Tuesday, 19 November 2019

முடி உதிர்தல் Hair fall



முடி உதிர்தல் 

Hair fall 






  • ஒரு ஆணோ பெண்ணோ அவர்களுடைய அழகு முடியில் தான் இருக்கிறது ,
  • சராசரியாக தலையில் ஒரு மில்லியன் முடி இருக்கிறது, 
  • முடி நம் பிறக்கும் போது பூனை முடியாகவும்,பின் வளர வளர கருத்த தடித்த முடியாகவும் மாறுகிறது, 
  • தலையில் முடி 80 சதவீதம் வளர்ந்து கொண்டே இருக்கிறது 15 சதவீதம் தூங்கிக்கொண்டே இருக்கிறது 5 சதவீதம் உதிர்கிறது ,
  •  அதாவது ஒரு முடி தொடர்ந்து 3 வருடம் வளர்கிறது மூன்று மாதம் தூங்குகிறது பின்பு உதிர்கிறது 
  • இந்த 5 சதவீதம் முடி உதிர்கிறது என்பது ஒரு நாளைக்கு 50 முதல் 70 முடியாகும் , 
  • பழைய கழிதலும் புதியன புகுதலும் விழுகிற 5 சதவீதம் முடியும் காலப்போக்கில் அது வளர்ந்துவிடும் ,
  • முடி உதிர கூடாது என்று நினைத்தாள் நாம் கரடி குட்டி போல் ஆகிவிடும் ஏனெனில் அதற்க்கு முடி சுழற்சி இல்லை வளர்ந்து கொண்டே இருக்கும் ,
  • 50 முடி 70 முடி உதிர்ந்து வளரக்கூடிய முடி வளராமல் போனால் அதுதான் முடி உதிர்தல் ,


ஆண்களுக்கு முடி உதிர்தல் காரணம் :


  • தலை பொடுகு : பொடுகினால்  வருகின்ற முடி உதிர்தல் நிரந்தரமானது இல்லை, 
  • டைபாய்டு காய்ச்சல் போன்ற திலிருந்து அதற்க்கு பிறகு வரும் முடி உதிர்தல் நிரந்தரமானது அல்ல ,
  • ஆன்ட்ரோ ஜெனிடிக் அலோபேசியா (androgenetic alopecia ) இது நிரந்தரமான முடி உதிர்தல், 



ஆன்ட்ரோ ஜெனிடிக் அலோபேசியா androgenetic alopecia :



  • ஆன்ட்ரஜன் என்ற ஹார்மோனின் ஒரு உபபொருள் கூடுதலாக இருந்தால் முடியின் வேரை அழிக்கும் தன்மை கொண்டது,,
  • பரம்பரை வழுக்கை என்பது வழுக்கை பரம்பரை அல்ல. ஆன்ட்ரஜன் ஹார்மோன் கூடுதலாக இருப்பது தான் காரணம் ,
  • இந்த ஹார்மோனை மாத்திரைகள் மூலம் 100 சதவீதம் குணப்படுத்தலாம், 
  • அப்பாவுக்கு வழுக்கை அதனால் எனக்கும் வரும் என்பது அறிவுடைமை ஆகாது, 



மருத்துவமுறைகள்:


  • பொடுகினால் வரும் உதிர்வதுக்கு கீட்டகோனசொல்   ஷாம்பூ (Ketoconazole shampoo)வாரம் இருமுறை என வாழ்நாள் முழுதும் பயன்படுத்த வேண்டும்  
  • காய்ச்சலுக்கு பின்னால் வரும் முடி உதிர்தலுக்கு சத்தான உணவு வகைகள் சாப்பிடவேண்டும் (பேரிச்சம்பழம் பருப்பு வகைகள் புரோட்டீன் மாவு மற்றும் இரும்பு சத்து மாத்திரைகள் )
  • ஆன்ட்ரோ ஜெனிடிக் அலோபேசியாவிற்கு  பினாஷ்ட்ரய்டு 1 மி. கி (finasteride 1 M.G) தினமும் இரவு என இரண்டு வருடங்களுக்கு தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்
  • இந்த மாத்திரை பற்றி ஆண்மை குறைந்து விடும் என்று ஒரு தவறான கருத்து இருக்கிறது 99 சதவீதம் அப்படி ஆவதில்லை 
  • மினாக்சிடில் 5 சதவீதம் (Minoxidil 5 % Solution) தொடர்ந்து பயன்படுத்தவேண்டும் ,

    பெண்களுக்கு முடி உதிர்தல் காரணம் :


    • தலையில் வரும் புண் பொடுகு இதனால் முடி உதிரும் இது நிரந்தரமானது அல்ல ,
    • இரும்பு புரதம் வைட்டமின் போன்ற சத்து குறைவினால் முடி உதிரும் இது நிரந்தரம் அல்ல ,
    • தைராய்டு சுரப்பி குறைவினால் முடி உதிரும் இது நாளாக நாளாக நிரந்தர முடி உதிர்தல் ஆகி விடும் ,
    • உணவு கட்டுப்பாடு கூடுதலாக உணவு கட்டுப்பாடு மூலம் வரும் முடி உதிர்வு ,
    • லுப்பஸ் நோய்(S.L.E) போன்ற தோல் நோய், 
    • முடியின் வளர்ச்சியிலேயே வரும் சில பிரச்சனைகள் 
    • ஆண்களை போல் பெண்களுக்கும் வரும் ஆன்ட்ரஜன் ஹார்மோன் மூலம் வரும் முடி உதிர்தல்,
    • நீண்டநாள் காய்ச்சல், 



    மருத்துவமுறைகள்:


    • தினமும் தலைக்கு குளிக்க வேண்டும் 
    • தைராய்டு மூலம் வரும் உதிர்தலுக்கு அதற்குரிய மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் 
    • பரம்பரையில் ஆண்கள் போல் பெண்களுக்கு வரும் வழுக்கைக்கு ஆண்களுக்கு கொடுப்பது போல் பினாஷ்ட்ரய்டு 1 மி. கி (finasteride 1 M.G) மினாக்சிடில் 2 சதவீதம் (Minoxidil 2 % Solution) தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் 
    • எப்போது நிறுத்த வேண்டும் என்று மருத்துவர் முடிவு செய்து நிறுத்துவார், 
    • முடி வளர்ச்சியிலேயே வரும் பிரச்னைகளுக்கு முடி பரிசோதனை (Hair treatment )செய்து என்ன காரணம் என கண்டு பிடித்து அதற்க்கு ஏற்றார் போல் மருத்துவம் செய்ய வேண்டும்,

    • நல்ல உணவு பக்கம் சத்தான உணவுகள் ( முட்டை பேரிச்சம்பழம் கருவேப்பிலை பருப்பு வகைகள் புரதமாவு இரும்பு சத்து மாத்திரைகள் )



    நவீன சிகிச்சை முறைகள் :

    தலை வழுக்கை அறுவை சிகிச்சை 



    கடவுளுடைய படைப்பில் ஒரு மனிதனுக்கு எவ்வாறு இரண்டு கிட்னி இரண்டு சுவாசப்பை என அமைந்துள்ளதோ அதே போல் இரண்டு வகை முடிகள் இருக்கின்றன 


    • ஒரு வகை ஆன்ட்ரஜன்  ஹார்மோனால் பாதிக்க கூடிய தன்மை கொண்டது அதாவது முன்னந்தலை முடி, 
    • இன்னொரு வகை ஆன்ட்ரஜன்  ஹார்மோனால் பாதிக்க  முடியாத வகை அதாவது பின்னந்தலை முடி, 
    • ஆகையால் பின்னந்தலை முடியை புடிங்கி முன்னந்தலையில் நாற்று நடுவது போல் நடுவதுதான் தலை வழுக்கை அறுவை சிகிச்சை முறையாகும் இவை இரண்டு வகை படும், 

    பன்ச் கிராஃபிட்டிங் (Punch Grafting),
    சிங்கிள் ஹேர் கிராஃபிட்டிங் (Single Hair Grafting),



    இச்சிகிச்சை மூலம் எந்த பக்க விளைவும் கிடையாது, 



    • தலை வழுக்கை அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் நோய்க்குரிய  பினாஷ்ட்ரய்டு 1 மி. கி (finasteride 1 M.G) மினாக்சிடில் 5 சதவீதம் (Minoxidil 5 % Solution) மாத்திரையும் இரண்டு வருடம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் மேல் குறிப்பிட்ட இரண்டையும் தொடர்ந்து பயன்படுத்தவில்லை என்றால் அறுவை சிகிச்சை மூலம் வளர கூடிய முடி வளராது, 


    செயற்கை முடி நடுதல் :




    • பின்னந்தலையில் முடி இல்லை என்றால் அப்போது நாம் செயற்கை முடித்தான் நட வேண்டும் ,
    • இது ஒரு பிளாஸ்டிக் முடியாகும் ,
    • இது முதலில் ஒரு முடி அல்லது இரண்டு முடி நட்டு ஒவ்வாமை வருகிறதா என்று பார்த்து அதற்க்கு பிறகுதான் இதை செய்ய வேண்டும், 
    • இந்த பிளாஸ்டிக் முடி 3 முதல் 5 வருடம் தான் நீடிக்கும், 
    • இதை பாதுகாக்கும் வழி முறையும் கடுமையானது, 




           source : DR G.R. Ratnavel  

    No comments:

    Post a Comment