Saturday, 29 March 2025

காய்கறி பயிர்களை நடவு செய்ய

 ஒவ்வொரு மாதமும நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம் என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளலாமா?


கத்தரி 

நடவு செய்யும் மாதம் - மே, ஜுன் 

விதையளவு ஒரு ஏக்கருக்கு 140-160 கிராம் 

இடைவெளி – 1அடி

அறுவடைசெய்யும் நாள் - 150 முதல் 160 நாட்கள்



தக்காளி 

நடவு செய்யும் மாதம் - மே, ஜுன் நவம்பர் - ஜனவரி – மார்ச்

விதையளவு ஒரு ஏக்கருக்கு 140-160 கிராம் 

இடைவெளி – 1 அடி

அறுவடைசெய்யும் நாள் - 100 முதல் 135 நாட்கள்



புடலை

நடவு செய்யும் மாதம் ஜு{ன், ஜுலை- டிசம்;பர் - ஜனவரி 

விதையளவு ஒரு ஏக்கருக்கு 600 கிராம் 

இடைவெளி – இடைவெளி பாருக்குபார் 1.5அடி செடிக்கு செடி 1அடி 

அறுவடைசெய்யும் நாள் - 135-145 நாட்கள்



பீர்க்கை

நடவு செய்யும் மாதம் ஜு{ன், ஜுலை- டிசம்;பர் - ஜனவரி 

விதையளவு ஒரு ஏக்கருக்கு 600 கிராம் 

இடைவெளி பாருக்குபார் 1.5அடி செடிக்கு செடி 1அடி 

அறுவடைசெய்யும் நாள் - 125- நாட்கள்



பாகல்

நடவு செய்யும் மாதம் ஜு{லை- ஆகஸ்ட் , ஜனவரி - பிப்ரவரி

விதையளவு ஒரு ஏக்கருக்கு 1கிலோ 

இடைவெளி வரிவைக்கு வரிசை 8 அடி செடிக்கு செடி 1 அடி

அறுவடைசெய்யும் நாள் - 150- நாட்கள்



வெண்டை

நடவு செய்யும் மாதம் மார்ச் - ஜுன்; , ஜீன் - செப்டம்பர்

விதையளவு ஒரு ஏக்கருக்கு 2 கிலோ

இடைவெளி பாருக்குபார் 1.5அடி செடிக்கு செடி 1அடி 

அறுவடைசெய்யும் நாள் 45 - 90 நாட்கள்



மிளகாய்

நடவு செய்யும் மாதம் ஜு{ன், ஜுலை- டிசம்;பர் - ஜனவரி 

விதையளவு ஒரு ஏக்கருக்கு 400 கிராம் 

இடைவெளி –30 செ.மீ

அறுவடைசெய்யும் நாள் - 200 நாட்கள்



செடிமுருங்கை

நடவு செய்யும் மாதம் அக்டோபர்- நவம்பர், ஜு{ன், ஜுலை 

விதையளவு ஒரு ஏக்கருக்கு 200 கிராம் 

இடைவெளி பாருக்குபார் 8அடி செடிக்கு செடி 2அடி 

அறுவடைசெய்யும் நாள் - 200 நாட்கள்



வெங்காயம்

ரகம் கோ 4

நடவு செய்யும் மாதம் வைகாசி, புரட்டாசி, மார்கழி 

விதையளவு ஒரு ஏக்கருக்கு 500 கிராம் 

இடைவெளி –15 செ.மீ

அறுவடைசெய்யும் நாள் - 200 நாட்கள்

பெப்பர் ரைஸ்

பெப்பர் ரைஸ்.....


தேவையான பொருள்கள்

சாதம் - ஒரு கப்

மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி

கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி

உப்பு - கால் தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - தாளிக்க

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை

ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.


அதன் பிறகு கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.


கடலைப்பருப்பு பொன்னிறமானதும் அதனுடன் மிளகுத் தூளை சேர்த்து வாசம் வரும் வரை வதக்கவும்.


மிளகு வாசனை வந்ததும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.


இந்த கலவையை சாதத்துடன் சேர்க்கவும்.பெப்பர் கலவை சாதத்துடன் நன்கு ஒன்றாக சேரும்படி கிளறி விடவும்.


இறுதியில் கொத்தமல்லி தழையை மேலே தூவவும்.சூடான, சுவையான பெப்பர் ரைஸ் தயார்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁💖💖💖💖

ஆனியன் ரைஸ்



ஆனியன் ரைஸ்....


தேவையான பொருள்கள்

அரிசி - ஒரு ஆழாக்கு (சாதமாக வடித்துக் கொள்ளவும்)

வெங்காயம் - 2

கொத்தமல்லித்தழை - 2 கொத்து

தனி மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி

கரம்மசாலாத் தூள் - அரை மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி

உப்பு - 1 1/4 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி

பச்சைமிளகாய் - 4

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு - 4

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

நெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை

சாதத்தை வடித்து உதிர் உதிராக இருக்கும்படி கிளறி வைத்துக் கொள்ளவும்.


பச்சைமிளகாயை நீளவாக்கிலும், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு வெடிக்க விடவும்.


அதில் நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.


வெங்காயம் அரைப்பதம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.


அதில் கரம் மசாலா தூள், தனி மிளகாய் தூள் போட்டு நன்கு கிளறி விடவும்.


நன்கு மசாலாப் போல் வந்ததும் உப்பு சேர்த்து ஒரு முறை கிளறி விடவும்.


அதில் வடித்த உதிரியான சாதத்தை போட்டு கிளறி விடவும். மசாலாவுடன் சாதம் ஒன்றாக சேர்ந்ததும் இறக்கி வைக்கவும்.


இறக்கி வைத்து சாதத்தின் மேல் நெய் ஊற்றி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.


எளிதில் செய்து விடக்கூடிய சுவையான வெங்காயம் சாதம் தயார்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁😁👍👍👍👍