Tuesday, 5 November 2019

கண் சுற்றி கருவளையம் (Periocular Melanosis)

கண் சுற்றி கருவளையம் (Periocular Melanosis) 

கண்ணை சுற்றி வரும் கருவளையத்திற்கு பல காரணங்கள் இருக்கின்றன.



காரணங்கள்: 



  • ஹார்மோன் பிரச்சனைகளால் வருவது,
  • சிந்தனை மற்றும் கடின உழைப்பு,
  • வயோதிகம்.



மருத்துவமுறைகள்: 



  • ஹைட்ரோகுய்னான் கலந்த களிம்பு இரவு நேரங்களில் பயன்படுத்த வேண்டும்  
  • கண்களுக்கு அதிகப்படியான சிரமம் கொடுக்காமல் இருக்க வேண்டும்   
  • பழங்கள் ஒட்டிக் கொள்வது பயன்தராது அந்த பழத்தை உட்கொள்வது சருமத்திற்கு நல்லது   



கண் கருவளையம் நீங்க இலகுவான வழி


சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த பிரச்சினை தான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரிக்காய் உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும்.

ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.

கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும்.தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.

அல்லது வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால் கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.

உணவில் அதிகளவு காய்கறிகளை சேர்த்து கொள்ளவேண்டும்.தினமும் குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

வெற்றிலை போட பயன்படுத்தும் சுண்ணாம்பை ஒரு பட்டாணி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கப் குளிர்ந்த நீரில் கரைத்து சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அந்த சுண்ணாம்பு நீரானது தெளிந்தவுடன் அதில் இருந்து 2 ஸ்பூன் தெளிந்த தண்ணீரை வேறொரு கிண்ணத்தில் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.பிரித்தெடுத்த தண்ணீரின் சிறிது எலுமிச்சைச் சாறும் பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து இரண்டையும் ஒன்றாக கலந்து அதை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்ணை சுற்றி பூசுங்கள். கண்விழியில் பட்டுவிடக்கூடாது.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் கண் கருவளையம் மறைந்து விடும். 

main source:   http://tamilhippoo.blogspot.com/2014/06/blog-post_7.html

No comments:

Post a Comment