்கும், பித்த மயக்கம் போக்கும். நல்ல தாது பலம் கொடுக்கும். மொத்த த்தில் முருங்கைப் பூவானது பிணி தீர்க்கும் மருந் தாகப் பயன் படுகிறது.

முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.

இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.

இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.
முருங்கைப் பூ எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு பொருள். இது அரிய மருந்தாகவும் பயன்படுகிறது. குறிப்பாக ஆண்கள், ஆண்மை அதிகரிக்கும் தாதுவை இது அதிகளவில் கொண்டுள்ளது. இப்படிப் பட்ட முருங்கைப் பூவில் என்ன நலன்கள் இருக்கின்றது என்பதைப் காணலாம்… முருங்கை மரத்தின் இலை, பட்டை, வேர், காய் அனைத்தையுமே ஒவ்வொரு வகையில் மருத்துவச்சிறப்பு பெற்றுத் திகழ்கின்றன.

முருங்கை பூ குழம்பு செய்முறை விளக்கம் :


தேவையானவைகள் :
உலர்ந்த முருங்கை பூ - 1 கை பிடி
இஞ்சி- 30 கிராம்
பூண்டு- 1 பல்
பச்சை பயிறு- 30 கிராம்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -2 சிட்டிகை
பெருங்காயம் -1 சிட்டிகை
கொத்தமல்லி விதை -2 தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
நெய் - 4 தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

பச்சை பயிறு அதை மீதமான சூட்டில் மணம்  வரும் வரை வறுக்கவும்.
பின்னர் தோல் நீக்கிய இஞ்சியை ,பூண்டு,சீரகம்,மிளகு,மஞ்சள் தூள்,பெருங்காயம்,உப்பு,கொத்தமல்லி விதை,வறுத்த பச்சை  பயிறு என அனைத்தையும் அரைத்து தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பச்சை வாசனை போன பிறகு முருங்கை பூவை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் குழம்பில் சேர்த்து கொதிக்க விடவும். தேவையெனில் சிறிதளவு எலுமிச்சை சாரும் வெள்ளமும் சேர்க்கலாம். உடல் வலிமை தரும் முருங்கைக் குழம்பு ரெடி.

இதில் இரும்புச்சத்தும், புரதச்சத்தும், நிறைந்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி தரும். இதனால் தலை வலி, முடி உதிர்வு சரியாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் உணவு இந்த முருங்கை பூ குழம்பு 

Wednesday, 1 February 2017

பழங்கள் சாப்பிடும் முறை

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;

இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! 

"புற்றுநோயைக் குணப்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று!!
புற்றுநோயைக் குணப்படுத்தும் எனது சிகிச்சைமுறைகளில், சமீபகால வெற்றிவிகிதம் 80%.

புற்றுநோயாளிகள் மரணத்தைத் தழுவக்கூடாது.புற்றுநோயாளிக்கான சிகிச்சை ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது- அது நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில் உள்ளது.

நீங்கள் நம்புவீர்களோ இல்லியோ, இதுவரை வழக்கமான சிகிச்சை முறையில் இறந்த நூற்றுக்கும் அதிகமான புற்று நோயாளிகளுக்கான நான் வருத்தப்படுகிறேன்.

பழங்கள் சாப்பிடும் முறை;;

எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று.

நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை 'எப்படி' அதுவும் '*எப்போது'* சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன?

பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!

பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!

பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும்
வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!

பழங்கள் ஒரு முக்கியமான உணவு;

சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.

பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட
'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.

இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.

பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.

அதனால் தயவு செய்து பழங்களை  வெறும் வயிற்றில் அல்லது  உணவுக்கு முன் சாப்பிடுங்கள்.!!

பலர் புகார் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.

""ஒவ்வொரு முறை நான் தர்ப்பூசணி பழம்( Watermelon) எடுக்கும்போதெல்லாம் எனக்கு ஏப்பம் வருகிறது, எப்போது நான் துரியன் பழம் சாப்பிட்டாலும் வயிறு ஊதிக் கொள்கிறது, எப்போது நான் வாழைப்பழம் சாப்பிட்டாலும், அவசரமாக கழிவறைக்கு ஓட வேண்டியிருக்கிறது, இன்னும் பல .. .. . .

உண்மையில் நீங்கள் வெறும் வயிற்றில் பழம் எடுத்துக் கொண்டால், இந்த மாதிரி நிலைமை தோன்றாது!

உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால் , வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!!

நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை யெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால்,
  நடக்காமல் தடுக்கப்படும்


சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு, அழகு,நீண்ட ஆயுள்,உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடை இவற்றைப் பெறும் ரகசியம்  கிடைத்து விடும்.

3)நீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது,  புதிதான பழச்சாறுகளையே அருந்துங்கள். டின், பாக்கட்,மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள் வேண்டாம்.

சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம்.

பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள்.ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது.

சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன.உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது.

ஆனால் பழச்சாறு சாறு அருந்துவதை விட , பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும்.ஏனென்றால், நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பவும்.

உங்கள் உடல் உறுப்பக்களைச் சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும். ஒரு 3- நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.

அந்த 3 நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த டயட்டின் முடிவு நீங்களே ஆச்சரியப் படும்படி, நீங்கள் மிகவும் அழகாய், வனப்புடன் தோற்றமளிப்பதாய் உங்கள் ஃபிரண்ட்ஸ் கூறும்போது உணர்வீர்கள்.

கிவி பழம்;


இது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம்.
இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம்.
ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.

ஆப்பிள்;



































ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே!

ஆப்பிளில் விட்டமின்-சி சத்து குறைவாக இருப்பினும்,அதில் உள்ள antioxidants ,flavonoids போன்றவை இந்த விட்டமின் - சி சத்துக்களை மேம்படுத்துவதால், பெருங்குடல் புற்று நோய்,மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது!

ஸ்ட்ராபெர்ரி ;

பாதுகாப்பு தரும் பழம்.
இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால்,இது நம் உடலில் சுதந்திரமாய் கட்டுப்பாடற்று பல்கிப் பெருகும் அடிப்படைக் கூறுகளால் ( free radicals) இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது.

ஆரஞ்சு;

இனிப்பான மருந்து.

ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும்.கொழுப்பைக் குறைக்க உதவும்.மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும்.
அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது.

தர்பூசணி;


மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான்.
92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது.
மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால்,அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் இது lycopene. என்னும் புற்று நோயை எதிர்த்துப் போராடும் ஒரு oxidant இன் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.
தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி , பொட்டாசியம் ஆகியவை.

கொய்யா& பப்பாளி



இவை இரண்டுமே விட்டமின் - சி நிறைந்தது.உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத் தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை.
கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

பப்பாளிப்பழம்










































Carotene சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது
உணவிற்குப் பிறகு குளிர்ந்த தண்ணீர் அல்லது பானங்கள் குடிப்பது புற்று நோய்.