ஆட்டுக்கால் சூப்,செய்முறை விளக்கம்

ஆட்டுக்கால் சூப்


benefits

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்களில் ஆட்டுக்கால் சூப்பும்  ஒன்று
வாருங்கள் நாம் இப்போது அதை பற்றி செய்முறை விளக்கத்தோடு பார்க்கலாம்

விஞ்ஞானிகள் 50 முதல் 90 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள்.
இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தன. இவர்கள் உடல் சிறப்பாக இயங்கியது.
 பழைய விஷயங்களைக்கூட இவர்கள் சரியாக ஞாபகப்படுத்தி சொன்னார்கள்.

அதில் அவர்கள்  பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் அநியாயத்திற்கு மறதிக்கு பெயர் போனவர்களாக இருந்தார்கள்
பஸ்ஸில் ஏறிய பிறகு சந்தேகத்துடன் பயணிப்பார்கள். மனக்குழப்பம் தெளிவின்மையும் இவர்களிடம் அதிகம்
பல விஷயங்கள் இவர்களது ஞாபகத்திற்கு வரவில்லை. வீட்டைச் சரியாகப் பூட்டினோமோ?என்றும் அவர்கள் பயணிப்பார்கள்

விஞ்ஞானிகளால் பி வைட்டமின்களுக்கும் ஞாபக சக்திக்கும் என்ன தொடர்பு என்று கண்டு பிடிக்க முடியவில்லை
இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.

மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு தடையின்றி நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் படு சுறுசுறுப்பாக இயங்கும்.
‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு
தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர்.

இதில் ஆட்டுக்கால் சூப்பும் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது

இதை ஜலதோஷ நேரத்தில் கோழி சூப் ஆட்டுக்கால் சூப் அல்லது சிறிய துண்டு கோழி இறைச்சி சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இது உண்மையா?
அறிவியல் ரீதியாக உண்மை. இவைகளில் உள்ள துத்தநாக உப்பு நன்மை செய்கிறது.

கால், மூட்டு நோவு உள்ளவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து குடிக்கலாம். இதனால் கால்களுக்கு வலிவு கிடைக்கும்.

climate மாறிப்போறதால எல்லாருக்கும் சளி இருமல் வரும் அப்படி வந்தால் ஆட்டுக்கால் சூப்பு வச்சு குடிச்சால் இருமல் மட்டும் இல்ல உடம்பின் வலிகளும் பறந்து பொய் விடும்

 அதன் செய்முறை விளக்கம்


1.ஆட்டுக்கால் - 250 கிராம்
2.மிளகு - 2 கரண்டி
3.தனியா - 2 மேசைக்கரண்டி
4.வெங்காயம் - 2
5.சீரகம் - 2 தேக்கரண்டி
6.காய்ந்த மிளகாய் - 2
7.தக்காளி - 2
8.இஞ்சி - 2 அங்குல துண்டு
9.பூண்டு பல் - 3
10.மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
11.உப்பு - தேவையான அளவு
12.மிளகு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
13.கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை விளக்கம் :


1.தனியா, மிளகு, சீரகம் மூன்றையும் தனித்தனியே எண்ணெய் இல்லாமல் வறுத்து எல்லாவற்றையும்
ஒன்றாக சேர்த்து பொடித்து வைக்கவும்.

2.காய்ந்த மிளகாய், வெங்காயம் ஒன்று, இஞ்சி, பூண்டு, தக்காளி ஒன்று, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை
ஒன்றாக கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து வைக்கவும்.

3.முதலில் ஆடுக்காலை தீயில் போட்டு சுட்டெடுக்கவும். கடையிலே அப்படி செய்தும் விற்பார்கள். அப்படி செய்வதால் அதிலுள்ள
ரோமம் எல்லாம் உதிர்ந்துவிடும். நன்கு சுத்தம் செய்து போதிய அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 10-15 விசில் வரும் வரை வேக விடவும்.

4.எண்ணெயை காய வைத்து மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

5.பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

6.வெங்காயம் சிறிதளவு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். அதிகம் குழைய தேவையில்லை.

7.அதனால் சிறிதளவு வெந்ததும் வேக வைத்துள்ள ஆட்டுக்கால் மற்றும் தண்ணீரை இதனுடன் சேர்க்கவும். உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும்.

8.இப்பொழுது அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் கலவையை சேர்த்து தீயை குறைத்து வைக்கவும்.

9.பதினைந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். கொத்தமல்லி தூவினால் சுவையான ஆட்டுக்கால் சூப் ரெடி. இதை உணவிற்கு முன்னர் ஸ்டார்ட்டர் ஆக பரிமாறலாம்.

No comments:

Post a Comment